மிதுனம் & விருச்சிகம், மிதுனம் vs விருச்சிகம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…


மிதுனம் & விருச்சிகம், மிதுனம் vs விருச்சிகம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ விருச்சிகம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

மிதுனம் & விருச்சிகம், மிதுனம் vs விருச்சிகம் -


இந்த இரு மிதுன விருச்சிகம் இராசிகளும் 6 ஆம், 8 ஆம் ஸ்தானம் என்ற மறைவு ஸ்தான அமைப்பை பெற்ற ராசிகள் என்பதால் ஒருவருக்கொருவர் வேறுபாடு கொண்டுள்ள மகிமையால் உருவாக்கபட்டது எனவே இந்ந இரு இராசிகாரர்களுக்கும் வரும் நட்பானதும் ஒத்த சூழலில் ஒத்த கருத்தில் ஆனால் வேறுபட்ட அடிப்படை புரிதல்களுடன் உருவாகும்.  இங்கே இரு திருக்குறளை சுட்டிகாட்டுகிறேன்

நட்புக்கு -

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை,

தான் சாம் துயரம் தரும். - திருவள்ளுவர்

பொருள் - நண்பரின் குணம் மற்றும் குற்றம் போன்றதை ஆராய்ந்து ஆராய்ந்து அதன் பின் நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் அவனுக்கு இறத்தலுக்கு ஒப்பான துயரத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

காதலுக்கு -

உடம்பொடு உயிரிடை என்ன, மற்று அன்ன-

மடந்தையொடு எம்மிடை நட்பு. - திருவள்ளுவர்

பொருள் - உடம்பை பற்றிய அக்கறையை மறக்காமல் இருக்கிறது உயிர். உயிரின் தேவையான ஆற்றலை ஏற்படுத்தி தருகிறது உடம்பு இப்படி ஒன்று கலந்து நிற்கும் இந்த உறவைப்போல தான் இப்பெண்ணோடு எனக்குமிடையே ஆன அன்பும்.

இது போன்ற இலக்கண நிலைகளில் நட்பு உறவு கொள்ளவதற்கும் அல்லது காதல் உறவு கொள்வதற்குமான தற்காலத்தில் வாய்ப்பும், காலசூழலும் அனைவருக்கும் ஒத்திருக்கிறதா என்று கேட்டால் சந்தேகமே எழுகிறது. சூழல் மற்றும் ஈர்ப்பு வசத்தால் எழுப்ப படுகின்ற நட்பும் அல்லது காதலும் நீண்ட காலம் உபயோக படாது என்ற முழு விழிப்புணர்வுடனே பலரும் இக்காலத்தில் நட்பும் அல்லது காதலும் கொள்ளப்படுகிறது. உடனடி வளர்ச்சி, உடனடி உணவு, உடனடி தேவை அது உடனடி நிறைவேற்றம் என்று உடனடி உலகம் உருண்டு கொண்டிருக்கிற படியாலும் சூழல் மற்றும் ஈர்ப்பு வசத்தால் எழுப்ப படுகிற உறவுகளே அதிகம் என்பதால் ஆராய்ந்த நட்போ அல்லது அக்கறையான காதலோ ஏற்பட காலமும் கடவுளும் ஒத்துழைத்தால் மட்டுமே உண்டு.

மேலே சில விஷயங்களை சொன்னதற்கு காரணம் வேடமிட்ட அல்லது மாறுபட்ட மனிதர்களுக்கும் சூழலால் உறவுகள் அதிகமாக அமையும் தற்காலத்தை வெளிபடுத்தவே. அப்படி மாறுபட்ட அதாவது அதிக கவன நுட்பம் காட்டக்கூடிய மேலும் அதிக மறைவு உறுதி கொண்ட விருச்சிக ராசிக்கும், எளிதாக மாற்றி எடுத்து கொள்ளத்தக்க மேலும் சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டையான பண்பும் கொண்ட மிதுன ராசிக்கும் இடையே ஏற்படும் நட்பும் அல்லது காதலும் மேலே சொல்லிய வசத்தால் விளைவதே. ஒரு விஷயத்தை எளிதாகவும் எதார்த்தமாகவும் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒருவரும், ஒரு விஷயத்தை ஆழமாகவும் அழுத்தமாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒருவரும் இதை நன்கு புரிந்த தன் அடிப்படையில் நட்பை அல்லது காதலை அமைத்துக் கொள்ளவேண்டும். அப்போது அவர்களின் ஒவ்வொருவரின் இலக்கு சார்ந்த வெற்றியும் உறுதியாக இருக்க முடியும்.

மிதுன ராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் விருச்சிகம் ராசிக்காரர் இராசிநாதன் செவ்வாய் ஆகும் இந்த கிரகங்கள் தங்களுக்கிடையே புதனுக்கு செவ்வாய் சம உறவுமுறை மற்றும் செவ்வாயிக்கு புதன் பகை உறவுமுறை என வரக்கூடிய கிரகங்கள், சந்திர புதன் அதாவது மிதுன ராசி சிறந்த தொடர்பாடல் திறன் கொண்டது விவாதமும் கொண்டது சந்திர செவ்வாய் அதாவது விருச்சிக ராசி ஆழமான அர்த்தம் அல்லது தொடர்பற்ற பேச்சும் கொண்டது எனவே அதிக அளவில் உணர்ச்சியும் மற்றும் அடிக்கடி வாதமும் ஆபத்தை தரும். ஒருவர் மற்றவரிடம் உள்ள அக்கறையை அடிக்கடி வெளிப்படுத்த வேண்டும். செவ்வாய் என்பது ஆர்வம் விருச்சிக சந்திரன் என்பது உள் ஆர்வம் அந்த உள் ஆர்வத்துடனே செயல்களை நோக்கும். விருச்சிக ராசிக்காரரின் உடைமையாக்கல் செயலுக்கும் மிதுனத்தின் காரண அறிவுத்திறன் உதவக் கூடியதாக இருக்கும்.

மிதுனம் ஒரு காற்றுத்தன்மை இராசியாகும் விருச்சிகம் ஒரு நீர்த்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது இருவரும் சாதகமான நகர்வை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் விரும்பக்கூடியவர்கள் அதனால் சாவல்களை சலிப்படையாமல் எடுத்துக் கொள்ளும் தன்மை வரும். நல்ல வெளிப்பார்வை இருக்கும் இருந்தாலும் மர்மமான பகுதிகளும் உடையவர்கள் அதனால் ஒருவருக்கொருவர் சமாதான ஒப்பந்தம் இருவருக்குமிடையே இருப்பது நட்புக்கு நல்லது காதலானால் ஒருவருக்கொருவர் பொய்களை குறைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாரமான பயணமாக வாழ்க்கையாக இருக்க வாய்ப்பு உண்டாகும். ஒருவருக்கொருவர் பேரம் பேசும் தன்மையோடு பழகாமல் உயிரோட்டத்தை ஏற்படுத்தி கொள்ள முயல வேண்டும். இருவருக்கும் அறிவுஜீவித்தனத்தை பயன்படுத்தி ஒன்றாக வேலையில் வெற்றிகான அடிப்படைக் கூறுகள் கொண்ட கூட்டு இது ஆகும். விருச்சிக ராசிக்காரருக்கு ஏதேனும் குழப்பம் உண்டானால் மிதுன ராசிக்காரர் வியூகங்களை வகுத்து அதில் கொண்டு போய் விருச்சிக ராசிக்காரரை விட்டு விடுவார். சில சமயம் அது விருச்சிக சுதந்திரத்தை பாதிக்கலாம்.

மிதுனம் ஒரு உபய இராசியாகும் மற்றும் விருச்சிகம் ஒரு ஸ்திர இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது பல யோசனைகளையும் பல ஆலோசித்தலை செய்ய வல்லவர்கள் மேலும் இரண்டு எதிர் எதிர் கருந்தையும் ஒரே மாதிரி விவாதிப்பார்கள். அனுபவத்தை முதலான விஷயங்களாக வைத்து நடக்கும் விருச்சிக ராசிகாரர். எனவே நண்பர்களோ அல்லது காதலர்களோ இருவரும் இணைக்கப்பட்ட நிலையான மற்றும் விஷயங்களை முடித்த மட்டும் பகிர்ந்து கொண்டு அதில் முழுமையாக ஒருவரை ஒருவர் ஈடுபடுத்தி கொண்டால் வெற்றிக்கு உதவும். இருபாலரது அம்சமும் கொண்டது மிதுனம் என்பதால் நகைசுவையும் மற்றும் பகுத்தறிவும் இரண்டும் கொண்டவர்கள் இத்துடன் வலிமையான சந்திர விருச்சிகம் சேர விருச்சிகத்தின் லட்சியமும் ஆழமான ஈடுபாடும் சேர்ந்து இருவருக்கும் எடுத்த ஒரு காரியத்தில் வெற்றியை பெற்று தர உதவும்.

 


0 Response to "மிதுனம் & விருச்சிகம், மிதுனம் vs விருச்சிகம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger