அன்னை தெரேசா (Mother Teresa) புனிதரின் ஜாதகம் ஒரு மேன்மையான பார்வை…

அன்னை தெரேசா (Mother Teresa) புனிதரின் ஜாதகம் ஒரு மேன்மையான பார்வை

இவருக்கு அறிமுகமே தேவையில் தாய்மை அன்பின் வடிவமாக இருந்து தமது வாழ்நாளில் நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப் பட்டவர்களுக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர். சிறந்த சமூக சேவைக்காக உலகம் முழுவதும் புகழப்பட்டவர் தம் வாழ்நாளில் அமைதிக்கான நோபல் பரிசும், பாரத ரத்னா விருதினையும் பெற்றார். இதற்கெல்லாம் மேலாக மக்களால் அன்னை என்ற உயரிய பட்டத்தை பெற்று அன்னை தெரேசாவாக தொண்டு களுக்காகவே இயக்கியவர். இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவைவற்றை அமைத்து தமது வாழ்வை சேவையாகவே அமைத்து இறுதியில் இறைவனின் திருகரங்களை அடைந்தவர்.

பிரபலங்களின் ஜாதகங்களில் சொன்னது போல இவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லுவதற்கு இந்த பதிவை எடுக்கவில்லை இவரின் புனித தன்மைக்கு அமைப்பாக இருக்கும் ஜோதிட கருத்துகளை சொல்லுவது மட்டுமே நோக்கும் எனவே ஆராய்ச்சிக்கு போகாமல் என்னுள் தோன்றும் முக்கிய கருத்துக்களை மட்டும் சமர்ப்பிக்கிறேன்.
அன்னை தெரேசா ஜாதகம்


சாலையிலேயோ மற்றும் பொதுக்கூடங்களிலேயோ நோய்வாய்பட்டோ அல்லது ஆதரவு அற்றோ துயரத்தில் தவித்து கொண்டிருப்பவர்களை பார்த்து தானும் தன்னுள் இதை தாங்க முடியாமல் தவித்து அவர்களுக்கு உதவ தனது வாழ்வின் பாதைகளை அப்படிபட்ட நபர்களை நோக்கி வைத்து சேவைகளை தொடங்கும் யாரும் புனிதரே அப்படிபட்ட புனிதர்களின் அடையாளமாக உள்ளவரே அன்னை தெரசா போன்ற சிறந்த உயிர்கள், இரக்கமும் அன்புமே இவர்களுக்கு இறைவன் அளித்த கருவிகள் தன் வாழ்நாளில் ஒரு மணி நேரத்தைக்கூட கருணைக்கும் சேவைக்கும் செலவளிக்க முடியாமல் இருக்கும் எத்தனையோ மனிதர்களுக்கு நடுவில் தம் வாழ்நாள் முழுவதையும் கருணைக்கும் சேவைக்கும் அளிப்பவர்கள்.



தாய்மையின் பெருமையை எப்படி ஆரம்பிப்பேன் இருந்தாலும் இறைவனின் படைப்பின் சிறப்பை காட்டுவதற்கு ஆதாரமாக இருக்கும் என்பதால் ஆரம்பிக்கிறேன் சந்திரனுடன் சேர்ந்து தனிபட்டு சனி மட்டும் வலுவிழந்ததால் சனியான மாயை, கொடுமை போன்ற தன்மைகள் மறைந்து சந்திரன் வலுத்ததால் சந்திரனின் தன்மையான தாய்மை பண்புகள் நிறைந்தவராக இருந்தார். சந்திரனும் சனியும் இருவரும் பரணி சாரம் பெற்று அந்த சாரநாதன் சுக்கிரன் 8ல் மறைந்து போனதால் தனக்கு என்று பெரிய ஆடம்பரங்களை விரும்பாமல் எளியவருக்கு எளியவராக சென்று சேவை செய்தார்.



புனிதர், மகான், ஞானிகள் ஜாதகங்களில் திரிகோண ஸ்தானமான 1,5,9 பொதுவாக சிறப்பாக இருக்கும் என்பது விதி இவரின் ஜாதகத்திலும் அது தெளிவாகிறது சந்திரனும் சனியும் வலுவிழந்து தமக்கென இல்லற வாழ்க்கை இன்றி போனது மட்டுமில்லாமல் அவர்கள் இருவரும் இருக்கும் திரிகோண ராசிநாதன் 5க்குடைய செவ்வாய் இன்னொரு திரிகோண ஸ்தானமான 9ல் ஆட்சி பெற்ற சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்க தோஷம் அடைந்து போனதால் அகங்காரமும் கெட்டு நானே சேவை செய்கிறேன் இதற்கு பெருமை என்னுடையது என்ற அகம்பாவம் மறைந்து போய் ஆண்டவனின் கருணையின் பெயரில் இச்சேவைகளை செய்தார். லக்னாதிபதியான குரு பகவான் அம்சத்தில் உச்சம் பெற்று அமைந்து லக்னமும் பலப்பட்டது அதனால் திரிகோண ஸ்தானமான 1,5,9 சிறப்பானது.



9க்குடையவர் 9ல் ஆட்சி பெற்றால் மறையாத புகழை ஈட்டுவார்கள் என்பது பொது விதி மேலும் ஒருவரின் தான, தர்ம குணங்களையும் மதம் சார்ந்து அதை செய்யும் செயலை காட்டும் ஸ்தானமாக இருப்பதுவும் இந்த 9ஆம் ஸ்தானமே அப்படிபட்ட 9க்குடையவர் ராஜகிரகமான சூரியனாகவே அமைந்து அந்த சூரியன் 9ல் ஆட்சி பெற்றது மேலும் சிறப்பு சரி ஆனால் அவருக்கு சூரியனின் காரகத்துவமான அதிகாரம் பிடிக்காமல் சூரியனின் மற்றொரு காரகத்துவமான மக்களை பாதுகாத்தல் என்ற பண்பு ஜெயித்ததற்கு காரணம் என்ன என்று தோன்றலாம் அதாவது இவர் பிறந்தது கேதுவின் நட்சத்திரத்தில் சூரியனும் கேதுவின் நட்சத்திரத்தில் அதாவது சூரியனும் சூரியனின் புள்ளி விழும் லக்னமும் இரண்டும் ஞான காரகனான கேதுவின் நட்சத்திரத்தில் அதனால் அடக்கத்துடன் ஞானத்துடனும் விடாத முயற்சியுடன் அதே நேரத்தில் தலைவியாக இருந்து ஆரோக்கிய சேவைகளை செய்து வந்தார்.



10க்குடைய புதன் 10ல் ஆட்சி பெற்றதால் அதுவும் 9க்குடைய ஆட்சி பெற்ற சூரியனின் சாரத்தில் உத்திர நட்சத்திரத்தில் அமைத்து மிகுந்த வலிமையாக மற்ற வர்க்க கட்டங்களிலும் அமைந்துள்ளார் புதன், 10 ஆம் ஸ்தானத்தின் காரகத்துவமாக சமுக சேவை, பொது சேவைகளை தம் வாழ்நாள் முழுக்க அதாவது கடைசி நாட்கள் வரை செய்தவர் ஆனார் இதனால் பல மக்களின் அன்புக்கும் பாத்திரம் ஆனார். உடன் 10ல் குரு பகவானும் சேர்ந்து உள்ளதால் மற்றும் அம்சத்தில் 4ல் உச்சமாகி 10க்கு தொடர்பு பெறுவதால் தான் செய்தது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் சேவை செய்ய வழிகாட்டியாகவும் தூண்டு கோளாகவும் எப்போதும் இருந்து வந்தார் இனி மேலும் வருவார்.



பன்னிரண்டாம் வீட்டின் காரகத்துவங்கள் என்ற பதிவில் நாம் ஏற்கெனவே எழுதியது போல் 12 ல் கேது இருந்தால் அடுத்த பிறவியில்லை என்றும், மோட்ச பிறவி என்று பொதுவாக சொல்வார் என்று ஆனால் மேலே உள்ள பதிவில் அடியேன் எழுதியது போல் 12 ல் இருக்கும் கேது நல்ல நிலையில் நின்று அந்த கேது - சனி, குரு, சூரியன் போன்ற கிரங்களின் சாரம் அல்லது சுய சாரம் பெற்றால் தான் அடுத்த பிறவியில்லா அமைப்பு மற்றும் மோட்ச பிறவி போன்ற யோகம் ஏற்படும் என்று எழுதியிருந்தேன் அன்னை தெரசாவின் ஜாதகத்தில் 12ல் கேது அது மட்டும் அல்லமால் விசாகம் நட்சத்திரம் 4        ஆம் பாதம், விசாகம் குருவின் ஆதிக்க நட்சத்திரம், மேலும் விசாகம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் ஆனதால் குருவும் ஹஸ்தம் 4 பாதம் ஆனதால் இருவரும் நவாம்சத்தில் சேர்ந்து அதில் குரு உச்சமும் அடைந்ததால் அன்னை தெரசாவை உலகம் புனிதராகவும் கொண்டாடுகிறது, ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் மோட்ச பிறவியாக கருதி போற்றுகிறேன் நன்றிகள் பல கோடி.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "அன்னை தெரேசா (Mother Teresa) புனிதரின் ஜாதகம் ஒரு மேன்மையான பார்வை…"

கருத்துரையிடுக

Powered by Blogger