கடகம் & கன்னி, கடகம் vs கன்னி - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…


 கடகம் & கன்னி, கடகம் vs கன்னி - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…

கடகம் & கன்னி, கடகம் vs கன்னி -

 

இந்த இரு கடகம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது தனது குறிகோளை மற்றும் உணர்ச்சியை அதிகம் நம்பும் இரண்டு ராசிகாரர்களின் கூட்டு ஆகும் (Both are emotion-oriented and goal-oriented persons). ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றவர்களாக இருந்தால் நல்ல நண்பர்களாக மற்றும் காதலர்களாக இருக்க வாய்ப்புண்டு இருந்தாலும் இருவருக்கும் நல்ல நோக்கமும் இருக்க வேண்டும். கன்னி ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்களிடம் உள்ள வாழ்க்கை பற்றிய அக்கறை மற்றும் சொந்தபந்தங்கள் மீது ஆசை போன்ற குணங்களால் கவரப்படுவார்கள், கடக ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களிடம் உள்ள ஒத்துப்போகும் பண்பு மற்றும் புதுமை நாட்டம் போன்ற குணங்களால் கவரப்படுவார்கள். இது நட்பு ஆனாலும் அல்லது காதல் ஆனாலும் வளர நேரம் நிறைய எடுக்கலாம். இருவரும் பொது அறிவு மற்றும் அதிக நம்பிக்கைகள் கொண்டவர்கள் அதே சமயம் பொருள்சார்ந்தவர்கள்.

 

எடுக்கும் முயற்சிகளுக்காக கடினமாக உழைக்க இந்த நண்பர்கள் தயாராக இருப்பார்கள் ஆனால் பொருள்சார்ந்தவர்களாக இருப்பதால் பொருளாதார பேதம் அதிகமாக உருவானால் அது நட்பை பாதிக்கலாம் அதே போல இந்த இரண்டு ராசிக்காரர்களும் காதலர்களாக இருந்தால் இருவரும் அதிக அன்பாக பழகுவார்கள் ஆனால் தனிப்பட்ட தாக்குதல் ஒருவருக்கொருவர் புரிந்தால் காதலை பாதிக்கலாம். சுகத்தையும் மற்றும் சேவையையும் விரும்பக்கூடியவர்கள் பழக கூடிய கன்னி ராசி நண்பர்களிடம் அதை எதிர்பார்பார்கள் கடக ராசிக்காரர்கள் கன்னி ராசிக்காரர்களிடம் அந்த எதிர்பார்பை பூர்த்தி செய்து கொடுக்ககூடிய இளமையான மனம் இருக்கும் எனவே இந்த இரண்டு ராசிக்காரர்களிடம் இந்த அம்சம் நன்றாக பொருந்தி வரும்.

 

கடக ராசிக்காரர் இராசிநாதன் சந்திரன் ஆகும் கன்னி ராசிக்காரர் இராசிநாதன் புதன் ஆகும் இந்த கிரகங்கள் தங்களுக்கிடையே நட்பு சமம் உறவில் இருக்கும் கிரகங்கள் உறவுக்கார கிரகங்கள் எனவே சந்திரன் அன்பு, பாசம், அக்கறை, ஆதரவுக்கான தலைமை பெண் கிரகம் ஆகும் புதன் என்பது தகவல்தொடர்பு, அறிவார்ந்த அணுகுமுறையைக் கொண்டுள்ள கிரகம். நண்பர் அல்லது காதலர் இணைவதால் கருணையும் கண்டிப்பு ஏக்கமும் கூடிய பாச நேசத் துடிப்புகள் அதிகம் உள்ளதாக இவர்களின் உறவு இருக்கும். ஒருவருக்கொருவர் மற்றவர்களைப் எண்ணத்தை படிப்பதில் ஆர்வமும் திறமையானவர்கள். இந்த இரண்டு ராசிகாரர்களுக்கிடையே சேர உருவாக கூடிய தவறான குணம் பிடிவாதமும் மிக உணர்ச்சிவசப்பட்டவர்களாக  இருப்பது இந்த இரண்டும் இவர்களின் நட்பை மற்றும் காதலை பாதிக்க கூடியது.

 

கடகம் ஒரு நீர்த்தன்மை இராசியாகும் கன்னி ஒரு நிலத்தன்மை இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது இரு ராசிக்காரர்களும் உடைமைகளை சொத்துகளை அதிகமாக பாதுகாக்க சிந்திப்பவர்கள், அதே போல இருவருமே பிரச்சனைகளை அமைதியான வழியில் தீர்க்க நினைப்பார்கள். செழிப்புக்கான அபிலாஷைகளை உள்ளவர்கள் எனவே வசதி வாய்ப்புகளுக்கு மாறுபாடான ஆசை வரும் போது இரண்டு பேரின் நட்பும் மாறுபாடும். ஆடம்பரமான எண்ணங்கள் தோன்றினாலும் இவர்களின் பந்தத்திற்கு பிளவுகள் தோன்றலாம். நீர் அதிகமாகி நிலம் குறைந்தால் இழப்பு தான் நிலம் அதிகமாக தோன்றி நீர் குன்றினாலும் வறட்சி தான் அது போல இவர்கள் இருவரின் இடையே தோன்றும் நட்பு ஆனாலும் அல்லது காதல் ஆனாலும் அது ஒருவருகொருவர் கட்டுபாடோ அவர் அவர் அளவறிந்து நடந்து கொண்டால் இனிக்கும் இல்லையோன்றால் கசக்கும்.

 

கடகம் ஒரு சர இராசியாகும் ன்னி ஒரு உபய இராசியாகும் அதனால் இந்த இருவரும் நட்பால் அல்லது காதலால் இணையும் போது கன்னி ராசிக்காரர்கள் புதிய யோசனைகளை முன்வைக்க முனைகையில் கடக ராசிக்காரர்கள் அதை முதலில் ஏற்று கொண்டு செயல்படுவார்கள் ஆனால் குறிப்பிட்ட காலம் கழித்து ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு செல்ல விரும்புவார்கள் அதன் காரணமாக எதிலும் பொறுமை வேண்டும். காதலர்களாக இருக்கும் போது இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒருவர் மூளைக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார் மற்றொருவர் இருதயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பார் இந்த வேறுபாடுகளை உணர்ந்து பழகி வந்தால் இந்த இரண்டு ராசிகாரர்களுக்கிடையே உள்ள பந்தம் சிறப்பானதாக அமையும். பரஸ்பர நலன்கள் கொண்டவர்களாக இருந்தால் மிகவும் இணக்கமான நட்பை உருவாக்கும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 

 

 


0 Response to "கடகம் & கன்னி, கடகம் vs கன்னி - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger