நவகிரக காரகத்துவ இடங்கள் - சூரியன்...
நவகிரகங்களும்
தங்கள் தங்கள் ஆதிக்கம் அதிகம் காட்டும் இடங்களாக பிரித்து சொல்லும் ஒரு சமஸ்கிருத
நூலின் மொழி பெயர்ப்பாக வந்த ஒரு பழம் தமிழ் நூலின் சில குறிப்பிட்ட இந்த பகுதி
மட்டும் கிடைத்தது அதை தங்களின் முன் இந்த வலைபதிவின் மூலம் பதிவிக்கிறேன்.
அருணமாம்
கிரகராஜன் வியாபிக்கும் காரகதலங்கள் முக்கண்
பெருமானாம்
குடி வனம் வனமலையும் திறந்த வெளியும்
பருமனான
கோட்டையும் ஒளி பரப்பும் முற்றமும் மூலிகை
பெருகி
கிடக்கும் புதரும் பாலை முட்புதரும் நீருஞ்சி உடலை
கருக்கும்
பாலைவன நிலமும் அருண ராஜன் தலங்களாம் .
- கிரகபதி சந்தம்
பொருள் - சூரியனின் ஆதிக்கம் அதிகம் காட்டும் பூமியின்
தலங்கள் ஆவன சிவபெருமான் கோயில்கள், காடு, காடு சார்ந்த மலைகள்,
திறந்த வெளிகள், கோட்டைகள், கட்டடங்களை சேர்ந்து அமைந்துள்ள முற்றங்கள் (Courtyard),
மூலிகைகள் பரவி உள்ள புதர்களும், வறண்ட முட்புதர்களும், பாலைவன நிலமும்
அது சார்ந்த இடங்களும் சூரியனின் ஆதிக்கம் அதிகம் காட்டும் பூமியின் தலங்கள் ஆகும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "நவகிரக காரகத்துவ இடங்கள் - சூரியன்..."
கருத்துரையிடுக