2017 ல் கோச்சார ரீதியாக கிரகங்கள் 12 இராசிக்கும் தரும் பரல் பலம்…

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
2017 ல் கோச்சார ரீதியாக கிரகங்கள் 12 இராசிக்கும் தரும் பரல் பலம்

இராசி
மொத்த பரல்
பலம்
மொத்த
சதவீதம்
என்ன பலம்
என்ன பலவீனம்
மேஷம்
165
92.18%
குரு பார்வை

ரிஷபம்
162
90.50%
குரு பார்வை
சனி பார்வை
மிதுனம்
176
98.32%
குரு பார்வை
சனி பார்வை
கடகம்
160
89.39%

ஜென்ம ராகு
சிம்மம்
154
86.03%

சனி பார்வை, ஜென்ம ராகு
கன்னி
170
94.97%

சனி பார்வை, ஜென்ம குரு
துலாம்
169
94.41%

ஜென்ம குரு
விருச்சிகம்
152
84.92%

ஜென்ம சனி
தனுசு
154
86.03%

ஜென்ம சனி
மகரம்
162
90.50%
குரு பார்வை
சனி பார்வை, ஜென்ம கேது
கும்பம்
164
91.62%
குரு பார்வை
சனி பார்வை, ஜென்ம கேது
மீனம்
179
100.00%
குரு பார்வை


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் அனுஷம் - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம் - ஆண் அனுஷம் - திருமண நட்சத்திர பொருத்தம்

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் ஆணின் அனுஷம் நட்சச்திரம் வரை எண்ண 13 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் அனுஷம் நட்சத்திரம் தேவ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் அனுஷம் நட்சச்திரம் எண்ண 13 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் உண்டு.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் அனுஷம் நட்சச்திரம் எண்ண 13 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.  27 நட்சத்திரங்களின் யோனி இன மிருகங்கள்...

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் அனுஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு மான் ஆகும் எனவே இரண்டும் பகை மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆகி ஆண் விருச்சிகம் இராசி ஆகும் போது பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 7 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் உண்டு.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் ரிஷப இராசி ஆண் விருச்சிகம் இராசி ஆகும் இருவரின் இராசி அதிபதிகள் சுக்கிரனுக்கு செவ்வாய் தங்களுக்குள் சம உறவுமுறை வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

ரிஷப இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கடகம், துலாம்.  
இதில் பெண் ரிஷப இராசி ஆண் விருச்சிகம் இராசி ஆகும் போது இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வருவதால் வசிய பொருத்தம் இல்லை.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின் அனுஷம் நட்சச்திரம் தொடை ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் அனுஷம் நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் அனுஷம் நட்சத்திரம் பித்த நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் ஒரே நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் இல்லை.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் அனுஷம் நட்சத்திரமும் பால் இல்லாத வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இல்லாத மரம் வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் அனுஷம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  9 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்




கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - செவ்வாய் 7 முதல் 12 இராசியில்…

கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - செவ்வாய் 1 முதல் 6 இராசியில்…

கோச்சாரம் என்பதை அறியாதவர்கள் கோச்சார கிரக ஸ்தான பலன்கள் - அறிமுகம்இந்த பதிவை படித்துவிட்டு வர கீழ் உள்ளது புரியும் இது நமது லக்னத்தில் இருந்து கிரகங்கள் உள்ள ஸ்தான பலன் அல்ல இது ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகங்கள் தற்காலத்தில் சஞ்சரிக்கும் ஸ்தான பலன் ஆகும்.

அப்படி ஒருவரின் பிறந்த அதாவது ஜென்ம இராசியில் இருந்து நவகிரகத்தில் முதல் ராசியின் கிரகமாக விளங்கும் செவ்வாய் பகவான் ஜென்ம இராசி தொட்டு முதல் 6 இராசியில் வரும்போது என்ன என்ன பலன்களை பொதுவாக தருவார் என்பதற்கான விவரங்களை பார்ப்போம்

பிறந்த இராசிக்கு 7 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - கோபம் உண்டாக்கும் படியான செயல்கள் அல்லது தவறுகள் நடப்பது, வயிற்றில் உஷ்ணம் அதிகமாக இருக்கும் அல்லது வலி உண்டாக்கும், கணவன் மனைவிக்கு இடையே பேச்சை அதிகரிக்கும், அதிக வேலைபளு.

பிறந்த இராசிக்கு 8 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - விரக்தி, செய்யும் செயலுக்கு பலன்கள் முன்னுக்கு பின் முரணாக வருவது, அதிக ஓய்வு, சந்திரன் செவ்வாயின் நிலையை பொருத்து எதிர்பாராத பணவரவு அல்லது எதிர்பாராத செலவு, இரகசியங்கள் கசிவு, பழைய அனுபவ நிலைமைகளுக்கு தக்கவாறு மாறிக்கொள்ளல்.

பிறந்த இராசிக்கு 9 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - புதிய அல்லது தேவையில்லாத பிரயாணங்கள், அதிகாரம் அல்லது பொருளாதார முன்னேற்றம் அடைய நல்ல வழிகாட்டுதல்கள் கிடைக்கும், ஒருவித பயத்துடன் காரியங்கள் நடத்தாலும் சுபமாக முடியும் வாய்ப்பு உண்டாகும்.

பிறந்த இராசிக்கு 10 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - காரியங்களில் போராட்ட வெற்றி, கல்வி அல்லது தொழில் பயிற்சிகளில் தைரியமான அணுகுமுறை கொடுக்கும், ஒரே சமயத்தில் பலவிதமான காரியங்கள் நடத்தே வேண்டி வரும்.

பிறந்த இராசிக்கு 11 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - பண இருப்பு மற்றும் சேமிப்புக்கள் மெல்ல கரையும், வளர்ச்சியும் தீடீர் என்று வந்து அதை தக்கவைக்க போராட வைக்கும், ஆனாலும் அதே சமயம் மிகவும் நல்ல பெயர் மற்றும் அதிகாரம் சுற்றத்தாரின் பாராட்டு கிடைக்க வைக்கும், புதிய பதவி உயர்வு அல்லது பொறுப்பு கிடைக்க வைக்கும்.

பிறந்த இராசிக்கு 12 ஆம் இராசியில் செவ்வாய் கோச்சார ரீதியாக வரும்போது - ஆரோக்கிய மற்றும் பொருளாதார முன்னேற்றம் பாதிக்க படலாம், தேவையில்லாத செலவுகள் தேடி வரலாம், நிம்மதியான தூக்கமின்மை, போலிகளால் ஏமாறுதல், சற்று தாழ்வுமனபான்மை மேலோங்கும் சூழல்.


மிதுனம் & ரிஷபம், மிதுனம் vs ரிஷபம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

மிதுனம் & ரிஷபம், மிதுனம் vs ரிஷபம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ ரிஷபம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

மிதுனம் & ரிஷபம், மிதுனம் vs ரிஷபம் -
இந்த ரிஷப மிதுன ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது அவர்கள் இருவரின் இணைப்பு செயல்திறமிக்கதாக இருக்க ஒருவருக்கொருவர் அறிய உரிய நேரம் ஒதுக்க வேண்டும். மிதுனம் ராசி சின்னம் இரட்டையர்கள் என்பதால் பெரும்பாலும் ஒரு விஷயங்களை பற்றி இரண்டு விதமான எண்ணங்கள் அல்லது யோசனைகள் இருக்க கூடியவர்கள். அதனால் சுதந்திரத்தை விரும்பும் ரிஷப ராசிகாரர்கள் புதிய புதிய கற்பனைகளை விரும்புபவர்கள் என்பதால் மிதுன ராசிகாரர்களின் பலவிதமான புதிய யோசனைகளுக்கு ஆதரவு தருவார் இதனால் இருவரும் விரும்புகிற பாதுகாப்பு மற்றும் விருப்பங்களுக்கு அனுமதி கிடைக்க அது நீண்ட கால நட்பு பரிமளிக்க முடியும். காதலர்கள் ஆனால் ரிஷபம் தனது விருப்பத்தை உடனே அனுபவிக்க நினைக்கும் ஆனால் மிதுனத்திற்கு நம்பகத்தன்மை வரும் வரை சிறிது நேரம் காத்திருவேண்டிவரும் அப்படி இருக்க இறுதியில் இருவரும் சுவையான அனுபவங்களை பெற முடியும்.

ரிஷப மிதுன ராசிக்காரகளுக்குமிடையே வாழ்க்கையை அணுகும் முறைகளில் வெவ்வேறு பட்ட பாணி உடையவர்கள் அதாவது ரிஷப சந்திரன் உச்ச சந்திரன் என்பதால் எதிலும் விரிவான பார்வை மற்றும் எதார்த்த நடைமுறைகளுக்கு மதிப்பு, அன்புக்கு பாசத்திற்கு ஆட்படுபவர்கள் ஆனால் மிதுன இராசிக்காரர்கள் அறிவுசார் இராசி, ஆராய்ச்சி, கேள்வி கேட்கும் ராசியாக உள்ளது இதை அறிந்து நட்பில் மிதுன இராசிக்காரரின் அறிவுக்கு ரிஷபம் உரிய மதிப்பு தரவும் ரிஷப இராசிக்காரரின் அன்புக்கு மிதுனம் உரிய மதிப்பு தரவும் விதமான இந்த இரண்டு நண்பர்கள் உறவுகள் அமைந்தால் நன்றாக இருக்கும். இவர்களின் இணைப்பு சரியாக அமைய இவர்களின் நட்பு உறவு வெறுமனே மேற்பரப்பில் ஈடுபாடு கொண்டிருப்பதை தாண்டி ஆழமான எண்ண உணர்வுகளுடன் பந்தபட்டு இருக்க உதவும். மிதுனம் ரிஷப இருவரும் இணைய நண்பர்களுக்குள் புதிய புதிய உற்சாகத்தை கொண்டு பல்வேறு சுவாரஸ்யம் மற்றும் வேடிக்கை சேர்க்க கூடியவர்கள்.

ரிஷப ராசிக்காரர் இராசிநாதன் சுக்கிரன் ஆகும் மிதுன ராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் இந்த இருகிரகங்களும் தங்களுக்குள் நட்பு உறவு வரக்கூடிய கிரகங்கள் புதன் மஹாவிஷ்ணுயின் அம்சம் சுக்கிரன் மஹாலட்சுமியின் அம்சம் என்று சொல்பவர்களும் உண்டு மேலும் இதனால் இந்த கிரகங்கள் இருவரும் தங்களுக்குள் வித்தியாசமாக இருந்தாலும் அக்கம்பக்கத்து அன்பு நெருக்கம் கொடுக்க கூடிய கிரகங்கள் ஆக இருக்கும். சுக்கிரன் காதல் மற்றும் பாசம், உணர்ச்சி மிக்க கிரகம் புதன் பேச்சாற்றல் சிந்திக்கும் திறன் மிக்க கிரகம் இதனால் ரிஷப ராசிக்காரரின் அன்பால் மிதுனம் ஈர்க்கபடும் மிதுன ராசிக்காரரின் திறமை கண்டு ரிஷபம் ஈர்க்கபடும். இதில் மிதுனம் ராசிக்காரரின் அறிவார்ந்த அணுகுமுறைகள் சிலசமயம் ரிஷப ராசிக்கார நண்பருக்கு புரியாமல் போகலாம் எனவே இந்த நட்பில் மிதுனம் சந்திரன் நல்ல சுபவலுவாக இருக்க வேண்டும் அப்போது தான் ரிஷப நண்பர் தேவைகளை புரிந்து மற்றும் நண்பரின் தேவை நிறைவேறும் நட்பான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.

ரிஷபம் ஒரு பூமித்தன்மை கொண்ட இராசியாகும் மற்றும் மிதுனம் ஒரு காற்றுத்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது ரிஷப நண்பர் எதார்த்த நடைமுறைகளுக்கு ஒத்துப்போக வகையில் முடிவெடுக்க முயற்சிப்பார் மிதுன நண்பர் தனது புத்திசாலித்தனத்துக்கு ஒத்துப்போக வகையில் முடிவெடுக்க முயற்சிப்பார் எனவே இருவரின் நட்பில் பொறுமை மிகவும் முக்கியம். ரிஷபத்தின் ஆசைகள் அதிகமனால் மிதுன நண்பரின் இயல்புக்கு மாறுபட்டால் மோதல்கள் இந்த நட்பில் எழலாம் ஏனெனில் இருவரும்  வெவ்வேறு வழிகளில் உலகை காணக் கூடியவர்கள். ஏதேனும் எதிர்பாராத விஷயங்களை இருவரும் ஆலோசிக்காமல் முடிவெடுப்பதை இருவரும் தவிர்க்க வேண்டும்.

ரிஷபம் ஒரு ஸ்திரத்தன்மை கொண்ட இராசியாகும் மற்றும் மிதுனம் ஒரு உபய இராசியாகும் அதனால் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த கூடியவர்கள், ஆனால் மிதுனம் பல விஷயகளை ஒரு பொழுது ஆலோசிக்க கூடியது. ரிஷப ராசிக்காரர் மேம்பட்ட அல்லது கலைநயத்துடன் செயபடக்கூடியர்கள் அதனால் மிதுன நண்பர் ஈர்க்க படுவார். மிதுனம் அக்கறை மற்றும் சுதந்திரத்தை மிகவும் விரும்பும் எனவே அது கிடைக்க ரிஷப நண்பரும் ஈர்க்க படுவார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை விளக்கி பகிர்ந்து பலதரப்பட்ட காரியங்களையும் மிதுனத்தின் அறிவு மற்றும் ரிஷபத்தின் அக்கறையும் சேர்ந்து செய்ய அந்த காரியங்கள் வெற்றி மற்றும் நிலையான உறுதியை பெற உதவும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger