நவாம்ச லக்னம் மேஷமானால், நவாம்ச லக்னம் மேஷ அம்சம் ஆனால் வரும் பொது பலன்கள் சில...

நவாம்ச லக்னம் மேஷமானால் - மேஷம் நவாம்ச லக்னமாக வரும்போது...

அசுவினி 1 பாதம்
ரோஹிணி 1 பாதம்
புனர்பூசம் 1 பாதம்
மகம் 1 பாதம்
ஹஸ்தம் 1 பாதம்
விசாகம் 1 பாதம்
மூலம் 1 பாதம்
திருவோணம் 1 பாதம்
பூரட்டாதி 1 பாதம்

ஒருவரின் லக்னமானது மேலே உள்ள நட்சத்திர பாதத்தில் இருக்கும் படி ஒருவர் பிறப்பை எடுத்திருந்தால் அவருக்கு நவாம்சத்தில் மேஷம் லக்னமாக வரும் அப்படி மேஷம் நவாம்ச லக்னமாக வரும்போது - குறும்புத்தனம் ஓரளவு இருக்கும், செயல்திறமையை அதிகமாக வெளிப்படுத்த முனைவார், போட்டி போட்டுக்கு கொண்டு முயற்சி செய்யக்கூடியவர். எளிதில் சமாதானம் ஆக மாட்டார், பலவீனமான பார்வை. சில வேண்டாத சுபாவமுடையவர்கள் அல்லது சில வேண்டாத பிடிவாதங்கள் இருக்கலாம், ஒரு நிலையில் இருந்த தீடீர் என்று வெளியேற்றப்படுவது அல்லது வெளியேறுவது போன்றவைக்கு வாய்ப்பு உண்டு, அதிக துணிச்சல், பழிக்குபழி அல்லது திருப்பி தாக்கும் குணமும் இருக்கலாம். பொதுவாக இது நவகிரகங்களில் வியாழன், சூரியன், செவ்வாய்,  போன்ற கிரகங்களுக்கு ஏற்ற நவாம்ச இடம் ஆகும்.



0 Response to "நவாம்ச லக்னம் மேஷமானால், நவாம்ச லக்னம் மேஷ அம்சம் ஆனால் வரும் பொது பலன்கள் சில..."

கருத்துரையிடுக

Powered by Blogger