கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 3

கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 3

கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் என்ற பதிவின் முதல் இரண்டு அறிமுக பகுதிகளை படித்த அன்பர்களுக்கு இந்த கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் பதிவுகளின் வரிசையில் மூன்றாம் பகுதியில் இருந்து ஒரு கோடீஸ்வரின் ஜாதகத்தை எடுத்து அதன் பொதுவான மேலோட்டமான சிறப்பு அம்சங்களை பார்க்க இருக்கிறோம். தற்போது எடுத்து உள்ள ஒரு கோடீஸ்வரின் ஜாதகம் இது


அவர் பிறந்த சமயத்தில் வானில் கிரகநிலையின் மாதிரி வடிவம் -


பாரம்பரிய முறைபடி முதலில் பணபர ஸ்தானங்களின் பலத்தை பார்ப்போம் ஜென்ம லக்னத்திற்கு 2,5,8,11 ஆம் ஸ்தானங்கள் பணபர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றன அதாவது கேந்திர ஸ்தானங்களுக்கு அடுத்து அடுத்து வரும் ஸ்தானங்களெல்லாம் பணபர ஸ்தானங்கள் ஆகும், பணபர ஸ்தானங்கள் ஒருவரது ஜாதகத்தில் அவரின் செல்வ வளத்தை காட்டும் ஸ்தானங்களாக உள்ளன. அதன்படி இவரின் ஜாதகத்தை பார்ப்போம்

முதலில் இவரின் 2 ஆம் ஸ்தானம் பற்றி பார்த்தால் இரண்டுக்கு உடைய இராசியாதிபதி சூரியன் தனது சொந்த இராசியையே பார்வை செய்கிறார் இன்னொரு பணபர ஸ்தானம் ஆன 8 ஆம் ஸ்தானத்தில் இருந்து அந்த பார்வை விழுகிறது. இங்கு சிலருக்கு 2 ஆம் ஸ்தானத்து அதிபதி மறைவு ஸ்தானமான 8 வீட்டிற்கு போவது பாதிப்பு இல்லையா மேலும் சூரியனுடன் கேதுவும் மாந்தியும் சேருவதும் பாதிப்பு இல்லையா என்று கேட்க தோன்று பலவீனம் நிகழாமல் பலம் ஒன்று அடையாது வேறுவழியில் சொல்வதானால் தியாகம் செய்யாமல் பெரும் உயர்வை அடைய முடியாது. அதாவது சூரியன் 8ற்கு போனது கேதுவும் மாந்தியும் சேர்ந்தது போன்ற காரணத்தால் தனது இளம்வயதிலேயே தந்தை இழந்தார்.

இவரின் 5 ஆம் ஸ்தானம் பற்றி பார்த்தால் ஐந்துக்கு உடைய இராசியாதிபதி செவ்வாய் தனது சொந்த இராசியிலேயே 10 ஆம் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி அடைகிறது இன்னொரு பணபர ஸ்தானம் ஆன 8 ஆம் ஸ்தானத்து அதிபதியுடன் சேர்ந்தும் இருக்கிறது.

அடுத்து இவரின் 8 ஆம் ஸ்தானம் பற்றி பார்த்தால் எட்டுக்கு உடைய இராசியாதிபதி சனி 10 ஆம் தொழில் ஸ்தானத்தில் நீசம் பெற்றிருக்கிறார் இங்கு தான் ஆச்சரியங்கள் இருக்கிறது நாம் ஏற்கெனவே பல பிரபலங்கள் ஜாதகங்களில் பார்த்துள்ள நீசபங்க ராஜயோகம் தான் இங்கு சனிக்கும் நிகழ்ந்துள்ளது உடன் செவ்வாய் ஆட்சியாவதாலும் மற்றும் மற்ற தசவர்க்க கட்டங்களில் முக்கியமாக தசாம்சம் மற்றும் சப்தாம்சம், சஷ்டாம்சம், பஞ்சாம்சம் ஆகிய ஐந்து வர்க்க கட்டங்களில் சனி ஆட்சி மற்றும் உச்சம் அடைந்திருப்பது இது எல்லாம் சேர்ந்து நீசபங்க ராஜயோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து இவரின் 11 ஆம் ஸ்தானம் பற்றி பார்த்தால் 11க்கு உடைய இராசியாதிபதி சுக்கிரன் 7ல் அமர்ந்து லக்னத்தை பார்வை செய்வதுடன் சனியின் அதாவது 7,8 ஆம் ஸ்தானத்து அதிபதி பார்க்கபடுகிறது.

இப்படி பணபர ஸ்தானங்களுக்குள் வலுவான தொடர்பு ஏற்பட்டுள்ளது போக தொழில் ஸ்தானம் ஆன 10 ஆம் ஸ்தானாதிபதி வலுவாக இருப்பது தொழிலால் கோடீஸ்வர நிலையை அடையும் ஒருவருக்கு மிக முக்கியம் இவரின் 10 ஆம் ஸ்தானாதிபதி 10 ஆம் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதும் மற்றும் நவாம்சத்திலும் லக்னத்தில் ஆட்சி பெற்றிருப்பதும் வெளிப்படையாக பலத்தை காட்டுவதாக இருக்கிறது. அதுவும் அது செவ்வாய் ஆக இருக்கிறது 5ஆம் ஸ்தானத்திற்கும் அவர் அதிபதி என்பதாலும் கடக லக்னத்திற்கு யோகாதிபதி என்பதாலும் இந்த ஆட்சி அமைப்புகள் மிகவும் பலமாக கருதலாம்.

இந்த ஜாதகரின் தொழில் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக தற்போது பார்க்கலாம். இவர் பொதுவாக ஆரம்பத்தில் எல்லாரையும் போல கல்லூரி படிப்பை முடித்தார் அதாவது மின் பொறியியல் அறிவியல் இளங்கலை பட்டம் (Bachelor of Science degree in Electrical Engineering) முடித்தார் பின்பு முதுகலையில் உயர்நிலை வணிக நிர்வாகம் (Master of Business Administration) பட்டம் பெற்று பின் ஒரு முதலீட்டு வங்கி அதாவது ஆங்கிலத்தில் அதை Investment banking என்று அழைக்கிறார்கள்

அதன் அடிப்படை பணி வங்கி பணிப் பிரிவுகளில் முதலீட்டு வங்கி நிறுவனத்தின் பணி என்பது அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பிற தனியார் அல்லது கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான மூலதனச் உருவாக்கம் தொடர்பான வங்கி சேவை. புதிய கடன் மற்றும் பங்கு பத்திரங்களின் விற்பனை உதவி. நிறுவன இணைப்பு மற்றும் கையகப்படுத்துதலுக்கு உதவுதல் மற்றும் ஒரு நிறுவனத்தின் பங்கு தரகர் வர்த்தகத்தை எளிதாக்க உதவுதல். நாணய ஆவண சேவை போன்ற பணிகளை செய்வது தான் ஒரு முதலீட்டு வங்கி நிறுவனத்தின் அடிப்படை பணிகள்

இப்படிபட்ட ஒரு முதலீட்டு வங்கி நிறுவனத்தில் அடிப்படை ஊழியராக வேலைக்கு சேர்கிறார் அடுத்த சில ஆண்டுகளில் அவர் அந்த நிறுவனத்தின் உயர் பொறுப்பில் அமரும் நிலைக்கு உயர்கிறார், பின் அந்த சிறிய முதலீட்டு வங்கி நிறுவனத்தை அதைவிட பெரிய ஒரு முதலீட்டு நிறுவனத்தால் வாங்கப்பட்டது அப்போது இவரை அந்த முக்கிய பொறுப்பில் இருந்த விலகி கொள்ள ஒரு குறிபிட்ட தொகை இவருக்கு விலகல் தொகுப்பாக வழங்கப்பட்டது,

அப்படி வழங்கபட்ட தொகையை முதலீடாக கொண்டு ஒரு சந்தைபடுத்தல் மற்றும் நிதி சார்ந்த சேவையை செய்யும் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். பின் சிறு வளர்ச்சிக்கு பிறகு ஒரு செல்வ மோலாண்மை (wealth management) நிறுவனத்தை தன் நிறுவனத்துடன் இணைத்து கொண்டார் அதிலிருந்து சந்தைபடுத்தல் மற்றும் நிதி சார்ந்த தொழில் நுட்ப உதவிகள் மற்றும் மென்பொருள் சேவையாக விரிவாக்கினார். அடுத்த கட்டமாக இணையம், ஊடகம் மற்றும் மென்பொருள் சேவை வழியாக உலகமெங்கும் தனது தொழில்நுட்ப சேவையை வழங்கும் வகையில் அந்நிறுவனத்தை கொண்டு சேர்த்துள்ளார். இதற்கு இடையில் இவருக்கு அரசியல் ஆர்வமும் வந்தது அரசியலில் போட்டி இட்டு நகர மேயர் என்ற நிலைக்கும் உயர்ந்தார். பின் சமூகநலன் மற்றும் மனிதாபிமான சேவைக்காக தான் ஈட்டிய பணத்தில் பெரும்பகுதியை செலவு செய்து வருகிறார்.

இவரின் 10 ஆம் ஸ்தானாதிபதி 10 ஆம் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பதும் அதுவும் அது செவ்வாய் கிரகமாக இருப்பதால் மேலும் அதன் சாரம் 4,11க்குடைய சுக்கிரனின் சாரத்தில் இருப்பதாலும் வட்டி மற்றும் வர்த்தகம் சார்ந்த நிதி சேவையிலும், 5ஆம் அதிபதியாகவும் செவ்வாய் இருப்பதால் பங்குசந்தை சேவை செய்தல் ஏற்பட்டது, புதன் சந்திரன் மற்றும் சுக்கிரனின் லக்ன பார்வையால் ஊடகம் மற்றும் மென்பொருள் சேவை என தொழில் விரிந்தது.

கடக லக்னத்திற்கு என்று சில சிறப்பியல்புகள் உண்டு அதில் ஒன்று காலத்திற்கு தகுந்தாற் போல தன்னை மாற்றிக் கொள்ளும் திறமையும் மேலும் இடத்திற்கு மற்றும் மனிதருக்கு தகுந்தாற் போல தன்னை மாற்றிக் கொள்ளும் திறமையும் உண்டு இவரின் லக்னாதிபதி சந்திரன் இவரின் கடக லக்னத்தை பார்வை செய்வதால் அந்த திறமை இவருக்கு கைகூடியது,  முதலில் நிதி சார்ந்த ஊழியராக தொடங்கி கடைசியில் ஒரு ஊடக நிறுவனம் மற்றும் மென்பொருள் நிறுவனம் என்று தன்னை மாற்றியும் மற்றும் காலத்திற்கு தகுந்தாற் போல தன் நடவடிக்கைகளை புதுபித்தும் கொண்டுள்ளார். இது ஒரு தொழிலதிபருக்கு முக்கியமான திறமையும் குணமும் ஆகும் அதாவது

1) காலத்திற்கு தகுந்தாற் போல தன்னையும் புதுபித்து மற்றும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
2) காலத்திற்கு தகுந்தாற் போல தொழிலுக்கான கருவிகளை நுட்பங்களையும் புதுபித்து மற்றும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
2) காலத்திற்கு தகுந்தாற் போல தொழிலில் தன்னுடன் பயணிக்கும் மனிதர்களையும் புதுபித்து மற்றும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த மூன்று பண்பும் ஒரு வெற்றிகரமான தொழிலதிபருக்கு இருக்கும் அல்லது இருக்க வேண்டும் இதை சுருக்கமாக ஆங்கிலத்தில் Updating ability என்று அழைக்கிறார்கள்.  மீண்டும் அடுத்த பகுதியில் வேறு ஒரு  ஒரு கோடீஸ்வரின் ஜாதகம் வழியாக காண்போம்.



0 Response to "கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் - பகுதி 3"

கருத்துரையிடுக

Powered by Blogger