விநாயகரும் கேது பகவானும் தொடர் பதிவு 2…

விநாயகரும் கேது பகவானும் தொடர் பதிவு 2…


கேது பகவான் ஜோதிடத்தில் முக்கிய கிரகமும் சூரிய சந்திரையும் மறைக்கும் அளவுக்கு பலம் வாய்ந்த நிழல் கிரகம் அதாவது புராணங்களில் கிரஹணம் உண்டாவது ராகு கேதுவால் என்பது ஐதீகம். அமுதம் கொடுக்கும் போது, சைம்ஹிகேயன் என்ற அசுரன் தேவர் வடிவில் வந்து, அம்ருதம் உட்கொள்ள, அதை சூர்ய சந்திரர்கள் பார்த்து விஷ்ணுவிடம் கூற அவர் தன் சக்ராயுதத்தால், அவனை வெட்ட, அத்துண்டங்களே ராகு கேது ஆயினர் புராண கதை.

அதாவது மற்ற அசுரர்களைப் போல் சைம்ஹிகேயன் மோகினியிடம் (மோகினியாக வந்த விஷ்ணு)மயங்கிவிடாமல் இருக்கும் ஞானம் பெற்றவானாக அதே நேரத்தில் அமுதம் அருந்தும் மோகம் கொண்டவனாக திருட்டுத்தனமாக சென்று அமுதம் உண்டான் இதில் இருந்து இராகு கேதுக்கள் ஞானம், போகம், மோகம், கள்ளத்தனம் உடையவர்கள் என்பது தெளிவாகிறது இதில் ஞானம், போகம் வடிவத்தின் துண்டாக வந்தவரே கேது பகவான் எனவே நாடி ஜோதிட சித்தர்கள் கேதுவை ஞானி என்ற அழைப்பர்,

இவரின் காரகத்துவம் தாய் வழிச் சொந்தம், முற்பிறவி கர்மா, வேதங்கள் சாஸ்திரங்கள், மெய்ஞானம், அஷ்டமா சித்திகள், குண்டலினி சக்தி, மருத்துவம், மூலிகைகள், தெய்வீக செயல், ஞான திருஷ்டி, ஆழமான மதம் தொடர்பான உட்புற சடங்குகளுக்கு காரகன், ஞான காரகன், மாயா காரகன் போன்ற பல காரகத்துவங்களை பெற்றவராகும், அஸ்வினி நட்சத்திரம் மூலமாக முற்பிறவி கர்மவினைகள் தந்து பின் மகம் நட்சத்திரம் மூலமாக அந்த வினைகளின் புண்ணிய பாவ பலன்களை முழுவதுமாக அனுபவிக்க வைத்து மூலம் நட்சத்திரம் மூலமாக ஞானம், அறிவாற்றல், இறை அருளை நோக்கி மனிதர்களை செலுத்தும் செயல்கள் ஆகியவற்றை தருவார் என்பது நமது பழமையான ஐதீகம், முற்பிறவி கர்மாவின் காரகன் என்பதால் தான் அஸ்வினி என தொடங்கும் 27 நட்சத்திரங்களில் அஸ்வினியின் அதிபதி கிரகமாக ஆனார்,

எனவே முற்பிறவியின் மூலம் உருவான வினைகள் தீய வினைகளாக இருந்தால் இவர் தரும் வேதனைகள் அதிகமாக இருக்கும் குறிப்பாக கேது ஆத்மகாரகனான சூரியனுக்கு பாதிப்புகளை விட மனோகாரகன் ஆன சந்திரனுக்கு தரும் பாதிப்புகளே அதிகம் எனவே மனதை பிழிந்து எடுத்துவிடுவார்,  மேலும் ஜாதகத்தில் சந்திரனோடு கேது சேர்ந்தவர்களும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்திரத்தில் பிறந்தவர்கள், நவாம்சத்தில் சந்திரனோடு கேது சேர்ந்தவர்களும், லக்னம் கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்திரத்தில் இருந்தாலும், கேதுவினோடு அதிகமான கிரகங்கள் சேர்ந்து பிறந்தவர்களும், கேதுவின் திசை நடப்பவர்களும் எப்போதும் வணங்க தக்கவரும் பரிகாரத்திற்காக வழிபடதக்கவரும் ஆன

கேது பகவானின் ஆதிதேவதையான மூலாதார மூர்த்தியான ஸ்ரீ மஹாகணபதி ஆகும் எனவே இவர்கள் விநாயகரை வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும், விநாயகரை வணங்கிவிட்டு சிறிய பெரிய காரியங்களை தொடங்க வேண்டும்.

வினைகள் நசிப்பதால் தான விக்னேஷ்வரன் விநாயகன் என்றே பெயர் பெற்றவர் எனவே விநாயகர் சதுர்த்தி அன்று அவரை வழிபட்டு வினைகளை நசிக்கும் ஞானத்தை அனைவரும் பெற நல்வாழ்த்துக்கள்.

போன வருட விநாயகர் சதுர்த்தி பதிவின் மீட்சியாக இதை எழுதுகிறேன் கேதுவின் ஆதிதேவதையான விநாயகரின் பெருமையோடு கேதுவின் பெருமை சற்று பார்ப்போம். வேலை வேலை என்று இருக்கும் வாழ்க்கையில் கொஞ்சம் தெய்வங்களை தரிசனம் செய்ய உதவுபவராக எளியவருக்கும் எளியவராக இருப்பவர் விநாயக மூர்த்தி பழைய ஒரு பாடலில் படித்தாக எனக்கு ஞாபகம் அதாவது அந்த பாடலில் கவிஞர் சொல்லியிருப்பார் ஒரு எளிய பாமர பக்தன் கணபதியின் கை பிடித்து கொண்டால் போதும் அவர் அவனை அழைத்துக் கொண்டு போய் மற்ற அனைத்து தெய்வங்களை தரிக்க வைத்து அனைத்து தெய்வங்களின் அருளை பெற வைத்து விடுவார் என்று சொல்லும் அந்த பாடல் அது போலவே கேதுவும் வேலை வேலை என்று இருக்கும் வாழ்க்கையில் கொஞ்சம் ஆழமான தெய்வ சிந்தனையும் ஏற்பட உதவும் கிரகம்.

பாமர பக்தருக்கு எளிய அருள் என்றால் விநாயகர் வெறும் எளியவருக்கு மட்டும் வழிகாட்டி என்று நினைத்துவிட வேண்டாம் ஔவை பாட்டி குண்டலினி சக்கரத்தை எழுப்பு வித்தையை விநாயக பெருமானே எனக்கு உரைத்தான் என்று விநாயகர் அகவலில் ஔவையாரே இவ்வாறு கூறுகிறார் -

குண்டலி அதனில் கூடிய அசபை
லிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காளால் எழுப்பும் கருத்தறி வித்தே . - ஔவையார்

மேலே குண்டலினி சக்திக்கு காரகத்துவம் பெற்றவராக கேது கிரகம் இருப்பதாக கூறியிருக்கிறேன் ஆக பாமர பக்தருக்கு பாமரனாகவும், யோக நெறி புரிய துடிக்கும் யோகிகளுக்கு உதவும் மாயோகியாகவும் இருப்பவராக விநாயகர் திகழ்கிறார்.

எனது சிவதத்துவ சாரம் என்ற நூலில் ஆரம்ப விநாயகர் துதியாக இவ்வாறு எழுதியிருப்பேன் -

கணபதியை கருத்தினுள் இருத்தி திறம்படவே தீது இன்றி
மணங்கமழும் மலர்கள் தூவி வழிபடுகிறேன் வழிதர வேண்டி
பிணக்க மற தேடி அறிய அறிந்ததை கொண்டு உணர
இணக்கமாய் எம்முடனே வரவேணும் ஞானமுதலே

ஞானமுதலே ஞானியர் மகிழ ஆதார தலம் காட்டி அமர
ஆனமுதலே உயிர் அமர்ந்த உடலும் அந்த உயிருக்கு
மூலமுதலே தேடி உள்புகும் அடியார்க்கு நல்துணையான
தோழமுதலே சாந்த சிந்தூர சுந்தர சிவபாலா

சிவபாலா பட்டிவிநாயகரே உயர் மரங்கள் இலைகளே
தூவ எப்போதும் குளிர்ந்த இடத்தே குளிர்மேனியோடு
அவயம் தர அரவணை அணிந்த வயிறு அது உடைய
பவமது சுற்றி பழமது பெற்ற அறிவிற்சிறந்த சிவகணேசா
                                                                                    சிவதத்துவ சிவம்

இதில் பவமது சுற்றி பழமது பெற்ற அறிவிற்சிறந்த சிவகணேசா என்று எழுதியிருப்பேன் பவம் என்றால் உலகம் அந்த உலகை சுற்றி ஞானத்தை பழத்தை சாப்பிட்டவர், ஞானத்தை பழத்தை சாப்பிடுவதற்கும் முன்பே நாரதரிடம் சிவபெருமானிடம் உலகம் என்பது என்ன என்று கேட்டு விவரமாக தாய் தந்தையை சுற்றியே வெற்றி கண்ட புத்திசாலி இதற்கு மிக சிறந்த உதாரணம் சனிஸ்வரன் பிடியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, இன்று போய் நாளை வா என்று சனிபகவானுக்கு கூறிவிட்டாராம், ஒவ்வொரு நாளும் விநாயகனிடம் சனிபகவான் செல்வாராம், விநாயகனின் இருப்பிடத்தில் இன்று போய் நாளை வா என்று எழுதப்பட்ட வாசகத்தை பார்த்த சனீஸ்வரன் நாளை போவது என்று முடிவு செய்வாராம், இப்படியே அலைந்து காலம் கடந்ததே மிச்சம் என்றெண்ணிய சனீஸ்வரன் பிள்ளையாரின் பக்கமே போகாமல் விட்டார் என்பது புராணக்கதை இப்படி சனீஸ்வரனையே டபாய்த்தவர் (ஏமாற்றியவர்) அதனால் சாதுர்யமான அறிவின் அடையாளமாக விநாயகப் பெருமான் உள்ளார், சுபவலுவான கேதுவும் சிறந்த அறிவை காட்டும் கிரகம் கேது தம் ஜாதகத்தில் பலமாக பெற்றவர்களும் சனீஸ்வரனை கண்டு அஞ்சுவதில்லை. மேலும் மகாபாரதத்தை எழுத அழைக்கபட்டவரும் கணபதியே இவர் சாஸ்திர வல்லமைக்கு காரகனாவர் ஆகும் அது போலவே கேதுவும் மறை சாஸ்திரங்களுக்கும் காரக கிரகம் .

மேலே சொன்னது போல கணபதியின் கை பிடித்து கொள்ளுங்கள் அவர் உங்களின் வினைகளை குறைத்து இறைவனையும் காட்டி மேல் நிலைக்கு கூட்டிச் செல்வார்.

1 Response to "விநாயகரும் கேது பகவானும் தொடர் பதிவு 2…"

  1. Unknown says:

    எனக்கு மிதுன லக்கினத்தில் மேஷ ராசி பிறந்தவர்.11ல் சந்திரன் கேது இணைவு உள்ளது.
    5ல் குரு ராகு சேர்க்கை உள்ளது.

கருத்துரையிடுக

Powered by Blogger