Identifying characteristics of Moon - சந்திரனின் தன்மைகளை அடையாளம் காணல்…
உங்கள் ஜாதகத்தில் சந்திரனின் நிலையானது சூரியனின் நிலையைக்கு அடுத்த
முக்கியத்துவம் வாய்ந்த நிலையாகும், சந்திரன் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம், மற்ற 6 கிரகங்கள் சூரியனை சுற்றும் சந்திரன் மட்டுமே பூமியை சுற்றும் கிரகம். இதை பூமியின் துணைக்கோள் என்று நவீன விஞ்ஞான
உலகம் அழைத்தாலும் புவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 2,38,000 மைல்கள் இந்த குறைவான இடைவெளியின்
காரணமாக சந்திரனின் தாக்கம் பூமிக்கு அதிகம் அதனால் நம் ஜோதிட கலையில்
சந்திரனுக்கு முக்கியத்துவம் அதிகம், சூரியன் அனைத்து உயிர்களுக்கு உயிராற்றலை கொடுக்கிறார் என்றால் சந்திரன்
மனோ ஆற்றலையும் அதன் மூலமாக ஒவ்வொருவரின் தனித்துவமான பண்பு, குண நலன்களை காட்டு காரகத்துவம் பெற்றவராக
இருக்கிறார்.
தாரா ப்ரஹஸ்பதியின் மனைவி. இவள்
சந்திரன் மேல் காதல் கொள்ள அவர்களுக்கு புதன் பிறந்தான் - சந்திரன் தக்ஷனின் 27 மகள்களை மணந்தான் - சந்திரன் (ஸோமதேவன்) என்று ஏராளமான கதைகள் வேத ஜோதிடத்தில்
கூறப்படுவதுண்டு சுருக்கமாக சொல்வதானால் ஒருவரின் ஜீவபாவத்திற்கு காரகத்துவம்
பெற்றவர் மன அமைப்பிற்கும் இவரின் செயல்களே, சந்திரன் சூரியனின் ஒளி மூலம் மட்டுமே பிரதிபலித்து ஜொலிக்கிறது அது
போலவே சூரியன் என்ற ஆத்மகாரகனின் ஆற்றல் உதவியால் ஜீவ மனோநிலை பிறக்கிறது அது
பலபிறவிகளின் காரணமான வினை கணக்குகளால் மற்றவரிடம் இருந்து வித்தியாச பட்டு
உலகத்தை காண்கிறோம் அதாவது ஒரு செயலை பலபேர் பார்க்கிறார்கள் என்றால் அதை
ஒவ்வொருவரும் தனித்தனி விதமாக உள்வாங்குகிறார்கள் இல்லையா இதற்கெல்லாம் சந்திரனின்
இட அமைப்பே.
சந்திரன் மனோபலம், மாற்றம், தடுமாற்றம், பயம், ஊக்கம், புலன் அறிவு, நீங்கள்
யோசிப்பதற்க்கு முன் தரப்படும் தகவல் இவ்வாறான காரகத்துவங்களை பெற்ற
சந்திரன் வளர்வது தேய்வது என்று இருவிதமான ஒளியாற்றல் வேறுபாடுகளை சந்திக்கும்
கிரகம் என்பதால் வளர்வது வளர்பிறை என்றும் சுபசந்திரனாகவும் பார்க்கபடுகிறது
தேய்வது தேய்பிறை என்றும் அசுபசந்திரனாகவும் பார்க்கபடுகிறது எனவே ஜாதகத்தில்
நன்கு ஆராயப்பட வேண்டிய கிரகமாகவும் அதே நேரத்தில் முக்கிய கிரகமாகவும் உள்ளது
ஏன்னென்றால் உதாரணமாக ஜென்ம லக்னத்திற்கு சுபராகி ஜாதகத்தில் தேய்பிறை
அசுபசந்திரனாகினால் ஒருவிதமாகவும், ஜென்ம
லக்னத்திற்கு அசுபராகி வளர்பிறை சுபசந்திரனாகினால் ஒருவிதமாகவும், ஜென்ம லக்னத்திற்கு அசுபராகி ஜாதகத்தில்
தேய்பிறை அசுபசந்திரனாகினால் ஒருவிதமாகவும், ஜென்ம லக்னத்திற்கு சுபராகி ஜாதகத்தில் வளர்பிறை சுபசந்திரனாகினால்
ஒருவிதமாகவும் என பலவிதமான வகைகளில் அமரும் பலதரபட்ட நிலைகளுக்கு ஏற்ப பலதரபட்ட
மனித மனங்களை உருவாக்க கூடியவர்.
குறிப்பாக சொல்வதானால் எந்த ஜென்ம லக்னத்திற்கு சந்திரன் 6,8,12 ஆம் ஸ்தானங்களில் அமர்வது அவ்வளவு
சிறப்பில்லை மேலும் இருளின் காரகத்துவம் பெற்ற சனி, நிழலின் காரகத்துவம் பெற்ற இராகு, கேதுக்கு மிக அருகாமையில் 12 பாகைகுள்ளாக அமர்வதும் அவ்வளவு சிறப்பில்லை
ஏன்னென்றால் மனவளத்திற்கு காரகத்துவம் பெற்ற சந்திரன் இவ்வாறான நிலைகளை அடையும்
மனவளத்திற்கு பாதிப்போ அல்லது மாறுபாடான மனோநிலையோ ஏற்பட வாய்ப்பு
ஏற்படுத்திவிடும் அதுபோல தேய்பிறை சந்திரனாகி இராகு, கேதுவின் நட்சத்திரத்தில் அமர்வதும் அவ்வளவு சிறப்பில்லை. எந்த விதமான கிரகத்துடன் சேர்கிறாரோ அந்த
கிரகத்தின் தன்மைகளை அதிக படுத்துவார் சந்திரன் அதனால் நல்ல சுப கிரகத்துடன்
சேர்ந்தால் சுபபலமே, சந்திரன் 1, 7, 10 ஆம் கேந்திரங்கள், திரகோண
ஸ்தானங்களில் தனித்து குரு பார்வை பெற்று அமர்வது சிறப்பு.
சந்திரனின் அடிப்படையான காரகத்துவங்கள் - பெண்மை, அம்மா, கருத்தரித்தல், குழந்தை பிறப்பு, தொழிற்சங்கம், உள்ளுணர்வு, உணவுகள், செரிமானம், குளிர், ஈரமான பிரதேசம், சளித்தொல்லை, மார்பகங்கள், உணர்ச்சிகள், வீட்டு உறவினர்கள், இசைத் திறமை, தண்ணீர், இயற்கை அழகு, கற்பனை, வேளாண்மை,சுவை, நாக்கு, பயண ஏற்பாடுகள், உடலில் உள்ள திரவ பொருட்கள், சமையல், தின்பண்டம், நாகரீகம், இரத்தினக்கல்
முத்து மற்றும் பிற வெள்ளை கற்கள் இது போன்றவற்றிற்கெல்லாம் காரகத்துவங்கள்
பெற்றவர்.
0 Response to "Identifying characteristics of Moon - சந்திரனின் தன்மைகளை அடையாளம் காணல்…"
கருத்துரையிடுக