துலாம், விருச்சிகம், தனுசு லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரக..
துலாம் லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...
துலாம் லக்னத்தில் தோன்றியவர்களுக்கு குரு, சூரியன் மற்றும் செவ்வாய் ஆகியவை பாப பலனை தரக்கூடியவர்கள். சுக்கிரன் மற்றும் சனி சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும், சந்திரனும் புதனும் ராஜயோகத்தை ஏற்படுத்தும் கிரகங்கள். செவ்வாய் கிரகம் மரணத்திற்குக் காரணமான கிரகம் ஆகும். குரு, சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களும் கூட மாரகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ள கிரகங்கள் தான். இந்த விஷயத்தில் சுக்கிரன் நடுநிலை வகிக்க கூடிய கிரகம் ஆகும். (தேவைபட்டால்…)
விருச்சிகம் லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...
விருச்சிகம் லக்னத்தில் தோன்றியவர்களுக்கு சுக்கிரன், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் பாப பலனை தரக்கூடியவர்கள் ஆகும். வியாழன் மற்றும் சந்திரன் சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும், சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் ராஜயோகத்தை ஏற்படுத்தும் கிரகங்கள். செவ்வாய் நடுநிலை வகிக்க கூடிய கிரகம் ஆகும். சுக்கிரன் மற்றும் பிற பாப பலனை தரக்கூடிய கிரகங்கள் சம்பந்தபடும் போது மரணத்திற்குக் காரணமான நிலை ஏற்படுகிறது.
தனுசு லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...
தனுசு லக்னத்தில் தோன்றியவர்களுக்கு சுக்கிரன் மட்டும் அசுப பலனுக்கு காரணமான கிரகம் ஆகும், செவ்வாய் மற்றும் சூரியன் சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும், சூரியனும் புதனும் ராஜயோகத்தை ஏற்படுத்தும் கிரகங்கள். சனி மரணத்திற்குக் காரணமான கிரகம், குரு நடுநிலை வகிக்க கூடிய கிரகம் ஆகும். சுக்கிரன் மரணத்திற்குக் காரணமான கிரக நிலையை அடைய கூடும்
0 Response to "துலாம், விருச்சிகம், தனுசு லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரக.."
கருத்துரையிடுக