ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 52 - விசேஷகாரக யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 52 - விசேஷகாரக யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


விசேஷகாரக யோகம்
பஞ்ச கிரகங்கள் ஆன சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களில் குறைந்தது இரண்டு கிரகங்கள் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி பெற்றால் உண்டாகும் இந்த விசேஷகாரக யோகம். காரகன் என்றால் அந்த விஷயமாக செயல்பட உரிமை உள்ளவன், அதிகாரி, நிர்வாகி, தயாரிப்பாளர் என்றெல்லாம் அர்த்தம் வரும் அப்படிபட்ட காரகன் அவனது வீட்டிலேயே ஆட்சி பெறும்போது அந்த அந்த காரக விஷயங்கள் பலப்படுகின்றன.

இதன் பலன்கள் -
ஏதேனும் தனித்துவமான திறமைக்கு வாய்ப்பும் உண்டாகும், நல்ல ஆயுள், ஆரோக்கியம், மற்றவர்களிடம் இருந்து பாராட்டைப் பெறும் படியாக புதிய விஷயங்கள் படைப்பது, வெற்றிக்காக சிறப்பான நடவடிக்கைகள் எடுப்பதில் சிறந்த கருவியாக செயல்படுவது, நற்பெயர் கொண்டவர், ஆளுமைத்திறன் உடையவர், படைப்பாளி. அது போக ஆட்சி பெற்ற அந்த அந்த ஸ்தானத்தின் காரக பலன்களும் வலுவாக இவருக்கு நடக்கும்


0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 52 - விசேஷகாரக யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger