மிதுனம் & மகரம், மிதுனம் vs மகரம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

மிதுனம் & மகரம், மிதுனம் vs மகரம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ மகரம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

மிதுனம் & மகரம், மிதுனம் vs மகரம் -


இந்த இரு மிதுன மகர ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது காலபுருஷ தத்துவப்படி 3,10 இராசிகளின் நட்பு அதுவே அந்த அந்த இராசிக்கு பார்க்கும் போது 8,6 இராசிகளாக ஒரு பக்கம் தோழன் மற்றொரு பக்கம் வில்லன் என்ற அமைப்பை பெறும். இரண்டு வித சிந்தனைகளை வைத்து கொண்டு ஒரே சிந்தனை கொண்ட மகர இராசிகாரரை குழப்பிவிடக்கூடாது அதற்கு பதிலாக இரண்டு வித யோசனைகள் தந்து அதில் சிறந்தவற்றை ஆராய்ந்து மகர இராசிகாரர் எடுத்து கொள்ள வேண்டும். மகர இராசிகாரர் சற்று மதிப்பான விஷயங்களில் நாட்டம் கொண்டவர் மிதுன இராசிகாரர் அவரின் மதிப்பை காப்பாற்ற வேண்டும். நட்பு உறவில் எடுத்து கொண்டால் இருவருக்கும் பிடித்த மற்றும் இணைக்கும் விஷயம் உழைப்பு அதுபோல காதல் உறவில் எடுத்து கொண்டால் இருவருக்கும் பிடித்த மற்றும் இணைக்கும் விஷயம் ஒவ்வொருவருக்கும் இடையே உள்ள அரவணைப்பு.

மகர சந்திரன் சிறப்பாக இருந்தால் தன்னடக்கம் மற்றும் அமைதியும் கொண்டவராக இருப்பார் மிதுன இராசிகாரரோ வெளி விஷயங்களில் நல்ல ஆர்வமாக இருப்பார்கள்.  மகர இராசிகாரர் சற்று பிடிவாதமானவராக இருக்கலாம் மிதுன இராசிகாரரோ சற்று நெகிழ்வானவராக இருக்கலாம் அதனால் மிதுன இராசி நிறைய விட்டுக்கொடுக்க வேண்டி வரலாம். மிதுன இராசிகாரர் பிரச்சினைகளை சுலபமாக தீர்க்க வழிகளை தேடுவார் அதுபோல மகர இராசிகாரர் பிரச்சினைகளை உழைப்பை கொண்டு தீர்க்க வழிகளை தேடுவார் இருவரும் நட்பாக இணைய பிரச்சினைகளுக்கு நல்ல ஒத்துழைப்பான தீர்வு காணும் வாய்ப்பு கிடைக்கும் அதனால் நண்பர்கள் தங்களில் ஒருவரையொருவர் பாணியைப் புரிந்து கொண்டு அவர்கள் தனியாக அடைய முடியாததைச் சாதிக்க அவர்களுக்கு இந்த நட்பு உதவும்.

மிதுன ராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் மகரம் ராசிக்காரர் இராசிநாதன் சனி ஆகும் இந்த கிரகங்கள் தங்களுக்கிடையே நட்பு உறவு வரக்கூடிய கிரகங்கள் இதில் புதன் புத்தியுள்ள கிரகம் சனியோ உழைப்பு உள்ள கிரகம் புத்தி சாதுர்யத்தோடு உழைப்பை சேர்த்து செயல்பட வெற்றிக்கு மாபெரும் உதவியாய் அமையும். அதுவே மிகவும் புத்தியுள்ள மனிதன் ஆகிவிட்டால் சனிக்கு பிரச்சினை தான். மகர இராசிகாரர் சகலவிதமான கஷ்டங்களினாலும் முன்னேறிக்கொண்டே போக முயற்சி செய்வார் அது போலவே புதனின் மிதுன இராசிகாரர் தனது புத்திக் கூர்மையால் திட்டங்களை கைவிடாது முன்னெடுக்க முயல்வார். இருவரின் நோக்கமும் ஒத்துபோகும் பண்பும் இருந்துவிட்டால் எளிதில் விட்டுவிடாத உறுதியானவர்களாக இருப்பதால் நட்பானாலும் காதலானாலும் இவர்களின் உறுதியால் சாதிக்க கூடியவர்கள். இவர்களின் சக்தியை சாதகமாக பயன்படுத்தி கொண்டால் நன்மை மாறி அமைந்தால் தேவையற்ற அழுத்தங்கள் கூடும். மிதுனம் மற்றவரை ஊக்குவிக்கும் பண்பு உடையவர்கள் மகர இராசிகாரர் அவரின் உற்சாகத்தை குறைத்துவிட கூடாது.

மிதுனம் ஒரு காற்றுத்தன்மை இராசியாகும் மகரம் ஒரு பூமித்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது இந்த கூட்டணியில் மிதுன இராசி விஷயங்களை ஆய்ந்து பார்க்கும் தன்மை கொண்டவர் ஆனால் மகர இராசிக்காரர் எதார்த்த நடைமுறை மற்றும் உழைப்புக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள், மகர இராசிக்கு பொறுமை மிக்க உண்டு மிதுன இராசிக்கு தத்துவ மற்றும் அறிவார்ந்த பார்வைகள் கொண்டவர் இவர்கள் நட்புரீதியாக சேர ஒருவரின் சொல்லை ஒருவர் நம்பியும் ஒருவரின் செயல்திறமை ஒருவர் நம்பியும் இருக்க வேண்டி வரும் அப்போது இருவருக்கும் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும் நம்பிக்கையான பேச்சும் செயலுமே இருவரையும் தொடரந்து இணைக்க முடியும். காதல் உறவாக இருக்குமானால் தன்னுடைய சொந்தக் காரணத்திற்காக மற்றவரின் உணர்வை மற்றும் பொறுமையை சோதிக்க கூடாது சந்தேகங்கள் சீக்கிரம் அன்பை முறிக்கும்.

மிதுனம் ஒரு உபய இராசியாகும் மற்றும் மகரம் ஒரு சர இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது மகர இராசிக்காரர் ஒரு செயலை தொடங்கி வைப்பதில் கெட்டிகாரர் மிதுன இராசிக்காரர் மாற்றமைவு செய்து எதிலும் எளிதில் பொருந்தக்கூடியவர் இருந்தாலும் அவர்கள் 8,6 இராசிகளாக இருப்பதால் வாழ்க்கையில் சில மாறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டுள்ளவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம் அதனால் நன்கு வரையறுக்கப்பட்ட திட்டங்களை முன்னமே பேசி உறுதி செய்ய வேண்டி வரும். இவர்கள் இருவரும் நட்பு அல்லது காதல் இணைந்து பிரச்சினைகள் வந்தால் அதை அவர்களுக்குள் சமரசம் செய்துவைக்க ஆளுமையான மற்றொரு நபர் தேவைபடலாம். இருவருக்கும் புத்திபூர்வமான உதவி மற்றும் உழைப்பு பொறுமை இருக்க மதிப்பு மரியாதை ஏற்படுத்தும் அதனால் இருவருக்கிடையே ஈடுபடும் காரியங்களில் சிறந்த வெற்றிகளை ஈட்டித் தர உதவும்.


0 Response to "மிதுனம் & மகரம், மிதுனம் vs மகரம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger