கந்தர் அனுபூதி பகுதி 9 கந்தரனுபூதி பாடல் 14,15 ன் விளக்கம்...

கந்தரநுபூதி பாடல் 14, 15 ன்  விளக்கம்... 

கந்தர் அனுபூதியின் பாடல் 14. கைவாய் கதிர்வேல்.., 15. முருகன் குமரன்...,  ஆகிய இரண்டு பாடல்களின் விளக்கம் கொடுக்கபட்டுள்ளது. கந்தரனுபூதி செய்யுள் 14 முதல் 15 ன் பொருள் விளக்கம்.

பாடல் 14

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

பாடல் 15

முருகன், குமரன், குகன், என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ, எண் குண பஞ்சரனே.



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
இறைவனின் எண்குணங்கள் (எட்டு குணங்கள்) ஆனவை பின்வருமாறு -
1) அனைத்து உயிரினங்களின் மீதும் சமபாவனை மற்றும் கருணை உடையவன் = Bhūtadayā = பேரருள்
2) அனைத்து வகை சக்தியும் அதே சமயம் பொறுமையும் உடையவன் = Kṣamā = பேராற்றல்
3) தன்னியல்பாகவே அனைத்தும் அறியும் அறிவும் விவேகமும் உடையவன் = anasūri = பேரறிவு
4) எதையும் எளிதாகவும் உடனடியாகவும் செய்யும் திறன் (முயற்சி அல்லது உழைப்பு இல்லாமல்) உடையவன் = Anāyāsa = பேரியல்பு
5) எப்போதும் பேரானந்த பெரும் செல்வமாய் திகழ்பவன் = Maṅgala = பேரின்பம்
6) தங்குதடையில்லா முழுச் சுதந்திரம் உடையவன் = Akārpaṇya = கட்டின்மை
7) எதிலும் எதையும் பற்றி நில்லாதவன் = Aspṛhā = பற்றின்மை
8) அனைத்துவித உயர் மரியாதைக்கும் உயர் மதிப்புக்கும் உரியவனாக இருத்தல் =  Gaurava = தலைமை

0 Response to "கந்தர் அனுபூதி பகுதி 9 கந்தரனுபூதி பாடல் 14,15 ன் விளக்கம்..."

கருத்துரையிடுக

Powered by Blogger