மிதுனம் & மீனம், மிதுனம் vs மீனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

மிதுனம் & மீனம், மிதுனம் vs மீனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்
ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ மீனம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

மிதுனம் & மீனம், மிதுனம் vs மீனம் -
இந்த இரு மிதுன மீனம் ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது இந்த இரு இராசிக்காரர்களும் பரஸ்பரம் இருமை உணர்ச்சி மற்றும் தன்மை கொண்ட இராசிகளாகும் அதனால் இது அதிகமான உணர்ச்சிவசம் கொண்ட நட்பாக அல்லது காதலாக உருவாக வாய்ப்பு அதிகம். மீன இராசிக்காரர் தங்களின் கனவுகளை சூழல்களுக்கு தக்கவாறு அனுபவித்துவிட நினைப்பவர்கள், மிதுன இராசிக்காரர் புதிய புதிய அனுபவத்திற்கு ஆர்வமானவர்கள், இவர்கள் இருவரும் இணைய மிகவும் திறந்த மனதுடன் மற்றும் இணக்கமான அன்புடனும் இருக்க வேணும் அதற்கு உணர்ச்சிவசமானவர்கள் என்பதால் பரஸ்பர இருவருக்கும் நெகிழ்வு தன்மை உறவில் இருக்க வேண்டும் சந்திரன் சுபமாக அமைய அப்படி இருக்கும் உறவும் சுகம் தரும்.

இந்த இருவருக்கும் இருக்கும் இருமை உணர்ச்சி மற்றும் குணத்தன்மை சந்திரனால் மற்ற கிரகங்களால் வலுப்பெற்றால் மிதுன மற்றும் மீன இராசிக்காரர்கள் பரஸ்பரம் மிகவும் நல்ல நண்பர்களாக இருக்க வாய்ப்பு உண்டாகும். மீன ராசிக்காரர்கள் உள்ளுணர்வு மற்றும் உணர்திறனும் சற்று அதிகம் உள்ளவர்கள் அதனால் மிதுன இராசிக்காரர் மீன இராசிக்காரரிடம் பேசுவதற்கு முன்பு கவனமாக சிந்தித்து பேச வேண்டும் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட மீன ராசியை புண்படுத்த வாய்ப்பு உண்டு கவனமாக இருக்க வேண்டும். சந்திரன் வலுவானால் மீன ராசி காதலர் முதுர்ச்சி உள்ளவர்களாக இருப்பர் அதனால் மிதுன ராசி காதலர் சிறிய தவறு செய்தால் தான் எளிதாக மன்னித்து மறப்பர்...



0 Response to "மிதுனம் & மீனம், மிதுனம் vs மீனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger