ரிஷபம் & மீனம், ரிஷபம் vs மீனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…
ரிஷபம் & மீனம், ரிஷபம் vs மீனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…
ஜோதிடத்திற்கு
என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக
உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில்
ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க
விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு
குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை
எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக
பொதுவான ஜோதிட விஷயங்களை மட்டும்
எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக
வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம்
பார்க்க உள்ள தொடர்
பாரம்பரிய திருமணம் என்ற உடன்
தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள் அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும்
ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு
அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.
உதாரணமாக ஒருவர் ரிஷபம் இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது
காதலரோ மீனம் இராசியாக
இருந்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல் பலம்
பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.
ரிஷபம் & மீனம், ரிஷபம் vs மீனம் -
இந்த ரிஷப மீன ராசிக்காரகளுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது பொதுவாக ஆக்கபூர்வமான இணையாக இருக்க வாய்ப்பு
உண்டு. இந்த இரு ராசிக்காரர்களும் பக்கவமான பேச்சு
மற்றும் கலந்து பழகும் நடத்தைக்கும் ஒத்துபோகும் ராசிக்காரர்கள் என்பது பலம். ரிஷப ராசிக்காரர் நடைமுறைக்கு ஏற்ற விதமாக யோசிப்பது மற்றும் தெளிவான பார்வையை விரும்புபவர், மீன ராசிக்காரர் உயர்ந்த சிந்தனைப்போக்கும் மற்றும் சூழ்நிலையை ஏற்ற உணர்வு கொண்டவர். இதனால் இருவரும் இசைவிணக்கமான உறவை ஏற்படுத்தி கொள்ளுதல் மற்றும் அடிப்படை சகிப்புத்தன்மையோடு
இருக்கவும் வாய்ப்பு உண்டாகும் அது நட்பு அல்லது காதல்
உறவுக்கு நல்லது. இருவராலும் ஒருவருக்குஒருவர் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற உதவ முடியும்.
ரிஷப ராசிக்காரரின் பொருள் வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறை மீனம் ராசிக்காரரின் எளிமையான அணுகுமுறைக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருக்க வாய்ப்பு உண்டு. இவர்களின் வாழ்க்கை பற்றிய அபிலாஷைகள் மற்றும் நோக்கங்கள் அதற்கு தரும் அவர்களின் முன்னுரிமைகள் இருவரிடமும் மிகவும் வேறுபட்டதாக இருக்க
வாய்ப்பு உண்டு. அதனால் இந்த வேறுபாடு சமாளிக்க பொறாமை இல்லாத அறிவார்ந்த ஒத்துழைப்பு இருவருக்கிடையே
இருக்கமானால் அவர்களது நட்பு அல்லது காதலுக்கு
வெகுமதியான வெற்றி கிடைக்கும். ரிஷப ராசிக்காரர் நாயகன் இருக்க விரும்புவார் அதனால் அடிக்கடி நல்ல
பாராட்டுகளை எதிர்பார்பார் அதை மீன ராசிக்காரர் தனது விசாலமான அறிவு அனுபவத்தால் பாராட்டுகளை சரியாக கொடுத்து கொண்டே வர வேண்டும்.
ரிஷப
ராசிக்காரர் இராசிநாதன் சுக்கிரன் ஆகும் மீன ராசிக்காரர் இராசிநாதன் சனி ஆகும் இந்த இருகிரகங்களும்
தங்களுக்குள் சுக்கிரனுக்கு குரு சமம், குருவுக்கு சுக்கிரன் பகை என்ற படி
உறவு தன்மையான கொண்ட கிரகங்கள். மேலும் இரண்டு
அந்தண கிரகங்கள் என்பதால் இந்த இராசிகள் சந்திக்கும் போது சற்று ஆழமான அல்லது எதார்த்தமான ஆன்மீக எண்ணங்கள் சார்ந்த
ஒற்றுமை இருக்க வாய்ப்பு ஏற்படும். காதலர்கள் அல்லது
நண்பர்களுக்கு கிடையே மலைபிரதேசங்கள் அல்லது புனித ஸ்தலங்களிலில் பயணம் செய்யும்
தன்மை கொண்டவர்கள். ரிஷப மீனம் இரண்டும் பெண்களின் இராசி என்பதால் ஒன்றாக, நட்பு பிரதிநிதித்துவம், விட்டுகொடுத்து போதல் போன்றவை ஒன்று பட்டு இருக்க வாய்ப்பு உண்டு ஆனால்
பொறாமை இருவருக்கிடையே இருக்கும் ஆனால் அது நட்பு அல்லது காதல் உறவின் ஆழத்தை குறைத்து விடும். ரிஷபம் தனது அத்துமீறலான
விருப்பத்தை எதையும் மீன
ராசிக்காரர் மீது திணிப்பதை ஏற்றகாமல் மீன ராசிக்கார்
உடனடியாக அதற்கு பதிலை தந்து விடும் அதனாலும் உறவின் ஆழம் குறைத்து விடும்.
ரிஷபம் பூமித்தன்மை கொண்ட இராசியாகும்
மற்றும் மீனம் ஒரு நீர்த்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால்
அல்லது காதலால் இணையும் போது மனித உறவுகளை இணைக்கும் சக்தி பெற்ற மீன ராசிக்காரும் மற்றும் பூமியின் வலுவான இயற்கை சக்தி பெற்ற
ரிஷப ராசிக்காரும் இணையும் போது புதுபுது படைப்புகள் உருவாக
ஏதுவாக இருக்கும் அதனால் இருவருக்கும் வளர்ச்சி உண்டாகலாம். மீனம் வாழ்க்கையின் எந்த உணர்ச்சிகளையும் எளிதாக கடந்து போகக்கூடியவர்கள். ஆனால் ரிஷப ராசிக்காரர் சற்று அறிவார்ந்த உணர்ச்சி
துடிப்புடன் பிணைத்திருப்பார்கள். ரிஷப ராசிக்காரால் மீனம் ராசிக்காரர் உணர்ச்சிகளை ஸ்திரப்படுத்த உதவும் முடியும். ஆனால் அதிகமாக தலையிட்டால் இருவரின் உறவிலும் அழுக்குகளே மிஞ்சும்.
ரிஷபம் ஸ்திரத்தன்மை கொண்ட இராசியாகும்
மீனம் ஒரு உபய இராசியாகும் அதனால்
இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது ரிஷபம் மற்றும் மீனத்தில் உள்ள
சந்திரன் வலுவிழந்தால் இருவருக்கும் தைரிய குறைவாக இருக்கும் அதனால் நட்பாகும்
போது புதிய திட்டங்கள் முன்னெடுப்பதிலும் மற்றும் காதலாகும் போது அதன் வெற்றிக்கு முன்னெடுக்கும்
போதும் தைரிய குறைவு தென்படலாம். ரிஷப ராசிக்காரர் நடைமுறை சார்ந்த விஷயங்களுக்கு கவனம் அதிகம் கொடுப்பார். மீன ராசிக்காரர் ஒவ்வொரு திட்டங்களுக்கு ஒவ்வொரு திட்டத்தை சார்ந்த காய்களை நகர்த்த கூடியவர்.
அதனால் மீனம் தனது நண்பரின் விஷயங்களுக்கு ஆதரவாக இருக்கும். அதற்கு பதிலாக ரிஷபம் மீனத்திற்கு அது விரும்பு மற்ற விஷயங்களை அனுபவிக்க சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்த பரஸ்பரத்தன்மையின்
வழியாக ஒரு நிலையான நட்பு அல்லது காதல் உருவாக சிறந்ததாக இருக்கும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ரிஷபம் & மீனம், ரிஷபம் vs மீனம் - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…"
கருத்துரையிடுக