ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 51 - விமலா யோகம்…
ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 51 - விமலா யோகம்…
ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில
யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த
ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால்
தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம்
இருக்கட்டும். மேலும் சில யோக
அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும்
காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம்
இருக்கட்டும்.
விமலா யோகம்
ஜென்ம லக்னத்திற்கு திரிகோண ஸ்தானங்களில்குரு பகவான்
ஆட்சி பெற்றாலும் மற்றும் 12 ஆம்
ஸ்தானத்தின் அதிபதி 12 ஆம்
ஸ்தானத்தில் ஆட்சி பெற்றாலும் இந்த விமலா யோகம் ஏற்படும். முதல் வகை விமலா யோகம் புறத்தூய்மைக்கு
அதிகமாக சம்பந்தபட்டது இரண்டாம் வகை விமலா யோகம் ஆன்மீகத்திற்கு அதிகமாக சம்பந்தபட்டது
ஆகும். இதில் மற்ற கிரகங்களின்
ஒத்துழைப்பு மிக முக்கியம்.
இதன் பலன்கள் -
முதல் வகை யோகத்தால் சுத்தமான ஆடை, நேர்மையான நடத்தை, பிரகாசமான முகம் அல்லது சுற்றத்தாரால் புகழ், கல்வியில் நாட்டம் அதில் குறிபிடத்தக்க வெற்றி. தொடர்ந்து சீர்மிக்க பாதையில் பயணிக்க கூடியவர். அமைதியானவர். தேவைக்குதக்க
பணம் பொருள் ஆளுமை உள்ளவர். இரண்டாம்
வகை யோகத்தால் அதீத சக்தி அல்லது தனிபட்ட ஏதேனும் சிறப்பு ஆற்றல் பெற்றிருப்பார். தியானம் அல்லது யோகக்கலையில் நாட்டம் ஏற்படும். மற்ற கிரகங்கள் ஒத்துழைக்க ஒருவித சமாதி
சுகமும் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.
இந்த யோகம் அமைந்த ஒரு உதாரண படம்
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்