27 நட்சத்திரங்களும் உடல்நலக்குறைவும் பகுதி - 3….
27 நட்சத்திரங்களும்
உடல்நலக்குறைவும் பகுதி - 3….
உடல்நலக்குறைவு
ஏற்படுவதென்பது மனிதருக்கு இயற்கை ஆகும் அப்படி சிறிய சிறிய அளவிலளாக ஏற்படும்
நோய்கள் ஒருவருக்கு எந்த நட்சத்திரத்தில் தொடங்குகிறதோ அந்த நட்சத்திரத்தில்
இருந்து எத்தனை நாட்களுக்கு அவை நீடித்து பின் குணமாக வாய்ப்பு உண்டு என்று ஒரு
நூலில் கணிக்க பட்டிருந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மூலம் நட்சத்திரத்தன்று
ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் நவகிரகங்களின் இருப்புக்கு ஏற்ப அதன் விளைவு இரண்டு மூன்று வாரங்கள் அல்லது ஒரு மாதம் வரை நீடித்து பின்
குணமாக வாய்ப்பு உண்டு. நோய் கடுமையாக இருந்து வயதான காலத்தில் ஏற்பட்டால் மரணத்திற்கு கூட வாய்ப்பு உண்டு.
பூராடம்
நட்சத்திரத்தன்று ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் அந்த
நோய் தொடர்ச்சியாக நீட்டிக்காமல் பார்த்து
கொள்ள வேண்டும், அந்த நோய் தொடர்ச்சியாக
பல காலம் நீடித்தால்
நவகிரகங்களின் இருப்புக்கு ஏற்ப அதன் விளைவு மரணம் வரை செல்லவும் வாய்ப்பு உண்டு.
உத்திராடம் நட்சத்திரத்தன்று
ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் நவகிரகங்களின் இருப்புக்கு ஏற்ப அதன் விளைவு சற்று கடும் தொந்தரவு கொடுத்து ஆனாலும்
இயல்பாக நோயில் இருந்த மீட்சி ஆக வாய்ப்பு
உண்டு.
திருவோணம் நட்சத்திரத்தன்று
ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் நவகிரகங்களின் இருப்புக்கு ஏற்ப அதன் விளைவு சற்று கடும் தொந்தரவு கொடுத்து ஆனாலும் மரணத்திற்கு வாய்ப்பு குறைவு தான்.
அவிட்டம்
நட்சத்திரத்தன்று ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் நவகிரகங்களின் இருப்புக்கு ஏற்ப அதன் விளைவு சில நாட்கள் அல்லது ஒர் இரு வாரங்கள் வரை நீடித்து பின் மெல்ல மெல்ல குணமாக வாய்ப்பு உண்டு.
சதயம்
நட்சத்திரத்தன்று ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் நவகிரகங்களின் இருப்புக்கு ஏற்ப அதன் விளைவு சில நாட்கள் அல்லது ஒர் இரு வாரங்கள் வரை நீடித்து பின் மெல்ல மெல்ல குணமாக வாய்ப்பு உண்டு.
பூரட்டாதி
நட்சத்திரத்தன்று ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் அந்த
நோய் தொடர்ச்சியாக நீட்டிக்காமல் பார்த்து
கொள்ள வேண்டும், அந்த நோய் தொடர்ச்சியாக
பல காலம் நீடித்தால்
நவகிரகங்களின் இருப்புக்கு ஏற்ப அதன் விளைவு மரணம் வரை செல்லவும் வாய்ப்பு உண்டு.
உத்திரட்டாதி
நட்சத்திரத்தன்று ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் நவகிரகங்களின் இருப்புக்கு ஏற்ப அதன் விளைவு மூன்று வாரங்கள் அல்லது ஒரு மாதம் வரை நீடித்து
பின் குணமாக வாய்ப்பு உண்டு.
மூலம்
நட்சத்திரத்தன்று ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டிருந்தால் நவகிரகங்களின் இருப்புக்கு ஏற்ப அதன் விளைவு மூன்று வாரங்கள் அல்லது ஒரு மாதம் வரை நீடித்து
பின் குணமாக வாய்ப்பு உண்டு.
குறிப்பு : மேலே மூன்று
பகுதிகளிலும் சொல்லபட்ட நட்சத்திரத்தன்று ஒருவருக்கு அவரது ஜென்ம இராசிக்கு 1,6,12 சந்திரன் இருந்தாலும் சற்று பலவீனமே
மற்றும் அஷ்டம ஸ்தானம் என்னும் 8ல்
அதாவது ஜென்ம இராசிக்கு 8ல்
சந்திரன் இருந்தாலும் சற்று அதிகமான பலவீனமே ஏற்பட்டுள்ளதாக கவனித்து கருதிக்கொள்ள
வேண்டும்.
0 Response to "27 நட்சத்திரங்களும் உடல்நலக்குறைவும் பகுதி - 3…."
கருத்துரையிடுக