மேஷ, ரிஷப, மிதுன லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோர சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரக கிரகங்கள்
மேஷ லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...
மேஷ லக்னத்தில் தோன்றியவர்களுக்கு ஒ பக்குவ புருஷர்களே கேளுங்கள் செவ்வாய் 8 வது வீட்டின் அதிபதியாக இருந்தாலும் கூட அவர் லக்னாதிபதியா ஆவதால் அவர் சுப கிரகங்களுக்கு உதவியாக இருப்பார். சனி, புதன் மற்றும் சுக்கிரன் பாப பலனை தரக்கூடியவர்கள், வியாழன் மற்றும் சூரியன் சாதக யோக பலனை தரக்கூடியவர்கள், குரு சனி இணைந்திருப்பது சுப விளைவுகளை ஏற்படுத்தாது (இவர்கள் ஒரு கோணத்திற்கும் மற்றும் ஒரு கேந்திரத்திற்கும் அதிபதியாக இருந்தாலும் கூட), அதே போல குரு கிரகம் புதன் மற்றும் சுக்கிரன் உடன் சேர்ந்தால் அசுப விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேஷ லக்னத்தில் தோன்றியவர்களுக்கு சுக்கிரன் நேரடியாக மரணத்திற்குக் காரணமான கிரகம் ஆகும். பாதக கிரகமான சனி சுக்கிரனுடன் தொடர்பு கொண்டால் சனியும் மாரகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
ரிஷப லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...
ரிஷப லக்னத்தில் தோன்றியவர்களுக்கு குரு, சுக்கிரன் மற்றும் சந்திரன் பாப பலனை தரக்கூடியவர்கள், சனியும் சூரியனும் சுப யோக பலனை தரக்கூடியவர்கள், சனி ராஜயோகத்தை ஏற்படுத்தும் கிரகம், புதன் ஓரளவு அசுபம் தரும் கிரகம் ஆகும். குரு, சுக்கிரன் மற்றும் சந்திரன் கிரகங்களுடன் செவ்வாய் தொடர்பு கொண்டாலும் மாரகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மிதுன லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...
மிதுன லக்னத்தில் தோன்றியவர்களுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சூரியன் பாப பலனை தரக்கூடியவர்கள், அதே நேரத்தில் சுக்கிரன் மட்டுமே சாதகமான கிரகம். இந்த லக்னத்திற்கு குரு சனி இணைந்திருப்பது சுப விளைவுகளை ஏற்படுத்தாது, சந்திரன் நேரடியாக மரணத்திற்குக் காரணமான கிரகம் தான் இருந்தாலும் சந்திரன் யாருடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை பொறுத்தது
0 Response to "மேஷ, ரிஷப, மிதுன லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோர சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரக கிரகங்கள்"
கருத்துரையிடுக