ஜோதிட துணுக்குகள் பகுதி 15 - தலை வலி அல்லது தலைபாரம் ஆகும் காலங்கள்…


ஜோதிட துணுக்குகள் பகுதி 15 - தலை வலி அல்லது தலைபாரம் ஆகும் காலங்கள்


மேஷ இராசியும் மற்றும் லக்னமும் அதன் லக்னாதிபதியும் ஜோதிடத்தில் முக்கிய தலை அதாவது சிரசுக்கு ஸ்தானாதிபதிகள் ஆகிறார்கள் எனவே

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் 6 ஆம் ஸ்தானாதிபதி அமர்ந்து மற்றும் லக்னாதிபதியுடன் 6 ஆம் ஸ்தானாதிபதி சேர்ந்து அமைந்து அப்படிபட்டவர்களின் குறைந்த அளவு பகை மற்றும் பாபமான கிரக தொடர்புகள் ஏதேனும் விதத்தில் இருக்க நேர்ந்தால் அவருக்கு ஜாதக காலத்தில் எந்த சமயம் லக்னாதிபதியின் திசையில் 6 ஆம் ஸ்தானாதிபதியின் புத்தி உடன் அந்தர காலங்கள் சேர்ந்து வருகிறதோ அல்லது 6 ஆம் ஸ்தானாதிபதியின் திசையில் லக்னாதிபதியின் புத்தியில் உடன் 6 ஆம் ஸ்தானாதிபதியின் அந்தர காலங்கள் சேர்ந்து வருகிறதோ அந்த சமயம் வாந்தி உமட்டல் அல்லது தீங்கான உணவுவகைகள் வயிற்றில் இருப்பது போன்ற காரணங்களினால் தலை வலி அல்லது தலைபாரங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் 8 ஆம் ஸ்தானாதிபதி அமர்ந்து மற்றும் லக்னாதிபதியுடன் 8 ஆம் ஸ்தானாதிபதி சேர்ந்து அமைந்து அப்படிபட்டவர்களின் குறைந்த அளவு பகை மற்றும் பாபமான கிரக தொடர்புகள் ஏதேனும் விதத்தில் இருக்க நேர்ந்தால் அவருக்கு ஜாதக காலத்தில் எந்த சமயம் லக்னாதிபதியின் திசையில் 8 ஆம் ஸ்தானாதிபதியின் புத்தி உடன் அந்தர காலங்கள் சேர்ந்து வருகிறதோ அல்லது 8 ஆம் ஸ்தானாதிபதியின் திசையில் லக்னாதிபதியின் புத்தியில் உடன் 8 ஆம் ஸ்தானாதிபதியின் அந்தர காலங்கள் சேர்ந்து வருகிறதோ அந்த சமயம் உடல் பலவீனமான நிலை அல்லது ஏதேனும் பிறநோய்கள் போன்ற காரணங்களினால் தலை வலி அல்லது தலைபாரங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் 12 ஆம் ஸ்தானாதிபதி அமர்ந்து மற்றும் லக்னாதிபதியுடன் 12 ஆம் ஸ்தானாதிபதி சேர்ந்து அமைந்து அப்படிபட்டவர்களின் குறைந்த அளவு பகை மற்றும் பாபமான கிரக தொடர்புகள் ஏதேனும் விதத்தில் இருக்க நேர்ந்தால் அவருக்கு ஜாதக காலத்தில் எந்த சமயம் லக்னாதிபதியின் திசையில் 12 ஆம் ஸ்தானாதிபதியின் புத்தி உடன் அந்தர காலங்கள் சேர்ந்து வருகிறதோ அல்லது 12 ஆம் ஸ்தானாதிபதியின் திசையில் லக்னாதிபதியின் புத்தியில் உடன் 12 ஆம் ஸ்தானாதிபதியின் அந்தர காலங்கள் சேர்ந்து வருகிறதோ அந்த சமயம் தூக்கமின்மை அல்லது வேலை, பணவிஷயங்கள் போன்ற காரணங்களினால் தலை வலி அல்லது தலைபாரங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.

இனிமே தான் உங்களுக்கு முக்கியமான ஒரு விஷயத்தையே சொல்ல போகிறேன் ஆம் வெறும் மறைவு ஸ்தானங்களால் தான் தலை வலி அல்லது தலைபாரங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்று நினைவிடாதீர்கள் மேலே சொன்ன அமைப்பில் ஒருவரின் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானமான அதுவும் இல்லற ஸ்தானமான 7ஆம் ஸ்தானத்தின் அதிபதியும் கூட ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துடன் குறைந்த அளவு பகை மற்றும் பாபமான கிரக தொடர்புகள் உடன் இருந்தாலும் அல்லது லக்னம் மற்றும் 7ஆம் ஸ்தானம் (பெண்டாட்டி ஸ்தானம்) உடன் 6,8,12 ஆம் ஸ்தானாதிபதிகள் குறைந்த அளவு தொடர்பில் இருந்தாலும் தலை வலி அல்லது தலைபாரங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.

கல்யாணம் ஆனவர் இதை படித்து அதிர்ச்சி ! அடைய மாட்டார்கள் ஏனென்றால் கல்யாணம் ஆனவர்களுக்கு இது நன்கு தெரியும் குறைந்த பட்சம் 75 சதவீதமான கல்யாணமான ஆண்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை "பெண்டாட்டியனால ஒரே தலை வலியா இருக்கு சார் நாம எத செஞ்சாலும் ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருக்கா!"

இதுல சில இடங்களில் இதுவேறு நடக்கும் அதாவது 

"பெண்டாட்டிக்கு அடிமையா இருக்கானு" அம்மா சொல்ல இன்னொரு பக்கம்
"அம்மா பேச்ச மட்டும் தான் கேட்குறீங்க" என்று பெண்டாட்டி சொல்ல ஆளுக்கு ஒருத்தரா வலபக்க இடபக்க மூளையை பங்கு போட அப்பப்பா இத்தோடு போதும் நான் நிறுத்துகிறேன் இது கல்யாணமான ஆண்களின் பார்வையில் இருந்து எழுதியிருக்கிறேன்

இதை இதேபோல நவீனமாக வேலைக்கு போன போகும் கல்யாணமான நவீனயுக பெண்களின் பார்வையில் இருந்தும் இதே ஸ்தான பலன்களை எழுதலாம் ஆன இதுக்கு மேல எழுதுனா எனக்கு தலைவலி வந்து விடும் அதனால் நிறுத்துகிறேன்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்



0 Response to "ஜோதிட துணுக்குகள் பகுதி 15 - தலை வலி அல்லது தலைபாரம் ஆகும் காலங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger