55 கோடி ரூபாயில் திருமணம் செய்து வைத்த தந்தை ரவி பிள்ளை ஜாதகம்...


55 கோடி ரூபாயில் திருமணம் செய்து வைத்த தந்தை ரவி பிள்ளை ஜாதகம்...

55 கோடி ரூபாயில் தனது மகளுக்கு கல்யாண செய்து வைத்தால் தற்போது அதிகமாக பார்க்கப்படும் நபர் இவரை பற்றி சின்ன முன்னோட்டதில் இருந்து ஆரம்பிப்போம், கேரளத்தில் கொல்லம் அருகேயுள்ள சாவாரா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாக பிறந்தவர் இந்த ரவி பிள்ளை, கொச்சியில் எம்.பி.ஏ படிப்பு முடித்து கேரளாவில் முதலில் சீட்டு தொழில் (Chit Fund) ஆரம்பித்தார் பின் ரவி பிள்ளை தொடர்ந்து கான்டிரக்ட் தொழில், கட்டுமான  தொழிலில் கால் பதித்தார் எனினும் தொழிலாளர் பிரச்னை காரணமாக இந்த தொழில்களை கைவிட்டு விட வேண்டிய நிலை ஏற்பட்டது. 



பின்னர் 1978ஆம் ஆண்டு சவுதிக்கு சென்ற ரவி பிள்ளை, முதலில் சவுதியில் நாஸர் அல் ஹாஜ்ரி என்ற கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து தொழிலை தொடங்கினார். 150 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. பின்னர்  ஆர்.பி என்று பெயர் மாற்றப்பட்டு, இன்று 70 ஆயிரம் ஊழியர்கள் பணி புரியும் ஆர்.பி குழுமமமாக வளர்ந்து நிற்கிறது. 



கடந்த 2014ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் 988ஆவது பணக்காரராக இவரை தேர்வு செய்தது. இந்தியாவை பொறுத்தவரை 30வது பணக்காரர் ஆவார், சவுதியில் இவரது ஆர்.பி குழுமம் தான் முன்னணி கட்டுமான நிறுவனம் ஆகும்.



கொஞ்சம் சிரமபட்டு தேடியதில் கிடைத்த ஜாதகம் என்பதால் சரியான பிறந்த நேரம் கிடைக்கவில்லை சுமாராக கருதப்படும் பிறந்த நேரம் என்பதால் நவாம்சம் போட்டால் தவறிவிடும் எனவே இராசிகட்டம் மட்டுமே கிடைத்துள்ளது இதன் அடிப்படையில் இராசிகட்டத்தில் அமைந்துள்ள யோகத்தை மட்டும் பார்ப்போம்.
ரவி பிள்ளை ஜாதகம்
  

துலாம் லக்னத்தில் 4 ஆம் ஸ்தானாதிபதி சனி பகவான் லக்னத்தில் உச்சம் பெற்றுள்ளார்  4 ஆம் ஸ்தானம் தான் வீடு, கட்டுமானத்துறைக்கு முக்கிய காரகத்துவம் பெற்ற ஸ்தானம் மேலும் கட்டுமானம் சார்ந்த பொறியியல் மற்றும் உதிரி பாகங்கள், அடிப்படை உலோகங்களுக்கு சனி  பகவான் காரகத்துவம் பெற்றவர் எனவே குருவால் 5ஆம் பார்வையாக பார்க்கபடும் உச்சம் பெற்றுள்ள அந்த சனி பகவானால் கான்டிரக்ட் தொழில், கட்டுமான  தொழிலில், மற்றும் கட்டமைப்பு, உருக்கு தொழிற்துறையில் வெற்றியும் மேலான அசைக்க முடியா நற்பலனும் பெற்றார். (சனி கொடுத்தாலும் கெடுத்தாலும் தடுப்பார் யார் என்பது ஜோதிட முதுமொழி)

தன  ஸ்தானாதிபதி செவ்வாய் 10ல் தொழில் ஸ்தானாதில் நீசபங்க ராஐயோகத்தில் உள்ளதாலும் கூட கரிம எண்ணெய்க்கு காரகத்துவம் பெற்ற கேதுவும் சேர்ந்தால் சிமென்ட், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்துறையிலும் வெற்றி பெற்று பெரும் செல்வ சேர்க்கையை இந்த தொழில் பெற்றார்.

அடுத்து 9 ஆம் ஸ்தானாதிபதி புதன் பகவான் 11 ஆம் லாப (income) ஸ்தானாதிபதி உடன் சேர்ந்து அதில் 11 ஆம் லாப (income) ஸ்தானாதிபதி சூரியன் ஆட்சி பெற்று சிறந்த புதாத்திபத்திய யோகத்தை தந்துள்ளது அதனால் இவர் பெரிய கெட்டிக்காரர் ஆகவும் சாதகமான காரியக்காரர் ஆகவும் ஆக்குவார் மேலும் லட்சுமி யோகத்தையுதம் தரும் இருந்தாலும் துலாம் லக்னத்திற்கு 12க்குடையவராகவும் புதன் பகவான் வருவதால் சொந்த மண்ணில் தனது முன்னேற்றம் செய்ய முடியாமல் அந்நிய தேசத்தில் பெரும் தொழிலதிபராக வலம் வருகிறார் சொந்த தேசத்தில் சம்பாதித்தால் என்ன அந்நிய தேசத்தில் சம்பாதித்தால் என்ன ஆக சிறந்த வகையில் பொருளீட்டினால் போதும்.

நான் ஏற்கெனவே பல பதிவுகளில் சொன்னது போல் 9,10,11 இந்த மூன்று ஸ்தானாதிபதிகளும் ஒருவருக்கொருவர் நெருங்கிய பலமான தொடர்ப்பை பெறுகிறார்கள் அதாவது 9 ஸ்தானாதிபதி  புதன் பகவான் 11 ஆம் ஸ்தானாதில், 10 ஸ்தானாதிபதி  சந்திர பகவான் 9 ஆம் ஸ்தானாதில், 11 ஸ்தானாதிபதி 9 ஸ்தானாதிபதி அமர்ந்த நட்சத்திராதிபதி 10ல் அமர்ந்துள்ளார் ஆக இந்த பலமான பிணைப்பால் தொழிலில் பெரும் செல்வம் மற்றும் சமூகத்தில் பெரும் மதிப்பு, தேசிய அங்கீகாரம் பெற்றுள்ளார். மேலும் சொந்த மண்ணில் விரல்விட்டு எண்ணதக்க இடத்தில் பணக்காரராக உள்ளார். மேலும் இது இராசிகட்டத்திற்க்கான சுருக்கமான பலன் மட்டும் அம்ச கட்டங்களிலும் இவர்கள் இது போல் வலுத்திருப்பார்கள் அப்படி இருந்தால் மட்டுமே பெரும் வெற்றி பெற முடியும்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "55 கோடி ரூபாயில் திருமணம் செய்து வைத்த தந்தை ரவி பிள்ளை ஜாதகம்..."

கருத்துரையிடுக

Powered by Blogger