கடக இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

கடக இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டுள்ளது.

கடக இராசி வெளிரிய மங்கலான சிவப்பு நிறம் உடைய இராசி
இந்த கடக இராசி காடுகளுக்கு காரகத்துவமும் மற்றும் அந்தணரை (சான்றோர்) பிரதிநிதித்துவ படுத்தும் இராசி
இது இரவில் வலிமையாகி வடக்கு திசையை சார்ந்த இராசி
இது பலகால்கள் கொண்ட இராசி மற்றும் பருமனான தேகத்தை சுட்டிகாட்டும் இராசி
இது சாத்வீக குண இராசி மற்றும் நீர்த்தன்மையை பிரதிநிதித்துவ படுத்தும் இராசி
இந்த இராசி பின்னாலிருந்து உயர்ந்து உயரும் இராசி
இது சந்திரனை ஆட்சியாளராக கொண்ட இராசி
- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்

0 Response to "கடக இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…"

கருத்துரையிடுக

Powered by Blogger