மகர இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

மகர இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று

 

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டு வருகிறது அதில் இந்த முறை -

 

இந்த மகர இராசி சனி கிரகத்த்தை ஆட்சியாளராக கொண்ட ராசி

இது தமஸ (தமோ) குணத்தை பிரதானமாக கொண்ட ராசி

இது நிலம் பூதத்தையும் தெற்கு திசையையும் குறிக்கிற ராசி

இது இரவில் வலிமை கொண்டு பின்னாலிருந்து உயர்ந்து உயரும் இராசி (rising in back)

இது பெரிய உடலையும் பலவண்ண நிறத்தையும்

காடுகள் மற்றும் நிலங்கள் இரண்டையும் குறிக்கிற ராசியாகும்

இந்த மகர ராசி முதல் பாதி நான்கு கால்கள் கொண்டதையும்

பிற்பாதி காலில்லாமல் தண்ணீரில் நகரும் தன்மையும் பிரதிபலிக்கும் ராசி

- ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம்



 


0 Response to "மகர இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…"

கருத்துரையிடுக

Powered by Blogger