ஜோதிட தற்போதைய செய்தி - மழை எச்சரிக்கை...

நாள் 31-10-2017

சூரியன் சுவாதி நட்சத்திரத்தின் மத்திம பகுதியில் சஞ்சரித்து கொண்டு இருப்பதால் சென்னை மற்றும் தமிழகத்தின் கடலிடை மாவட்டங்களில் பரவலாக பெரிய மழை உண்டு, அதுவும் உதய லக்னத்தின் பயணம் நீர் இராசிகளின் (கடகம், விருச்சிகம் மற்றும் மீனம்) வழியாக பயணிக்கும் காலம் அதிக மழையை காணலாம்.

இன்னும் 8 அல்லது 9 நாட்களுக்கு இரவு 09:30:00 முதல் இரவு 10:45:00 வரை கடும் மேகமூட்டம் இடிமின்னல் இருக்கலாம் இந்த அறிகுறி அதிகாலையிலும் தென்படும் மேலும் இரவு 11:30:00 முதல் இரவு 12:10:00 வரையிலும் மற்றும் அதிகாலையிலும் கடும் மழை வரலாம்.

அதே போல மதியம் 01:40:00 முதல் 02:25:00 வரை சூரியனின் சஞ்சாரம் வானத்தில் தெரிவதை மறைக்கும் அளவு மேகங்கள் தென்படலாம் இந்த காலத்தில் தொடர் சாரல் மழை வரலாம்.

சூரியன் சுவாதி நட்சத்திரத்தை விட்டு போகிற வரைக்கும் பரவலாக மழை இருக்கும். மழைக்கான பாதுகாப்பை செய்து கொள்ளவும் மற்றும் குறிபிட்ட இடிமின்னல் காலத்தில் பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

In English


Sun travel in the middle of swati star, so expect widespread rains on sea basin districts of Tamil Nadu and also Chennai, when Udaya lagna traveled through the water signs (Cancer, Scorpio and Pisces) while that period look for more rains. 

For coming 8 and 9 days at night between 9:30:00 and 10:45:00 chance to heavy thunderclouds and some early morning like a same situation. And also night between 11:30:00 and 12:10:00 chance to heavy rains and some early morning like a same situation. 

In the afternoon, from 1:40:00 to 2:25:00, the clouds can be seen in the sky to cover the sun during this period continuous long shower can chance to come. 

There will be widespread rains until the Sun leaves the Swathi star. Take care of the rain and select a safe place during specified periods.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கடகம் & சிம்மம், கடகம் vs சிம்மம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…


கடகம் & சிம்மம், கடகம் vs சிம்மம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் கடகம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ சிம்மம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

கடகம் & சிம்மம், கடகம் vs சிம்மம் -

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger