மிதுன இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…


மிதுன இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டுள்ளது.




மிதுன இராசி தலை பகுதியில் இருந்து உதயமாகும் இராசி
ஆண் மற்றும் பெண் என இரு பாலாரையும் சேர்த்து பிரதிநிதித்துவபடுத்தும் இராசி
தண்டாயிதத்தையும் வீணையையும் அடையாளமாக வைத்திருக்கும் இராசி
இது மேற்கு திசையை சார்ந்த இராசி காற்று பூதத்திற்குரிய இராசி
இது இரண்டு காலுக்குரிய இராசி மற்றும் இரவு காலங்களில் வலுவாகும் இராசி
இது கிராமங்களையும் மற்றும் ஒரிடத்தில் நில்லாமல் ஒன்றை சாராமல் அலையும்
காற்றோட்ட தன்மையும் காரகத்துவ படுத்தும் இராசி
இது சமமான தேக அமைப்பு  மற்றும் இளம் பச்சை நிறத்தை
தனது நிறமாக அடையாளபடுத்தும் இராசி மேலும்
இது புதனை ஆட்சியாளராக கொண்ட இராசி
- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்


0 Response to "மிதுன இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…"

கருத்துரையிடுக

Powered by Blogger