இறைவனை வழிபடும் அன்பர்களின் இரண்டு அமைப்புகள்…
இறைவனை வழிபடும் அன்பர்களின் இரண்டு அமைப்புகள்…
இறைவனை
வழிபடும் பொருட்டு அன்பர்கள் கோயிலுக்கோ அல்லது இறைத்தன்மை மிகுந்த இடங்களுக்கோ
சென்று அந்த இறைவனுக்கு தங்கள் தங்கள் முறையில் வழிபாடு செய்வார்கள் அப்படி
வழிபாடு செய்வதில் நான்கு விதங்கள் இருப்பதாக உபநிஷத்துகள் மற்றும் தமிழ் பக்தி
இலக்கியங்கள் சொல்லும் அவை
1) புகழ், அன்பு மற்றும் நன்றி நிமித்தமாக வழிபாடு செய்வது (Praises)
2) தேவை, வேண்டுதல் மற்றும் காரிய நிமித்தமாக வழிபாடு செய்வது (Prayers)
3) தொண்டு, ஊழியம் மற்றும் திருப்பணி
நிமித்தமாக வழிபாடு செய்வது (Duties)
4) மௌனம் வழிபாடு செய்வது (Silence)
இதில் முதல்தரமான உயர்வை உடையது மௌனம் வழிபாடு என்று உபநிஷத்துகள் மற்றும்
தமிழ் பக்தி இலக்கியங்கள் சொல்லும் மற்றதெல்லாம் இதற்கு கீழ் தான் வரும், அதில் மௌனம் வழிபாடு என்பது எல்லாராலும் செய்ய
கூடியதாக இல்லாமல் இருக்கிறது. அதற்கு
அடுத்து தொண்டு மற்றும் திருப்பணி என்பதும் அதிக பேர்களால் செய்ய கூடியதாக
இல்லாமல் இருக்கிறது காரணம் தற்காலத்தில் 8 முதல் 10 மணி வரை மேலும்
சிலர் அதற்கு மேலும் ஒரு நாளில் பல மணி நேரங்களை வேலையில் செலவிடும் அளவு தற்போது
வேலைச்சுமை உள்ளது அதனால் திருப்பணி என்பதும் அதிக பேர்களால் செய்ய கூடியதாக
இல்லாமல் இருக்கிறது. இவற்றை கழித்த
பின்பு மீதி உள்ள புகழுதல் (Praise) மற்றும் வேண்டுதல் (Prayer) என்ற இந்த இரண்டு வழிபாட்டு முறைகள் தான் எளிதாகவும் பெரும்பான்மை ஆன்மீக
அன்பர்களால் வழிபாட்டு முறையாக கையாளப்படுகிறது. இந்த இரண்டுமுறையில் வழிபடும் அன்பர்களின் ஜாதகத்தில் இதற்கு உண்டான ஜோதிட இரு அமைப்புகளை மட்டும் சிறிது பார்ப்போம்
புகழுதல் (Praise) க்கான
ஸ்தானமாக 9ஆம் ஸ்தானமும்
வேண்டுதல் (Prayer) க்கான
ஸ்தானமாக 5ஆம் ஸ்தானமும் இருக்கிறது
முதலில் ஒருவரின் ஜாதகம் ஆன்மீக அம்சங்கள் உள்ள ஜாதகமாக அமைந்திருக்க
வேண்டும் அதற்கு பல ஜோதிட அமைப்புகள் பொருந்தி வந்து அதற்கு பிறகு தான் நான்
சொல்லும் இந்த அமைப்புகளை அவரின் ஜாதகத்தில் கவனிக்க வேண்டும் அப்படி இல்லாமல்
வெறும் இந்த அமைப்புகள் மட்டும் இருந்தால் அவ்வளவாக பலனகள் பொருந்தி வராது.
1) 5 ஆம் ஸ்தானத்தில் அல்லது 9 ஆம் ஸ்தானத்தில் குரு பகவான் இருக்க அதனால்
குருவுக்கு சிறப்பு சுப பார்வையாக 5 மற்றும் 9 இராசி பார்வை
இருக்கின்ற காரணத்தால், 5ல் அல்லது 9ல் இருக்கும் குரு பகவான் தனது 5 மற்றும் 9 சுப பார்வையால் 5 ஆம் ஸ்தானத்தை அல்லது 9
ஆம் ஸ்தானத்தை பார்க்கும் வாய்ப்பு உண்டாகிறது அதனால் நான்
மேலே சொன்ன புகழுதல் (Praise) மற்றும்
வேண்டுதல் (Prayer) என்ற இந்த
இரண்டு வழிபாட்டு முறைகளையும் ஒருங்கே செய்யும் ஆற்றல் அருள் உண்டாகிறது.
2) லக்னத்தில் (1ல்) குரு பகவான் இருக்க
அதனால் குருவுக்கு சிறப்பு சுப பார்வையாக 5 மற்றும் 9 இராசி பார்வை
இருக்கின்ற காரணத்தால் லக்னத்தில் இருக்கும் குரு பகவான் தனது 5 மற்றும் 9 சுப பார்வையால் 5 ஆம்
ஸ்தானத்தை அல்லது 9 ஆம் ஸ்தானத்தை
பார்க்கும் வாய்ப்பு உண்டாகிறது அதனால் நான் மேலே சொன்ன புகழுதல் (Praise) மற்றும் வேண்டுதல் (Prayer) என்ற இந்த இரண்டு வழிபாட்டு முறைகளையும்
ஒரளவுக்கு சரிசமமாக செய்யும் ஆற்றல் அருள் உண்டாகிறது.
5ல் சுக்கிரன், சந்திரன், புதன் இருக்க
தேவை, வேண்டுதல் மற்றும் காரிய
நிமித்தமாக வழிபாடு செய்வது (Prayers) என்ற அமைப்பு சிறிதளவு உண்டாக வாய்ப்பு உண்டு. 9ல் சுக்கிரன், சந்திரன், புதன் இருக்க புகழ், அன்பு மற்றும் நன்றி நிமித்தமாக வழிபாடு செய்வது (Praises)
என்ற அமைப்பு சிறிதளவு உண்டாக வாய்ப்பு உண்டாகிறது.
5ல் 9ல் அதிபதிகளுடன் சேர்ந்து முக்கியமாக குரு, சுக்கிரன் பின்பு சந்திரன், புதன் நல்ல சுப வலுவான தொடர்பை ஜாதகத்தில் பெற்று இருந்தால் அதனாலும் தேவை, வேண்டுதல் மற்றும் காரிய நிமித்தமாக வழிபாடு
செய்வது (Prayers) என்ற அமைப்பே
அல்லது புகழ், அன்பு மற்றும் நன்றி
நிமித்தமாக வழிபாடு செய்வது (Praises) என்ற அமைப்பே சிறிதளவு உண்டாக வாய்ப்பு உண்டாகிறது.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "இறைவனை வழிபடும் அன்பர்களின் இரண்டு அமைப்புகள்…"
கருத்துரையிடுக