மகர இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

மகர இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

 

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டு வருகிறது அதில் இந்த முறை -

 

இந்த மகர இராசி சனி கிரகத்த்தை ஆட்சியாளராக கொண்ட ராசி

இது தமஸ (தமோ) குணத்தை பிரதானமாக கொண்ட ராசி

இது நிலம் பூதத்தையும் தெற்கு திசையையும் குறிக்கிற ராசி

இது இரவில் வலிமை கொண்டு பின்னாலிருந்து உயர்ந்து உயரும் இராசி (rising in back)

இது பெரிய உடலையும் பலவண்ண நிறத்தையும்

காடுகள் மற்றும் நிலங்கள் இரண்டையும் குறிக்கிற ராசியாகும்

இந்த மகர ராசி முதல் பாதி நான்கு கால்கள் கொண்டதையும்

பிற்பாதி காலில்லாமல் தண்ணீரில் நகரும் தன்மையும் பிரதிபலிக்கும் ராசி

- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்



 


செவ்வாய் 10 ல் இருக்க பலன்கள், Mars in 10 house in Tamil, செவ்வாய் 10 ஆம் வீட்டில் அமர பலன்கள்..


 செவ்வாய் 10 ல் இருக்க பலன்கள், Mars in 10 house in Tamil, செவ்வாய் 10 ஆம் வீட்டில் அமர பலன்கள்..

செவ்வாய் பத்தில் சாதகமான நிலையில் இருந்தால், செவ்வாய் பத்தில் பாதகமான நிலையில் இருந்தால்: - 


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 

 


கோடீஸ்வர்களின் ஜாதகங்கள்- எலோன் மஸ்க் (Elon Musk) ஜாதகம் பற்றிய சிறப்பு Elon Musk Horoscope in Tamil


கோடீஸ்வர்களின் ஜாதகங்கள்- எலோன் மஸ்க் (Elon Musk) ஜாதகம் பற்றிய சிறப்பு Elon Musk Horoscope in Tamil

கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் என்ற தொடர் பதிவில் இன்று நாம் பார்க்க இருக்கும் ஜாதகம் எனக்கு மிகவும் பிடித்த தொழில் முனைவர் என்னை போன்ற நிறைய இளம் வயதினர்களுக்கும் பிடித்தவர் எலோன் மஸ்க் ஜாதகம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் (அவரது தனிபட்ட வாழ்க்கை பற்றி சில தகவல்கள் இங்கு சொல்ல வேண்டும்)

 

விஞ்ஞான யோசனைகள் அதன் எதிர்பாராத ஆனால் எதார்த்த கண்டுபிடிப்புகளை இவர் தனக்காக பயன்படுத்தி கொள்ளும் திறமைதான் இவரது சிறப்பு ஆகும் இதற்கு விஞ்ஞானத்தின் கிரகமான புதன் இவரது ஜாதகத்தில் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி  கண்டுபிடிப்புகளின் ஸ்தானமான 8 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமைந்து இருப்பது வலுவான அமைப்பாக ஆனது அதுவும் தொழில் ஸ்தானாதிபதியான சூரியன் சேர்ந்து அமைந்ததால் விஞ்ஞானிகளுக்கு இருக்க வேண்டிய நிபுனத்துவ யோகம் இந்த கிரகங்களின் சேர்கையால் உண்டானது.

 

அடுத்ததாக விஞ்ஞானம் என்றால் அதற்கு மிக துணையாக இருப்பது அறிவியல் நுட்பங்கள், அப்படிபட்ட அறிவியல் நுட்பங்களை அறிந்த கொள்ள லக்னத்தில் அமைந்த அறிவியல் கிரகமும் மற்றும் அறிவியல் ஸ்தானமான 5 ஆம் வீட்டின் அதிபதியும் ஆன குரு பகவான் சிறப்பாக லக்கனத்தில் அமைந்து ஐந்தாம் பார்வையாக லக்னத்தை பார்க்க மேலும் குரு பகவானை வித்யா ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் ஆட்சி பெற்ற சுக்கிரனும் சேர்ந்து பார்க்க அறிவியல் ஆர்வம் இவருக்கு இளம் வயதில் இருந்தே உள்ளது.

 

இயந்திரவியல் கிரகமான செவ்வாய் பகவான் உச்சம் பெற்று அமைந்து அந்த செவ்வாய் 7 ஆம் பார்வையாக மற்றும் 8 பார்வையாக பாக்கிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்தை பார்ப்பது விசேஷமானது. இத்தெல்லாம் இருக்கட்டும் நான் அடிக்கடி சொல்வது ஒரு நல்ல தொழில் முனைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்பு தைரியம் ஆகும் வியாபாரம் என்பது போர்களம் என்றால் அதில் போரிட தேவையான அடிப்படை ஆயுதமே தைரியம் தான் துணிவே துணை என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பகுத்தறிவோடு கணக்கிட்டு சாவல்களை எதிர்கொள்ளும் வலிமை இருக்க வேண்டும் இது இவரிடம் இருந்தது மேலும் கடுமையான தோல்வி மற்றும் நஷ்டங்களை இவர் தன் தொழில் வாழ்வில் சந்தித்த போதும் மனம் தளராது இவர் இருந்ததற்கு இந்த செவ்வாயின் பலமே காரணம்.

 

மிக வலிமையாக அமைந்த லாப ஸ்தானாதிபதியான புதன் இன்னொரு பணபர ஸ்தானமான 8ஆம்வீட்டில் ஆட்சி பெற்று அமைந்துள்ளது இன்னொரு பணபர ஸ்தான கிரகமான குரு பகவான் லக்ன கேந்திரம் ஆகும் மற்றும் வியாபார கிரகமான சுக்கிரன் 7 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று உள்ளது. லக்னாதிபதி செவ்வாய் பகவான் உச்சம் பெற்றதால் இவர் தன் வாழ்நாளில் கடைசி வரை அச்சப்படாமல் தனது லட்சியத்தை நிறைவேற்ற ஓடுவார் இவருக்கு பணத்தை விட கனவுகள் பெரியது. இந்த எலோன் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் கனடாவில் வாழ்ந்து பின் அமெரிக்க வந்தவர். தன் நாட்டில் பிறக்காதவருக்கு அவரின் திறமைக்கு தக்க வாய்ப்பை அளித்து அவர்களுக்கு உற்சாகம் கொடுப்பதால் தான் அமெரிக்க வல்லரசாக உள்ளது ஆனால் நம் நாட்டிரலேயோ சொந்த நாட்டில் பிறந்தவருக்கு கூட திறமைக்கு தகுந்த வாய்ப்புகள் வழங்படுகிறதா? என்பது பெரிய கேள்வி தான்

 

சந்திரன் திசையில் புதன் புத்தியில் தனது முதல் நிறுவனமாக 1995 ல் ஜிப்2 என்ற நிறுவன குழுமத்தைத் தொடங்கினார் இது செய்தித்தாள்களுக்கு வலைதள நகர வழிகாட்டியாக செயல்படும் மென்பொருள் நிறுவனமாகும் இந்த நிறுவன குழுமத்தை 1999 ல் விற்கபட்டது அதில் இவரின் பங்காக 2 கோடிக்கு மேல் கிடைத்தது.

 

ஜிப்2 நிறுவனத்தை விற்ற லாபத்தில் ஒரு கோடியை வைத்து 1999 இல் எக்ஸ்.காம் என்பதை ஆரம்பித்தார் அது தான் பின்னாட்களில் இணையவழி நிதி சேவைகள் மற்றும் மின்னஞ்சல் பணபரிமாற்ற நிறுவனமாக ஆனது அதன் அடுத்த கட்டமாக அந்த நிறுவனமே பேபால் என்ற பெயர் மாற்றத்தை அடைந்தது அதில் எலோன் மஸ்க் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார் இந்த பேபால் நிறுவன பங்கை 2002 இல் ஈபே நிறுவனத்தால் 150 கோடிக்கு அதன் பங்குகள் வாங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திலிருந்து எலோன் மஸ்க் அவர்களுக்கு 16 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது அப்போதும் அவருக்கு புதன் புத்தி தான் நடைபெற்றது அதுவும் உச்சம் பெற்ற லக்னாதிபதியான செவ்வாய் திசையில்.

 

சின்ன வயதில் இருந்தே எலோன் மஸ்க் அவர்களுக்கு வானியல், ஏவுகலன்கள் (rockets), விண்கலம் (spacecraft), விண்வெளி பயண கலன்கள் அதில் மனிதர்களின் பயணங்கள் என அந்த துறையும் அந்த துறை சார்ந்த கதைகள், திரைபடங்கள் மீதும் திராத ஆவல் இருந்தது கனவு இருந்தது அதை தனது தொழில் வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார் எலோன் மஸ்க் அதற்காக 2002 இல் தான் சம்பாதித்த பெரும் பொருளை முதலீடாக இந்த துறையில் விண்வெளி போக்குவரத்து நிறுவனமாக SpaceX என்ற நிறுவனத்தை நிறுவுகிறார் இந்த நிறுவனத்திற்காக ஆரம்ப காலத்தில் நிறைய நிதி நெருக்கடிகளை சந்தித்தார் இருந்தாலும் சம்பாதிப்பதற்க்கான சந்தர்ப்பங்களையும் சாத்தியங்களையும் கண்டுபிடிப்பது தான் ஒரு தொழில் முனைவரின் சிறப்பு.

 

எலோன் மஸ்க் விண்வெளி போக்குவரத்து தொழில் இருந்த அதிக செலவீனங்களை தனது SpaceX நிறுவனத்தின் மூலம் குறைக்க முயற்சித்தார் அதை போல தனது நீண்டகால குறிக்கோளான வணிக விண்வெளி பயணத்தை சாத்தியமாக்குவதை மற்ற நிறுவனங்களின் ஒப்பீட்டளவில் மலிவு விலையில் தரும் சேவையை தொடங்கினார்.

 

பூமியின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் தனியார் உருவாக்கிய திரவ-எரிபொருள் ஏவுகலன் (liquid-fuel rocket) என்ற பெருமை எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனத்திற்கு கிடைத்தது மேலும் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட விண்கலமும் (அதாவது spacecraft) SpaceX நிறுவனத்தை சார்ந்தது தான் இது போன்ற விஷயங்களை சாதிக்க அந்த நாட்டின் NASA நன்கு உதவியது நாசாவிடம் இருந்து வணிக ஒப்பந்தங்களை பெற்று அதில் சாதித்தார் இவரிடம் இருந்த தொலைநோக்கு பார்வை மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்கு இவர் கொடுத்த ஒத்துழைப்புகள் இவரின் ஆழமான லட்சியத்திலிருந்து உண்டாது. அடுத்த கட்டமாக இந்த நிறுவனம் செயற்கைக்கோள் அனுப்பி அதன் மூலமாக இணையத் தொடர்பு பாதையை உருவாக்க முயற்சித்து கொண்டிருக்கிறது

 

இவரின் அடுத்த பாய்சல் 2003 ஆம் ஆண்டில், டார்பென்னிங் மற்றும் மார்ட்டின் எபர்ஹார்ட் என்பவர்கள் இணைந்து உருவாக்கிய நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ் என்ற மின்சார கார்களை தயாரிக்கும் துவக்கநிலை நிறுவனத்தில் முதலீட்டாளராக எலோன் மஸ்க் 2004 ல் இணைந்தார் பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது முதலீட்டையும் மற்றும் அதிகாரத்தை உயர்த்தினார் இவர் இயல்பாக சிறப்பான யோசனைகளும் நோக்கங்களும் செயல்திறமையும் உடையவர் என்பதால் எலோன் மஸ்க்கின் பங்களிப்பு இந்த நிறுவனத்தில் அதிகரித்தது 2008 க்கு பிறகு இந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்பான தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் 20% பங்கு உரிமையாளர்

ஆக மாறினார் இந்த நிறுவனம் உலகில் முக்கியமான மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும் ஆண்டுக்கு விற்பனை வருவாயாக சுமார் 2400 கோடியை ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

சோலார் பேனல்கள் மற்றும் சூரிய கூரை ஓடுகளை உருவாக்கி விற்பனை செய்கிற சோலார்சிட்டி என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இது அமெரிக்காவில் சூரிய சக்தி அமைப்புகளை வழங்கும் பெரிய நிறுவனமாகும். எலோன் மஸ்க் கனவுத் திட்டமாக இருப்பது அதிவேக வளையப் போக்குவரத்து (Hyperloop) என்ற திட்டம் ஆகும் இது பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்காக விமானத்தை விட வேகத்தில் வெற்றிடமாக்கப்பட்ட வளைய குழாய் அமைப்பிற்குள் உராய்வுகள் அற்ற வாகனத்தை காற்றால் உந்தி தள்ளி நகர்த்தி செல்வது ஆகும் இது போன்று இவரின் பல மிக மிக புதிய தொழில்நுட்பங்களை தனது தொழில்ரீதியான முன் முயற்சியாக செய்வது தான் இவரை நிறைய இளைஞர்களுக்கு இவரை பிடிக்க்க காரணம் ஆகும் இப்படிபட்ட தொழில் முனைவர்கள் தமிழர்களில் இருந்து வர வேண்டும் என்பதே எனது நீண்ட கால உயிரிய நினைப்பு ஆகும்.

 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 

 


நிலம் மற்றும் வீடு வாங்கும் போது கவனித்து தவிர்க்க வேண்டிய இடங்கள்...


நிலம் மற்றும் வீடு வாங்கும் போது கவனித்து தவிர்க்க வேண்டிய இடங்கள்...


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 

 



 

சூதாட்டமும் ஜோதிடமும் சூதாட்ட அடிப்படை விஷயங்கள் ஜோதிட வீடுகள் மற்றும் அதன் படிநிலை இழப்புகள்...

 சூதாட்டமும் ஜோதிடமும் சூதாட்ட அடிப்படை விஷயங்கள் ஜோதிட வீடுகள் மற்றும் அதன் படிநிலை இழப்புகள்...



 

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 55 - அரசகாரிய யோகம்.., அரசாங்க காரியஸ்தன் ஆகும் யோகம்

 

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 55 - அரசகாரிய யோகம்.., அரசாங்க காரியஸ்தன் ஆகும் யோகம்

 

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

 

அரசகாரிய யோகம் -

உதயாதிப னெனினும் குருபுகரேனும் உத்தமராய்

இதமாகி நற்சுப கேந்திரம் இசையிற் சிதமிகவே

பதவாழ் வுருதீர்க்காஇதம் பயில்விற்பனமதியும்

கதமாக இப்புவி மன்னவர் காரியஸ்தனுமாமே.

 

உதயாதிபன் எனினும் குரு புகர் எனும் உத்தமராய்

இதம் ஆகி நான்கு சுப கேந்திரம் இசையில் சிதம் மிகவே

பதவாழ் உருதீர்க்கம் இதம் (நல்லவிதமாக) பயில் (கற்றவர்) விற்பன்னர் மதியும்

கதமாக (அடைகை) இப்புவி மன்னவர் காரியஸ்தனும் ஆமே.

 

விற்பன்னர் மதி = மிக்கத் திறமையுடன் பேசும் அறிவு, (குறிப்பிட்ட துறையில்) மிகுந்த தேர்ச்சிபெற்ற அறிவு. கல்வியிற் சிறந்த அறிவு.

 

லக்னாதிபதியும் குருவும் மற்றும் சுக்கிரனும் குற்றமில்லா தன்மையுடன் நல்லவிதமாக நான்கு சுப கேந்திரங்கள் ஆன ஜென்ம கேந்திரமான... மீதி காணோளியில் - 



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

உத்திராடம் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தி அடியார்கள் & மகான்கள்...

உத்திராடம் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தி அடியார்கள் & மகான்கள்...

நட்சத்திரம் - உத்திராடம் உத்திராடம் நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் - சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தின் அதிதேவதை - விஸ்வதேவன் உத்திராடம் நட்சத்திரத்தின் யோனி - கீரி உத்திராடம் நட்சத்திரத்தின் கணம் - மானுஷ கணம் உத்திராடம் நட்சத்திரத்தின் பூதம் - ஆகாயம் (விண்) உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி இருப்பு - தனுசு விண்மீன் மண்டலத்தில் முதல் பாதமும் பின் மகர ராசி மற்ற மூன்று பாதங்களும் கொண்ட 8 நட்சத்திர கூட்டங்களின் தொகுப்பாக யானையின் துதிக்கை போல் அமைந்துள்ளதாக இந்த நட்சத்திர மண்டலம் உள்ளது. உத்திராடம் நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - தனுசு ராசியின் பாகை 266:40:00 முதல் மகர ராசிக்குள் பாகை 280:00:00 கலை வரை இந்த நட்சத்திரத்தின் இருப்பாக உள்ளது. உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - குரு பகவான், சனி பகவான்   சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு உத்திராடம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம ராசி உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியாகும் உத்திராடம் நட்சத்திரத்தின் 2,3,4 பாதங்கள் மகர ராசியாகும். சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகன் என்று அடிப்படையாக ஜோதிட சாஸ்திரத்தால் அழைக்கப்பட கூடிய காரணத்தால் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை தெரிந்து கொள்ள சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.   உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் - 


 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 

 

கடகம் & கன்னி, கடகம் vs கன்னி - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…


 கடகம் & கன்னி, கடகம் vs கன்னி - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

கடகம் & கன்னி, கடகம் vs கன்னி -

 

இந்த இரு கடகம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது தனது குறிகோளை மற்றும் உணர்ச்சியை அதிகம் நம்பும் இரண்டு ராசிகாரர்களின் கூட்டு ஆகும் (Both are emotion-oriented and goal-oriented persons). ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றவர்களாக இருந்தால் நல்ல நண்பர்களாக மற்றும் காதலர்களாக இருக்க வாய்ப்புண்டு இருந்தாலும் இருவருக்கும் நல்ல நோக்கமும் இருக்க வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்களிடம் உள்ள வாழ்க்கை பற்றிய அக்கறை மற்றும் சொந்தபந்தங்கள் மீது ஆசை போன்ற குணங்களால் கவரப்படுவார்கள், கடக ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களிடம் உள்ள ஒத்துப்போகும் பண்பு மற்றும் புதுமை நாட்டம் போன்ற குணங்களால் கவரப்படுவார்கள். இது நட்பு ஆனாலும் அல்லது காதல் ஆனாலும் வளர நேரம் நிறைய எடுக்கலாம். இருவரும் பொது அறிவு மற்றும் அதிக நம்பிக்கைகள் கொண்டவர்கள் அதே சமயம் பொருள்சார்ந்தவர்கள்.

 

எடுக்கும் முயற்சிகளுக்காக கடினமாக உழைக்க இந்த நண்பர்கள் தயாராக இருப்பார்கள் ஆனால் பொருள்சார்ந்தவர்களாக இருப்பதால் பொருளாதார பேதம் அதிகமாக உருவானால் அது நட்பை பாதிக்கலாம் அதே போல இந்த இரண்டு ராசிக்காரர்களும் காதலர்களாக இருந்தால் இருவரும் அதிக அன்பாக பழகுவார்கள் ஆனால் தனிப்பட்ட தாக்குதல் ஒருவருக்கொருவர் புரிந்தால் காதலை பாதிக்கலாம். சுகத்தையும் மற்றும் சேவையையும் விரும்பக்கூடியவர்கள் பழக கூடிய கன்னி ராசி நண்பர்களிடம் அதை எதிர்பார்பார்கள் கடக ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களிடம் அந்த எதிர்பார்பை பூர்த்தி செய்து கொடுக்ககூடிய இளமையான மனம் இருக்கும் எனவே இந்த இரண்டு ராசிக்காரர்களிடம் இந்த அம்சம் நன்றாக பொருந்தி வரும்.

 

கடக ராசிக்காரர் இராசிநாதன் சந்திரன் ஆகும் கன்னி ராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் இந்த கிரகங்கள் தங்களுக்கிடையே நட்பு சமம் உறவில் இருக்கும் கிரகங்கள் உறவுக்கார கிரகங்கள் எனவே சந்திரன் அன்பு, பாசம், அக்கறை, ஆதரவுக்கான தலைமை பெண் கிரகம் ஆகும் புதன் என்பது தகவல்தொடர்பு, அறிவார்ந்த அணுகுமுறையைக் கொண்டுள்ள கிரகம். நண்பர் அல்லது காதலர் இணைவதால் கருணையும் கண்டிப்பு ஏக்கமும் கூடிய பாச நேசத் துடிப்புகள் அதிகம் உள்ளதாக இவர்களின் உறவு இருக்கும். ஒருவருக்கொருவர் மற்றவர்களைப் எண்ணத்தை படிப்பதில் ஆர்வமும் திறமையானவர்கள். இந்த இரண்டு ராசிகாரர்களுக்கிடையே சேர உருவாக கூடிய தவறான குணம் பிடிவாதமும் மிக உணர்ச்சிவசப்பட்டவர்களாக  இருப்பது இந்த இரண்டும் இவர்களின் நட்பை மற்றும் காதலை பாதிக்க கூடியது.

 

கடகம் ஒரு நீர்த்தன்மை இராசியாகும் கன்னி ஒரு நிலத்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது இரு ராசிக்காரர்களும் உடைமைகளை சொத்துகளை அதிகமாக பாதுகாக்க சிந்திப்பவர்கள், அதே போல இருவருமே பிரச்சனைகளை அமைதியான வழியில் தீர்க்க நினைப்பார்கள். செழிப்புக்கான அபிலாஷைகளை உள்ளவர்கள் எனவே வசதி வாய்ப்புகளுக்கு மாறுபாடான ஆசை வரும் போது இரண்டு பேரின் நட்பும் மாறுபாடும். ஆடம்பரமான எண்ணங்கள் தோன்றினாலும் இவர்களின் பந்தத்திற்கு பிளவுகள் தோன்றலாம். நீர் அதிகமாகி நிலம் குறைந்தால் இழப்பு தான் நிலம் அதிகமாக தோன்றி நீர் குன்றினாலும் வறட்சி தான் அது போல இவர்கள் இருவரின் இடையே தோன்றும் நட்பு ஆனாலும் அல்லது காதல் ஆனாலும் அது ஒருவருகொருவர் கட்டுபாடோ அவர் அவர் அளவறிந்து நடந்து கொண்டால் இனிக்கும் இல்லையோன்றால் கசக்கும்.

 

கடகம் ஒரு சர இராசியாகும் கன்னி ஒரு உபய இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது கன்னி ராசிக்காரர்கள் புதிய யோசனைகளை முன்வைக்க முனைகையில் கடக ராசிக்காரர்கள் அதை முதலில் ஏற்று கொண்டு செயல்படுவார்கள் ஆனால் குறிப்பிட்ட காலம் கழித்து ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு செல்ல விரும்புவார்கள் அதன் காரணமாக எதிலும் பொறுமை வேண்டும். காதலர்களாக இருக்கும் போது இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒருவர் மூளைக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார் மற்றொருவர் இருதயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார் இந்த வேறுபாடுகளை உணர்ந்து பழகி வந்தால் இந்த இரண்டு ராசிகாரர்களுக்கிடையே உள்ள பந்தம் சிறப்பானதாக அமையும். பரஸ்பர நலன்கள் கொண்டவர்களாக இருந்தால் மிகவும் இணக்கமான நட்பை உருவாக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 

 

 


ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 28 to 32 பாடல்கள் பகுதி – 5

Ramana Maharshi’s Arunachala Aksharamanamalai Tamil Commentary Part - 5 ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 28 to 32 பாடல்கள் பகுதி – 5


28. சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவாயான்
     சாந்தமாய்ப் போவன் அருணாசலா! (அ)

29. சித்தங் குளிரக்கதிர் அத்தம்வைத்து அமுத
     வாயைத்திற அருண்மதி அருணாசலா! (அ)

30. சீரை அழித்து நிர்வாணமாச் செய்துஅருள்
     சீரை அளித்தருள் அருணாசலா! (அ)

31. சுகக்கடல் பொங்கச் சொல்லுணர்வு அடங்கச்
     சும்மா பொருந்திடுஅங்கு அருணாசலா! (அ)

32. சூதுசெய்து என்னைச் சோதியாது இனிஉன்
     சோதி உருக்காட்டு அருணாசலா! (அ)
Tamil Commentary - ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 
 

ஜோதிடமும் மருத்துவமும் - ராகு கேதுக்களின் முக்கியத்துவம் மற்றும் நவதுவாரங்கள் மருத்துவ விளக்கம்...

ஜோதிடமும் மருத்துவமும் - ராகு கேதுக்களின் முக்கியத்துவம் மற்றும் நவதுவாரங்கள் மருத்துவ விளக்கம்...

 

 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


தனுசு இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…


 தனுசு இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

 

தனுசு இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

 

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டு வருகிறது அதில் இந்த முறை -

 

இந்த தனுசு இராசி தலையில் இருந்து உதயமாகும் ராசி (முகப்பிலிருந்து உயரும் ராசி அதாவது முன்புறத்திலிருந்து அந்த ராசி உதயமாகும் rising in front, rising in upper part, rising at top)

இந்த தனுசு இராசி குரு கிரகத்தின் ஆட்சியாளராக கொண்ட ராசி

இது சாத்வீக குணங்களும் பழுப்பு மஞ்சலான நிறமும் கொண்ட ராசி

இது இரவில் வலிமை கொண்டு அதே சமயம் நெருப்பு கொண்டு எரியும் கொண்ட ராசி

இது இராஜாங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தும் இராசி

இதில் தனுசு முதல் பாதி இரண்டு கால் ராசியாகவும் பிற்பாதி நான்கு கால் ராசியாகவும்

இது கிழக்கு திசையை சார்ந்த இராசி தரையில் இருந்து பிரகாசமான ராசி

இது சமமாக கட்டமைந்து பின் வளைந்து வில் போல் அமைந்த ராசி

- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்

 


சந்திரன் 10ல் பத்தாம் இடத்தில் இருந்தால், சந்திரன் 10ஆம் வீட்டில் அமர்ந்தால் அடிப்படை பலன்கள், Moon Chandran in 10th house in Tamil...


 சந்திரன் 10ல் பத்தாம் இடத்தில் இருந்தால், சந்திரன் 10ஆம் வீட்டில் அமர்ந்தால் அடிப்படை பலன்கள், Moon Chandran in 10th house in Tamil...

 


ஜோதிட துணக்குகள் - பிறந்த ஜன்ம ராசி கோச்சாரத்தில் நடக்கும் சமயம் இந்த இந்த காரியங்களை செய்யலாம்....

ஜோதிட துணக்குகள் - பிறந்த ஜன்ம ராசி கோச்சாரத்தில் நடக்கும் சமயம் இந்த இந்த காரியங்களை செய்யலாம்....



 


Powered by Blogger