பஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புகளும் அதன் ஐம்பூத தன்மையும்…


பஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புகளும் அதன் ஐம்பூத தன்மையும்

ஜோதிடத்தின் ஆதார அமைப்புகளில் முக்கியமானது பஞ்சாங்கம் ஆகும் பஞ்சாங்கம் என்றால் வாரம் - திதி - நட்சத்திரம் - யோகம் - கரணம் ஆகிய ஐந்தின் அங்கத்தின் சேர்மான வார்த்தை தான் பஞ்சாங்கம். இந்த பஞ்சாங்க பிரிவு ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத் தன்மையோடு ஒப்பிட படுகிறது. அதாவது இந்த பிரபஞ்சத்தை இந்து மதம் ஐந்து பிரிவுகளில் அடக்கி காட்டுகிறது அது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்தது தான் அதாவது நெருப்பு, நீர், நிலம், காற்று,  ஆகாயம் (விண்) இவைகளின் கூட்டு கலவை தான் உடலும் உலகமும் மற்றும் ஜோதிட கணிப்புகளுக்கு ஆதாரமாக இருப்பதும் இந்த ஐம்பூதங்கள் தான் இதன் பஞ்சாங்க ஐந்து உறுப்புகளுடன் ஐம்பூத தன்மை ஒப்பிட்டு பார்க்கும் அதன் விவரமே இது.

1. வாரம்
ஏழு கிழமைகள்
நெருப்பு பூதத்தன்மை மிகுந்தது
2. திதி
சந்திரன் பூமியைச் சுற்றி கொள்ளும் காலத்தின் சூரியனோடு பொருத்தி வகுக்கப்படும் 30 பிரிவுகள்
நீர் பூதத்தன்மை மிகுந்தது
3. கரணம்
திதியின் அரைப்பங்கு முன்காலம் பின்காலம் பிரிக்கபட்ட இரண்டு பிரிவு
நில பூதத்தன்மை மிகுந்தது
4. நட்சத்திரம்
27 நட்சத்திரங்கள் கொண்ட வெட்டவெளி இராசி சக்கரம்
காற்று பூதத்தன்மை மிகுந்தது
5. யோகம்
சூரியன், சந்திரன் இடைவெளி சுற்றின் 27 பாகங்கள்
ஆகாய பூதத்தன்மை மிகுந்தது


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "பஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புகளும் அதன் ஐம்பூத தன்மையும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger