ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 20 - சபா யோகம் அல்லது மேடை யோகம்…
ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 20 - சபா யோகம் அல்லது மேடை யோகம்…
ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக
இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை
எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால்
தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம்
இருக்கட்டும். மேலும் சில யோக
அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும்
காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம்
இருக்கட்டும்.
சபா யோகம் அல்லது மேடை யோகம்
ஜென்ம லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி, உச்சம் ஆகி, 2ஆம், 4ஆம், 10ஆம் ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் வீடுகளை
மாறி அமர்ந்திருந்தாலும் அல்லது இவைகளில் யரேனும் இரு ஸ்தானாதிபதிகள்
ஒருவருக்கொருவர் வீடுகளை மாறி அமர்ந்திருந்தாலும் இந்த அமைப்பை பெறும் போது சபா யோகம் அல்லது மேடை யோகம் ஏற்படுகிறது.
இதன் பலன்கள் -
செல்வ வளம் பெற்றவராக இருப்பார், அரசாங்க சபைகளில் மதிப்பான இருக்கை, தொழில் குழுக்களில் உரிய அங்கீகாரம் மற்றும்
ஆலோசனை தரதக்க பதவிகள் அமைப்பு, வலிமை
பேச்சு மற்றும் நிதி ஆலோசகர் தகுதி, அரசாங்க மற்றும் தொழில் சார்ந்த சங்க மேடைகளில் உரிய இடம், நிதி சார்ந்த பணி.
சபா யோகம் அல்லது மேடை யோகம் ஒரு வகை உதாரண படம்
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 20 - சபா யோகம் அல்லது மேடை யோகம்…"
கருத்துரையிடுக