கடக, சிம்ம, கன்னி லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோர சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரக கிரகங்கள்
கடக லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...
கடக லக்னத்தில் தோன்றியவர்களுக்கு சுக்கிரனும் புதனும் பாப பலனை தரக்கூடியவர்கள். செவ்வாய், குரு மற்றும் சந்திரன் சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும் இதில் செவ்வாய் கடக லக்னத்தில் தோன்றியவர்களுக்கு முழுமையான தனி ஆதிக்க சுப யோக கிரகமாக செவ்வாய் விளங்குகிறார். சனியும் சூரியனும் மரணத்திற்குக் காரணமான கிரகங்கள் ஆகும் இந்த இரு கிரகங்களும் இணைப்பு தொடர்பை பொருத்து விளைவுகளைத் தருவார்கள்.
சிம்ம லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...
சிம்ம லக்னத்தில் தோன்றியவர்களுக்கு புதன், சுக்கிரன் மற்றும் சனி பாப பலனை தரக்கூடியவர்கள். செவ்வாய், குரு மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும். குரு சுக்கிரன் இணைந்திருப்பது சுப விளைவுகளை ஏற்படுத்தாது (இவர்கள் ஒரு கோணத்திற்கும் மற்றும் ஒரு கேந்திரத்திற்கும் அதிபதியாக இருந்தாலும் கூட). சனியும் சந்திரனும் மரணத்திற்குக் காரணமான கிரகங்கள் ஆகும் இந்த இரு கிரகங்களும் இணைப்பு தொடர்பை பொருத்து விளைவுகளைத் தருவார்கள்.
கன்னி லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...
கன்னி லக்னத்தில் தோன்றியவர்களுக்கு செவ்வாய், குரு மற்றும் சந்திரன் பாப பலனை தரக்கூடியவர்கள். புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும் இந்த புதன் மற்றும் சுக்கிரன் இணைந்திருப்பது ராஜயோகத்தை ஏற்படுத்தும் இவ்வாறு இருந்தாலும் சுக்கிரன் மரணத்திற்குக் காரணமான கிரகமும் தான். சூரியனின் சுப அசுப விளைவுகள் என்பது சூரியன் எந்த கிரகங்களுடன் இணைப்பு தொடர்பை பெற்றுள்ளார் என்பதை பொருத்து விளைவுகளைத் தரும்.
0 Response to "கடக, சிம்ம, கன்னி லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோர சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரக கிரகங்கள்"
கருத்துரையிடுக