இசைஞானி இளையராஜா ஜாதகம் Ilayaraja Horoscope in Tamil கணிப்பு – இசையில் பெருஞானம் பெற்றவராக, திரையிசை
இசையில் பெருஞானம் பெற்றவராக வாழ்பவரும், திரையிசையில் இசைகோர்ப்புக்கான உயரிய வித்தகம் பெற்றவரும் மேலும் ஈடுஇணையில்லாத கலைஞராக உயர்ந்து இருப்பவரும் ஆன இசைஞானி இளையராஜா ஜாதகம் அதன் சிறப்புகளை தான் பார்க்க உள்ளோம், இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாறு தராளமாக இணையத்தில் கிடைக்கின்றபடியால் அவரின் வாழ்க்கை வரலாறு சம்பவங்களுக்குள் அதிகமாக போகாமல் அவரின் ஜாதக சிறப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம், இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் எனக்கும் ஒரு விடயத்தில் ஒற்றுமை உண்டு அது என்னவென்றால் எனக்கு குருவாக அமைந்த ரமண மகரிஷியே அவருக்கும் குருவாக அமைந்துள்ளார.
இசைஞானி இளையராஜா அவர்களின் தந்தையே ஜோதிட கலை அறிந்தவர் தான் இது இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்தே தெரிய வருகிறது அதாவது இவரது அப்பா, அம்மாவிடம் இவ்வாறு கூறியிருக்கிறார் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகு தான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார். அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார். பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய் விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார அவரது அப்பா அவர்கள் சொன்னதுபோலவே இளையராஜா அவர்களின் 9-வது வயதில் அவரது அப்பா காலமாகி விட்டார்.
இசைஞானி இளையராஜா அவர்களின் தந்தை சீக்கிரமே
இருப்பதற்கு தந்தை ஸ்தானாதிபதி சனி மற்றும் மாரகாதிபதி சந்திரன் சேர்க்கையும் உடன்
பகை மற்றும் அக்னி சூரியன் சேர்ந்து அமைந்து அஸ்தங்க தோஷம் உண்டாக்கியதன் காரணமாக
தந்தை ஸ்தானாதிபதியும் பாதகாதிபதியும் ஆன சனியின் சாரம் பெற்ற செவ்வாயின் திசையில்
சூரியன் புத்தியில் இளையராஜா அவர்களின் தந்தை காலமானார்.... மீது விடியோவில் பார்க்க
0 Response to "இசைஞானி இளையராஜா ஜாதகம் Ilayaraja Horoscope in Tamil கணிப்பு – இசையில் பெருஞானம் பெற்றவராக, திரையிசை"
கருத்துரையிடுக