நவாம்ச லக்னம் கடகமானால்...

நவாம்ச லக்னம் கடகமானால் - கடகம் நவாம்ச லக்னமாக வரும்போது...

அசுவினி 4 பாதம்
ரோஹிணி 4 பாதம்
புனர்பூசம் 4 பாதம்
மகம் 4 பாதம்
ஹஸ்தம் 4 பாதம்
விசாகம் 4 பாதம்
மூலம் 4 பாதம்
திருவோணம் 4 பாதம்
பூரட்டாதி 4 பாதம்

ஒருவரின் லக்னமானது மேல் உள்ள நட்சத்திர பாதத்தில் இருக்கும் படி ஒருவர் பிறப்பை எடுத்திருந்தால் அவருக்கு நவாம்சத்தில் கடகம் லக்னமாக வரும் அப்படி கடகம் நவாம்ச லக்னமாக வரும்போது - அவரது உறவினர்களுக்கு உதவும் மனப்பான்மை மற்றும் உணர்வுப்பூர்வமான குணங்கள்.  சொந்த செல்வாக்கு உடையவர். அந்நிய நாடுகளில் வாழ்கின்ற வாய்ப்பு. செல்வ செழிப்போடு இருக்கும் நிலை. ஆவேசமாகக் கூடிய சூழல் அடிக்கடி ஏற்படல். நீர் (கபம்) தேகம். அடிக்கடி பயணங்கள். கலைகளில் வாசனை திரவியங்களில் நாட்டம். உணர்ச்சி பெருக்கு உடையவர். காதல் கடந்து போகும். முரட்டுத்தனமான பிடிவாதங்கள். ஆடம்பரமாக அல்லது சில விளையாட்டுதனமான குறும்புகள் மற்றவரை எரிச்சல் உண்டாக்கும். தன்னலமற்ற அன்பு. தகவல் தொடர்பு ஆற்றல் ஆகியவற்றை உண்டாக்கும். இது நவகிரகங்களில் சந்திரன், குரு, சூரியன் போன்ற கிரகங்களுக்கு ஏற்ற நவாம்ச இடம் ஆகும்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


1 Response to "நவாம்ச லக்னம் கடகமானால்..."

  1. Unknown says:

    ஐயா மிருகசீரிஷம் 1ஆம் பாதம் நவாம்சத்தில் எந்த லக்னமாக வரும்

கருத்துரையிடுக

Powered by Blogger