றிச்சர்ட் பிரான்சன் (Richard Branson) ஜாதகம் கணிப்பு - விசித்திரமான கோடீஸ்வரர் ஜாலியான ஆள்…

றிச்சர்ட் பிரான்சன் (Richard Branson) ஜாதகம் கணிப்பு - விசித்திரமான கோடீஸ்வரர் ஜாலியான ஆள்
வித்தியாசமான கோடீஸ்வரர் ஒருவரின் ஜாதகத்தை பற்றி பார்க்க போகிறோம் மிகப்பொறுப்பான ஒரு தொழிலதிபர் ஆனால் அந்த பொறுப்புகளை செயல்படுத்துவதில் அதை மிக ஜாலியாகவும் மிக எதார்த்தமாகவும் செய்து கொண்டிருக்கும் ஒரு விசித்திரமான கோடீஸ்வரர் ஆன றிச்சர்ட் பிரான்சன் (Richard Branson) ஜாதகத்தை பற்றி பொதுவான ஜோதிட கண்ணோட்டதோடு இப்போது பார்க்க போகிறோம். இவர் வெர்ஜின் நிறுவன குழுமத்தின் (Virgin Group Ltd)  நிறுவன தலைவர், ஒரு நிறுவனத்தை சொந்தமாக நிறுவி அதை சிறப்பாக நடத்தி முன்னேறுவதற்கே பலருக்கு மூச்சு திணருகிறது ஆனால் சுமார் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை புதிதாக நிறுவியோ அல்லது தன்னுடன் இணைத்து கொண்டோ ஆக மொத்தம் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கணக்குகளை வளர்ச்சியை கவனிக்கும் கையாளும் ஒரு நிர்வாகி இவர். ஐக்கிய ராஜ்யத்தில் நான்காவது செல்வந்தர் என்ற நிலையை பெற்றவர் மற்றும் ஆங்கில உலகெங்கிலும் இளம் தொழில்முனைவர்களுக்கு ஈர்ப்பான ஆளுமை (Inspirational personality)  ஆக திகழும் இவரின் ஜாதக கணிப்பை பார்ப்போம்.
றிச்சர்ட் பிரான்சன் (Richard Branson) ஜாதகம்


ரிச்சர்ட் பிரான்சனின் தந்தை எட்வர்ட் ஜேம்ஸ் பிரான்சன் ஒரு வழக்குரைஞர் இவரது தாய் ஈவ் பிரான்சன் ஒரு விமான பணிப்பெண். ரிச்சர்ட் பிரான்சன் தனது சிறுவயதிலேயே கல்விகற்றல் குறைபாட்டால் பள்ளித் தேர்வுகளில் வெற்றி பெற முடியாமல் சுமார் 16 வயதிலேயே பள்ளிபாட படிப்பில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவானது. அதாவது லக்னாதிபதியும் வித்யா ஸ்தானாதிபதியும் சேர்ந்து லக்னத்திற்கு 12 ஆம் ஸ்தானத்தில் மறைந்ததாலும் மேலும் இந்த லக்னத்திற்கு பாப கிரகமான சனி வந்து லக்னத்தில் அமர்ந்திருந்த நிலையாலும் மற்றொரு அசுப கிரகமான சந்திரனும் லக்னத்திலே அமர்ந்திருந்த நிலையாலும் இரண்டில் கேதுவும் இருப்பதாலும் இவையெல்லாம் சேர்ந்து தந்த பலன்களால் இளம்பருவ வயதிலேயே பள்ளிபடிப்பை முடிக்க நேர்ந்தது.
இவரது தாய் ஒரு லட்சிய பெண் இரண்டாம் உலகயுத்ததில் கலந்து கொண்டவர் பல முகங்கள் கொண்டவர் அதாவது போர்வீராங்கனை, ballet dancer, விமான பணிப்பெண், குழந்தைகள் நாவலாளர், வழக்குரைஞர், தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர். ப்ரான்ஸனின் தந்தை மற்றும் முக்கியமாக தாய் கொடுத்த ஊக்கத்தாலே சிறுவயதில் பள்ளிபடிப்பை முடிக்க நேர்ந்தாலும் 17 வயதிலேயே தனியாக சொந்த தொழில் தொடங்கி இளம்பருவ தொழில்முனைவனார். அதாவது தந்தை தாய் என இருவருக்கும் ஸ்தானாதிபதியான செவ்வாய் தனது சுய காரக நட்சத்திரத்தில் இருந்து 8 ஆம் பார்வையாக தனது ஆளுகை உட்பட்ட 9ஆம் ஸ்தானமான தந்தை ஸ்தானத்தை பார்வை செய்வதும். மற்ற வர்க்க சக்கரங்களில் 6 இடங்களில் செவ்வாய் பகவான் ஆட்சி உச்சம் அடைந்துள்ளது.  முக்கியமாக தந்தை மற்றும் பூர்வமூதாதையர்களின் புண்ணியத்தை காட்டும் பஞ்சாம்சம் வர்க்க சக்கரத்தில் செவ்வாய் உச்சம் வீட்டை அடைந்துள்ளார் மேலும் குரு பகவான் ஆட்சி விட்டை அடைந்துள்ளார் அதாவது இவரது தாதா மற்றும் கொள்ளு தாதா ஆகியோர் வழக்குரைஞர்களாகவும் நீதிபதியாகவும் இருந்தவர்கள். இந்த பாரம்பரியத்தில் வந்த செவ்வாய் பகவானின் வலிமையான இருப்பு காரணமாக பெற்றோரின் ஊக்கத்தையும் சிறந்த வழிகாட்டுதலையும் பெற்றார்.
 

இளம்பருவத்திலேயே தனது நண்பருடன் சேர்ந்து "வர்ஜின்" என்ற பெயரில் இசைத்தட்டு கடை ஒன்றை ஒரு தேவாலயத்தின் அடிதள அறையில் வைத்து ஆரம்பித்தார். மகம் நட்சத்திரத்தில் பிறந்ததால் கேது திசையில் வாழ்க்கை ஆரம்பித்தது அதனால் இளம்பருவத்திலேயே தொழில் ஸ்தானம் ஆன 10 ஆம் ஸ்தானத்தின் திசையான சுக்கிர திசை ஆரம்பித்ததால் லாபத்தில் 11 ஆம் ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரன் திசையில் வர்த்தக அதிபதி சனி புத்தியில் சுய தொழிலை தொடங்கினார். இவரது பொருளை பிரபலமான படுத்தும் பாணியால் அந்த கடை அடிப்படை வெற்றியை பெற்றது. 1971 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் ப்ரான்சன் ஒரு ரெக்கார்டு கடையை ஆரம்பித்தார்.  அந்த சமயத்தில் ஏற்றுமதி வியாபாரத்தில் ஏற்பட்ட வரி அபராதத்தை செலுத்த முடியாமல் இவர் தவித்த போது இவரது தாய் தங்களது குடும்ப இல்லத்தை அடமானமாக வைத்து பணத்தை கடனாக வாங்கி தந்தார்.

வேண்டிய மூலதனத்தை ஈட்டிய பின் அதை கொண்டு 1972 ஆம் ஆண்டில் "வர்ஜின் ரெக்கார்ட்ஸ்" என்ற பெயரில் இசைப்பதிவு கூடம் (recording studio) ஒன்றை ஆரம்பித்தார். முதலில் குத்தகையாக இசையாளர்களுக்கு கொடுத்து லாபம் பார்த்து வந்தார், பின்பு புதிய இசை கலைஞர்களுடன் சேர்ந்து சொந்தமாக தனது வர்ஜின் ரெக்கார்ட்ஸ் என்ற தயாரிப்பு பெயரில் தனி இசை கோர்வை (Music Album) களை வெளியிட்டார். அதில் நிறைய இசை கலைஞர்களுடன் சேர்ந்து சொந்தமாக உருவாக்கிய இசை கோர்வை (Music Album) நிறைய வெற்றிகளை தேடி தந்தது அதனால் அந்த காலங்களில் உலகின் மிகப்பெரிய முதல் ஆறு இசைப்பதிவு தயாரிப்பாளர்களில் ஒருவராக வளர்ந்தார். அதாவது தொழில் ஸ்தானம் ஆன 10 ஆம் ஸ்தானத்தின் அதிபதி சுக்கிரன் இராசியில் ஆட்சி வீட்டிற்கு மிக அருகில் அமைய பெற்றும் மேலும் நவாம்சத்தில் ஆட்சி அம்ச வீட்டிற்கு சென்றும் உடன் வர்த்தக அதிபதி சனி உச்சம் பெற்றும் மேலும் தசாம்சத்தில் இராசியில் இருக்கும் அதே மிதுன இராசி உடன் ஆட்சி பெற்ற புதனுடன் இருப்பதும் சிறப்பாக அமைந்துள்ளது. லக்னாதிபதியுடன் பரிவர்த்தனை யோகம் பெற்ற சூரியனின் திசையில் மேலே சொன்ன நிகழ்வுகள் எல்லாம் இவருக்கு நடந்தது.

இவரின் ஜாதகத்தை எடுத்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவரும் விசித்திரமானவர் இவர் தொழில் எடுத்த சில வித்தியாசமான முடிவுகள் அதனால் விளைந்த சரிவுகள் அதை இவர் கடந்து வந்த விதம் போன்றவை சுவாரஸ்மானது எல்லாவற்றையும் சொல்ல முடியாவிட்டாலும் சிறிதளவு பார்ப்போம் இசை தயாரிப்பு தொழில் ஒரு புறம் சுமுகமாக போய் கொண்டிருக்க எல்லாருக்கும் இயல்பாக வரும் தொழிலை பெருக்க வேண்டும் வியாபார எல்லைகளை விருத்தி செய்ய வேண்டும் பல தொழில் செய்ய வேண்டும் என்பது போன்ற ஆசைகள் இவரையும் விட்டு வைக்கவில்லை. மறைவு ஸ்தானமான 12 ஆம் ஸ்தானத்தின் அதிபதி அசுப சந்திரனின் திசையில் வர்ஜின் மெகாஸ்டோர்ஸ் மற்றும்  பயண நிறுவனங்கள் ஆரம்பித்தார் அதில் விமான  பயண நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தால் ஆரம்பத்தில் பெரிய நட்டத்தை சந்தித்தார் அதுவும் அதனால் அந்த நட்டத்தை சமாளிக்க வேண்டி தனது வர்ஜின் இசைப்பதிவு நிறுவனத்தை 500 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்க நேர்ந்தது. சந்திரன் தனது அசுப விளையாட்டை காட்டி விட்டார். அந்த இழப்பு மூலம் மனம் நொறுக்கப்பட்டார் தனது நிறுவனத்தை விற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின் மிகவும் அழுததாக அவரின் சுய வரலாற்றில் கூறி உள்ளார். பாபகிரகங்கள் லக்னத்தை சூழ்ந்திருந்தும் எதிரும் இருந்து அந்த பாபிகளில் ஒருவனான சனியின் புத்தியில் அதாவது கேதுவுடன் இணைந்திருந்த செவ்வாய் திசையில் சனியின் புத்தியில்  தனது நிறுவனத்தை விற்கும் சூழல் ஏற்பட்டது.

மேலே சொன்ன செவ்வாய் பகவானின் வலிமையாலும் இந்த லக்ன யோகாதிபதி என்பதாலும் இந்த சரிவுக்கு பிறகு தனது இசை வர்த்தகத்தில் தொடர்ந்து இருந்தார். பின்பு வர்ஜின் ரோடியோவை ஆரம்பித்தார் முக்கியமாக பல வருடங்கள் கழித்து தனது புதிய நிறுவனமாக V2  என்ற பெயரில் மறுபடியும் இசைப்பதிவு நிறுவனத்தை தொடங்கினார். அதாவது சர்ப்ப கிரமான இராகு பொதுவாக மறைவது நல்லது அதிலும் பாபகிரகமான சனியின் நட்சத்திரத்தில் மறைந்தது மேலும் நல்லது ஆனது ஜோதிடத்தில் கெட்டவன் எந்தளவுக்கு வலிமை குன்று கிறானோ அந்த அளவுக்கு அது ஜாதகருக்கும் நல்லது என்ற அடிப்படையில் இராகுவின் திசையில் தான் தனது மறுபடியும் இசைப்பதிவு நிறுவனத்தை தொடங்கினார்.  இந்த இராகுவின் திசையில் தான் ரயில் நிறுவனம், ஆடம்பர விளையாட்டு நிறுவனம், மொபைல் போன் நிறுவனம் மற்றும் சுற்றுலா நிறுவனம் போன்ற  நிறுவனங்களை தொடங்கி தனது வியாபாரத்தின் எல்லையை விரிவுபடுத்தினார். வெறும் இராகுவின் பலத்தில் மட்டும் இதை அவர் சாதிக்கவில்லை இதில் குரு பகவானின் அருளும் உள்ளது இராகுவோ குருவின் வீட்டில் சனியின் நட்சத்திரத்தில் அதே சமயம் குருவோ சனியின் வீட்டில் இராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார் பூர்வபுண்ணியாதிபதியான குரு பகவான் இராகுவின் நட்சத்திரத்தில் வலுத்த காரணத்தால் இராகுவின் திசையில் பல தொழில் மன்னன் ஆனார்.

இதை இவரின் தசாம்சமும் எடுத்து காட்டுகிறது வரிசையாக சிம்ம லக்னத்திற்கு 5, 8, 9, 10, 11 அதிபதிகள் எதிராக மற்றும் ஒன்றாக இணைந்து 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற புதன் சேர்ந்து அமைந்துள்ளார்கள். விரையாதிபதியான சந்திரன் தசாம்சத்தில் நீசம் ஆகி வலிமை குன்றியுது கூட அவருக்கு நல்லதாக தான் போனது அதனால் சந்திரன் திசையில் மீளவே முடியாத பாதிப்புகள் வராமல் காப்பாற்றபட்டது.

இவரின் ஜாதகத்தில் இராசியும் சிம்ம இராசி லக்னமும் சிம்ம லக்னம் ஏன் தசாம்ச லக்னம் கூட சிம்ம லக்னமே அதனால் இவருக்கு மற்றவரிடம் அடங்கி ஒடுங்கி வேலையை வேலையாக மட்டும் செய்வதெல்லாம் பிடிக்காது அதனால் தான் சுய தொழிலை தேர்ந்தெடுத்திருக்கிறார் மேலும் நிர்வாகமே இந்த சுதந்திர சிங்கத்திற்கு ஒத்துவரும்

இவரின் ஜாதகத்தை எடுத்ததற்கு முக்கிய காரணங்களில் மேலும் ஒன்று பல வியாபாரங்களை தொடங்கி நடத்தும் போது தோல்வியுற்ற பல வியாபார தொழில் முயற்சிகள் இருக்கத் தான் செய்யும் உதாரணமாக சந்திரனின் காரகத்துவமான தொழில்கள் ஆன Virgin Cola போன்வை பல இவருக்கு தோல்வியை தான் தந்தது இருந்தாலும் இவர் வாழ்கையை மிகவும் எளிதாக எடுத்து வெற்றி தோல்விகளை அடுத்த அடுத்த வருகிற உணர்ச்சிகளில் கடந்து போக கூடியவர். பணக்காரனாக வாழ வேண்டும் என்ற காரணத்திற்காகவோ அல்லது பெரும் கௌரவத்துடன் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காகவோ பணம் சேர்த்தவரல்ல. தனது மனதுக்கு பட்டவற்றை சிறிதளவு திட்டமிட்டு பெரும் அளவு ஜாலியாக எடுத்து அதே சமயம் தான் விற்கும் பொருட்களை வித்தியாசமான முறைகளில் மக்களின் மனத்தில் வாங்க வைக்கும் தூண்டுதலை உண்டுபண்ணி, பல நிறுவனங்களை உண்டுபண்ணி அதற்கு உரிய நிர்வாகிகளை நிர்ணயித்து தனது பணிகளை ஒரு சுற்றுலாவுக்கு வந்தவன் போல செய்து கொண்டு போகிறார். அதற்கு இந்த பெரும் தொழிலதிபரின் கீழே உள்ள இவ்வகையான புகைபடங்களே

  1. https://static.independent.co.uk/s3fs-public/thumbnails/image/2013/10/13/16/sir-richard-branson.jpg
  2. https://metrouk2.files.wordpress.com/2013/05/ay_109694334.jpg
  3. http://static1.businessinsider.com/image/534010f569bedda839030178/richard-branson-tells-us-the-story-behind-his-famous-kitesurfing-photo-with-a-naked-model.jpg
  4. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoyXRJAVcxeS5UoGedYs0oTyvjw5J6KUQcothiFi42akhu8kqTW54tVpMCo_5W7yAFonhRuQZWAciARNCoq-h_N3iwGQ3xQXT3ogIH18R7PvOe6QT-OTwIaBJyHSIb_ttAe6T4YTvb5-U/s1600/VA_LITTLE_RED_0012.JPG


0 Response to "றிச்சர்ட் பிரான்சன் (Richard Branson) ஜாதகம் கணிப்பு - விசித்திரமான கோடீஸ்வரர் ஜாலியான ஆள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger