மிதுனம் & ரிஷபம், மிதுனம் vs ரிஷபம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

மிதுனம் & ரிஷபம், மிதுனம் vs ரிஷபம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்

ஜோதிடத்திற்கு என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக பொதுவான  ஜோதிட விஷயங்களை மட்டும் எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம் பார்க்க உள்ள தொடர்

பாரம்பரிய திருமணம் என்ற உடன் தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள்  அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும் ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.

உதாரணமாக ஒருவர் மிதுனம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ ரிஷபம் இராசியாக இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.

மிதுனம் & ரிஷபம், மிதுனம் vs ரிஷபம் -
இந்த ரிஷப மிதுன ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது அவர்கள் இருவரின் இணைப்பு செயல்திறமிக்கதாக இருக்க ஒருவருக்கொருவர் அறிய உரிய நேரம் ஒதுக்க வேண்டும். மிதுனம் ராசி சின்னம் இரட்டையர்கள் என்பதால் பெரும்பாலும் ஒரு விஷயங்களை பற்றி இரண்டு விதமான எண்ணங்கள் அல்லது யோசனைகள் இருக்க கூடியவர்கள். அதனால் சுதந்திரத்தை விரும்பும் ரிஷப ராசிகாரர்கள் புதிய புதிய கற்பனைகளை விரும்புபவர்கள் என்பதால் மிதுன ராசிகாரர்களின் பலவிதமான புதிய யோசனைகளுக்கு ஆதரவு தருவார் இதனால் இருவரும் விரும்புகிற பாதுகாப்பு மற்றும் விருப்பங்களுக்கு அனுமதி கிடைக்க அது நீண்ட கால நட்பு பரிமளிக்க முடியும். காதலர்கள் ஆனால் ரிஷபம் தனது விருப்பத்தை உடனே அனுபவிக்க நினைக்கும் ஆனால் மிதுனத்திற்கு நம்பகத்தன்மை வரும் வரை சிறிது நேரம் காத்திருவேண்டிவரும் அப்படி இருக்க இறுதியில் இருவரும் சுவையான அனுபவங்களை பெற முடியும்.

ரிஷப மிதுன ராசிக்காரகளுக்குமிடையே வாழ்க்கையை அணுகும் முறைகளில் வெவ்வேறு பட்ட பாணி உடையவர்கள் அதாவது ரிஷப சந்திரன் உச்ச சந்திரன் என்பதால் எதிலும் விரிவான பார்வை மற்றும் எதார்த்த நடைமுறைகளுக்கு மதிப்பு, அன்புக்கு பாசத்திற்கு ஆட்படுபவர்கள் ஆனால் மிதுன இராசிக்காரர்கள் அறிவுசார் இராசி, ஆராய்ச்சி, கேள்வி கேட்கும் ராசியாக உள்ளது இதை அறிந்து நட்பில் மிதுன இராசிக்காரரின் அறிவுக்கு ரிஷபம் உரிய மதிப்பு தரவும் ரிஷப இராசிக்காரரின் அன்புக்கு மிதுனம் உரிய மதிப்பு தரவும் விதமான இந்த இரண்டு நண்பர்கள் உறவுகள் அமைந்தால் நன்றாக இருக்கும். இவர்களின் இணைப்பு சரியாக அமைய இவர்களின் நட்பு உறவு வெறுமனே மேற்பரப்பில் ஈடுபாடு கொண்டிருப்பதை தாண்டி ஆழமான எண்ண உணர்வுகளுடன் பந்தபட்டு இருக்க உதவும். மிதுனம் ரிஷப இருவரும் இணைய நண்பர்களுக்குள் புதிய புதிய உற்சாகத்தை கொண்டு பல்வேறு சுவாரஸ்யம் மற்றும் வேடிக்கை சேர்க்க கூடியவர்கள்.

ரிஷப ராசிக்காரர் இராசிநாதன் சுக்கிரன் ஆகும் மிதுன ராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் இந்த இருகிரகங்களும் தங்களுக்குள் நட்பு உறவு வரக்கூடிய கிரகங்கள் புதன் மஹாவிஷ்ணுயின் அம்சம் சுக்கிரன் மஹாலட்சுமியின் அம்சம் என்று சொல்பவர்களும் உண்டு மேலும் இதனால் இந்த கிரகங்கள் இருவரும் தங்களுக்குள் வித்தியாசமாக இருந்தாலும் அக்கம்பக்கத்து அன்பு நெருக்கம் கொடுக்க கூடிய கிரகங்கள் ஆக இருக்கும். சுக்கிரன் காதல் மற்றும் பாசம், உணர்ச்சி மிக்க கிரகம் புதன் பேச்சாற்றல் சிந்திக்கும் திறன் மிக்க கிரகம் இதனால் ரிஷப ராசிக்காரரின் அன்பால் மிதுனம் ஈர்க்கபடும் மிதுன ராசிக்காரரின் திறமை கண்டு ரிஷபம் ஈர்க்கபடும். இதில் மிதுனம் ராசிக்காரரின் அறிவார்ந்த அணுகுமுறைகள் சிலசமயம் ரிஷப ராசிக்கார நண்பருக்கு புரியாமல் போகலாம் எனவே இந்த நட்பில் மிதுனம் சந்திரன் நல்ல சுபவலுவாக இருக்க வேண்டும் அப்போது தான் ரிஷப நண்பர் தேவைகளை புரிந்து மற்றும் நண்பரின் தேவை நிறைவேறும் நட்பான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.

ரிஷபம் ஒரு பூமித்தன்மை கொண்ட இராசியாகும் மற்றும் மிதுனம் ஒரு காற்றுத்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது ரிஷப நண்பர் எதார்த்த நடைமுறைகளுக்கு ஒத்துப்போக வகையில் முடிவெடுக்க முயற்சிப்பார் மிதுன நண்பர் தனது புத்திசாலித்தனத்துக்கு ஒத்துப்போக வகையில் முடிவெடுக்க முயற்சிப்பார் எனவே இருவரின் நட்பில் பொறுமை மிகவும் முக்கியம். ரிஷபத்தின் ஆசைகள் அதிகமனால் மிதுன நண்பரின் இயல்புக்கு மாறுபட்டால் மோதல்கள் இந்த நட்பில் எழலாம் ஏனெனில் இருவரும்  வெவ்வேறு வழிகளில் உலகை காணக் கூடியவர்கள். ஏதேனும் எதிர்பாராத விஷயங்களை இருவரும் ஆலோசிக்காமல் முடிவெடுப்பதை இருவரும் தவிர்க்க வேண்டும்.

ரிஷபம் ஒரு ஸ்திரத்தன்மை கொண்ட இராசியாகும் மற்றும் மிதுனம் ஒரு உபய இராசியாகும் அதனால் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த கூடியவர்கள், ஆனால் மிதுனம் பல விஷயகளை ஒரு பொழுது ஆலோசிக்க கூடியது. ரிஷப ராசிக்காரர் மேம்பட்ட அல்லது கலைநயத்துடன் செயபடக்கூடியர்கள் அதனால் மிதுன நண்பர் ஈர்க்க படுவார். மிதுனம் அக்கறை மற்றும் சுதந்திரத்தை மிகவும் விரும்பும் எனவே அது கிடைக்க ரிஷப நண்பரும் ஈர்க்க படுவார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை விளக்கி பகிர்ந்து பலதரப்பட்ட காரியங்களையும் மிதுனத்தின் அறிவு மற்றும் ரிஷபத்தின் அக்கறையும் சேர்ந்து செய்ய அந்த காரியங்கள் வெற்றி மற்றும் நிலையான உறுதியை பெற உதவும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "மிதுனம் & ரிஷபம், மிதுனம் vs ரிஷபம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger