ரிஷப லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்...
ரிஷப லக்கினத்தில் தோன்றியவருக்கு களத்திர (வாழ்க்கை துணை) ஸ்தானம் விருச்சிகம் (கொடுக்காற் ராசி) ஆகும் அதற்கு நாயகன் செவ்வாய் (குசன்) பகவான் ஆகும் இந்த லக்கினத்தில் தோன்றியவருக்கு இல்வாழ்க்கையை பற்றி கூறுகிறேன் கேட்பாய் ஆக அவருக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை தயங்காமல் குடும்ப பொறுப்புகளை தாங்குபவராக இருப்பார், பேச்சில் துணிவும் அறிவார்ந்து பேசக்கூடியவராகவும் இருப்பார், எல்லாரிடமும் சகஜமாக கலந்து பழகும் பண்புகளை பெற்றவர், அதிக சூடுமில்லாது குளிர்ச்சியும் இல்லாது மிதமான உடலமைப்பை உடையவர், சோர்வடையாமல் உழைக்க கூடிய ஆற்றல் பெற்றவர், ரகசியங்களை தனக்குள்ளேயே வைத்துக்கொள்ள தெரியாதவர்கள், வாழ்க்கை துணைக்கும் தனது தாயாருக்கும் குணம் ஒத்துவரவில்லை என்றால் சீக்கிரமே பகைத்து கொள்ளவார்கள், தேனீயை போல சிறுசிறு செல்வங்கள் பொருள்களை சேர்க்கவும் தெரிந்தவர்கள், குடும்பத்திற்கு தேவையான வளங்கள் பெருகும் ஆனால் இதை செவ்வாய் நன்றாக அமைந்தவருக்கு மட்டுமே உரைக்க வேண்டும்.
இரண்டாம் பாடல்
விளக்கம்
-
செவ்வாய் நன்றாக அமைய செவ்வாய் ரிஷப லக்கினத்தில் 4ஆம், 7ஆம், 10ஆம், 11ஆம் ஸ்தானங்கள் இவருக்கு உகந்த சுபர்களோடு சுபமான சாரம் பெற்று சேர்ந்து அமர்ந்திருந்தால் நல்லவிதமாக குடும்பத்தை நடத்தக்கூடியவராக இருப்பார் மங்களகரமான விஷயங்கள் வாழ்வில் தொடர்ந்து நடக்கும் மற்ற ஸ்தானங்களில் இருந்தால் கெடுதிகளை பயனற்ற செயல்களை ஏற்படுத்திவிடும், ஏதேனும் நிறைகளோ அல்லது குறைகளோ அளவை மீறி இருக்கும், வீண் செலவும், உரத்த குரலில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும் (சண்டை மாதிரி சில சமயம் சண்டையே), தணியாத ஏக்கங்கள் இருக்கும், தாமரை இலை தண்ணீர் போல ஆகும் அதாவது அவரது வாழ்க்கை துணைக்கும் அவருக்கும் ஒத்துப்போகாது ஆனாலும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அல்லது தங்களுக்குள் பிரிந்திருப்பார்கள் இதை ஒன்பது கோள்களும் அமர்ந்திருக்கும் நிலைகளை ஆராய்ந்து பின் உரைப்பாய் இந்த கோள்முனி சொல்லை.
மேஷ லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை...
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
மேஷ லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை...
0 Response to "ரிஷப லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்..."
கருத்துரையிடுக