கோடீஸ்வர்களின் ஜாதகங்கள்- எலோன் மஸ்க் (Elon Musk) ஜாதகம் பற்றிய சிறப்பு Elon Musk Horoscope in Tamil
கோடீஸ்வர்களின் ஜாதகங்கள்- எலோன் மஸ்க் (Elon Musk) ஜாதகம் பற்றிய சிறப்பு Elon Musk Horoscope in Tamil
கோடீஸ்வர்களின் ஜாதகங்கள் என்ற தொடர் பதிவில் இன்று நாம் பார்க்க இருக்கும் ஜாதகம் எனக்கு மிகவும் பிடித்த தொழில் முனைவர் என்னை போன்ற நிறைய இளம் வயதினர்களுக்கும் பிடித்தவர் எலோன் மஸ்க் ஜாதகம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் (அவரது தனிபட்ட வாழ்க்கை பற்றி சில தகவல்கள் இங்கு சொல்ல வேண்டும்)
விஞ்ஞான யோசனைகள் அதன் எதிர்பாராத ஆனால் எதார்த்த கண்டுபிடிப்புகளை இவர் தனக்காக பயன்படுத்தி கொள்ளும் திறமைதான் இவரது சிறப்பு ஆகும் இதற்கு விஞ்ஞானத்தின் கிரகமான புதன் இவரது ஜாதகத்தில் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் ஸ்தானமான 8 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமைந்து இருப்பது வலுவான அமைப்பாக ஆனது அதுவும் தொழில் ஸ்தானாதிபதியான சூரியன் சேர்ந்து அமைந்ததால் விஞ்ஞானிகளுக்கு இருக்க வேண்டிய நிபுனத்துவ யோகம் இந்த கிரகங்களின் சேர்கையால் உண்டானது.
அடுத்ததாக விஞ்ஞானம் என்றால் அதற்கு மிக துணையாக இருப்பது அறிவியல் நுட்பங்கள், அப்படிபட்ட அறிவியல் நுட்பங்களை அறிந்த கொள்ள லக்னத்தில் அமைந்த அறிவியல் கிரகமும் மற்றும் அறிவியல் ஸ்தானமான 5 ஆம் வீட்டின் அதிபதியும் ஆன குரு பகவான் சிறப்பாக லக்கனத்தில் அமைந்து ஐந்தாம் பார்வையாக லக்னத்தை பார்க்க மேலும் குரு பகவானை வித்யா ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் ஆட்சி பெற்ற சுக்கிரனும் சேர்ந்து பார்க்க அறிவியல் ஆர்வம் இவருக்கு இளம் வயதில் இருந்தே உள்ளது.
இயந்திரவியல் கிரகமான செவ்வாய் பகவான் உச்சம் பெற்று அமைந்து அந்த செவ்வாய் 7 ஆம் பார்வையாக மற்றும் 8 பார்வையாக பாக்கிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்தை பார்ப்பது விசேஷமானது. இத்தெல்லாம் இருக்கட்டும் நான் அடிக்கடி சொல்வது ஒரு நல்ல தொழில் முனைவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை பண்பு தைரியம் ஆகும் வியாபாரம் என்பது போர்களம் என்றால் அதில் போரிட தேவையான அடிப்படை ஆயுதமே தைரியம் தான் துணிவே துணை என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பகுத்தறிவோடு கணக்கிட்டு சாவல்களை எதிர்கொள்ளும் வலிமை இருக்க வேண்டும் இது இவரிடம் இருந்தது மேலும் கடுமையான தோல்வி மற்றும் நஷ்டங்களை இவர் தன் தொழில் வாழ்வில் சந்தித்த போதும் மனம் தளராது இவர் இருந்ததற்கு இந்த செவ்வாயின் பலமே காரணம்.
மிக வலிமையாக அமைந்த லாப ஸ்தானாதிபதியான புதன் இன்னொரு பணபர ஸ்தானமான 8ஆம்வீட்டில் ஆட்சி பெற்று அமைந்துள்ளது இன்னொரு பணபர ஸ்தான கிரகமான குரு பகவான் லக்ன கேந்திரம் ஆகும் மற்றும் வியாபார கிரகமான சுக்கிரன் 7 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று உள்ளது. லக்னாதிபதி செவ்வாய் பகவான் உச்சம் பெற்றதால் இவர் தன் வாழ்நாளில் கடைசி வரை அச்சப்படாமல் தனது லட்சியத்தை நிறைவேற்ற ஓடுவார் இவருக்கு பணத்தை விட கனவுகள் பெரியது. இந்த எலோன் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் கனடாவில் வாழ்ந்து பின் அமெரிக்க வந்தவர். தன் நாட்டில் பிறக்காதவருக்கு அவரின் திறமைக்கு தக்க வாய்ப்பை அளித்து அவர்களுக்கு உற்சாகம் கொடுப்பதால் தான் அமெரிக்க வல்லரசாக உள்ளது ஆனால் நம் நாட்டிரலேயோ சொந்த நாட்டில் பிறந்தவருக்கு கூட திறமைக்கு தகுந்த வாய்ப்புகள் வழங்படுகிறதா? என்பது பெரிய கேள்வி தான்
சந்திரன் திசையில் புதன் புத்தியில் தனது முதல் நிறுவனமாக 1995 ல் ஜிப்2 என்ற நிறுவன குழுமத்தைத் தொடங்கினார் இது செய்தித்தாள்களுக்கு வலைதள நகர வழிகாட்டியாக செயல்படும் மென்பொருள் நிறுவனமாகும் இந்த நிறுவன குழுமத்தை 1999 ல் விற்கபட்டது அதில் இவரின் பங்காக 2 கோடிக்கு மேல் கிடைத்தது.
ஜிப்2 நிறுவனத்தை விற்ற லாபத்தில் ஒரு கோடியை வைத்து 1999 இல் எக்ஸ்.காம் என்பதை ஆரம்பித்தார் அது தான் பின்னாட்களில் இணையவழி நிதி சேவைகள் மற்றும் மின்னஞ்சல் பணபரிமாற்ற நிறுவனமாக ஆனது அதன் அடுத்த கட்டமாக அந்த நிறுவனமே பேபால் என்ற பெயர் மாற்றத்தை அடைந்தது அதில் எலோன் மஸ்க் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார் இந்த பேபால் நிறுவன பங்கை 2002 இல் ஈபே நிறுவனத்தால் 150 கோடிக்கு அதன் பங்குகள் வாங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திலிருந்து எலோன் மஸ்க் அவர்களுக்கு 16 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது அப்போதும் அவருக்கு புதன் புத்தி தான் நடைபெற்றது அதுவும் உச்சம் பெற்ற லக்னாதிபதியான செவ்வாய் திசையில்.
சின்ன வயதில் இருந்தே எலோன் மஸ்க் அவர்களுக்கு வானியல், ஏவுகலன்கள் (rockets), விண்கலம் (spacecraft), விண்வெளி பயண கலன்கள் அதில் மனிதர்களின் பயணங்கள் என அந்த துறையும் அந்த துறை சார்ந்த கதைகள், திரைபடங்கள் மீதும் திராத ஆவல் இருந்தது கனவு இருந்தது அதை தனது தொழில் வாழ்க்கையாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார் எலோன் மஸ்க் அதற்காக 2002 இல் தான் சம்பாதித்த பெரும் பொருளை முதலீடாக இந்த துறையில் விண்வெளி போக்குவரத்து நிறுவனமாக SpaceX என்ற நிறுவனத்தை நிறுவுகிறார் இந்த நிறுவனத்திற்காக ஆரம்ப காலத்தில் நிறைய நிதி நெருக்கடிகளை சந்தித்தார் இருந்தாலும் சம்பாதிப்பதற்க்கான சந்தர்ப்பங்களையும் சாத்தியங்களையும் கண்டுபிடிப்பது தான் ஒரு தொழில் முனைவரின் சிறப்பு.
எலோன் மஸ்க் விண்வெளி போக்குவரத்து தொழில் இருந்த அதிக செலவீனங்களை தனது SpaceX நிறுவனத்தின் மூலம் குறைக்க முயற்சித்தார் அதை போல தனது நீண்டகால குறிக்கோளான வணிக விண்வெளி பயணத்தை சாத்தியமாக்குவதை மற்ற நிறுவனங்களின் ஒப்பீட்டளவில் மலிவு விலையில் தரும் சேவையை தொடங்கினார்.
பூமியின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் தனியார் உருவாக்கிய திரவ-எரிபொருள் ஏவுகலன் (liquid-fuel rocket) என்ற பெருமை எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனத்திற்கு கிடைத்தது மேலும் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்த முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட விண்கலமும் (அதாவது spacecraft) SpaceX நிறுவனத்தை சார்ந்தது தான் இது போன்ற விஷயங்களை சாதிக்க அந்த நாட்டின் NASA நன்கு உதவியது நாசாவிடம் இருந்து வணிக ஒப்பந்தங்களை பெற்று அதில் சாதித்தார் இவரிடம் இருந்த தொலைநோக்கு பார்வை மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்கு இவர் கொடுத்த ஒத்துழைப்புகள் இவரின் ஆழமான லட்சியத்திலிருந்து உண்டாது. அடுத்த கட்டமாக இந்த நிறுவனம் செயற்கைக்கோள் அனுப்பி அதன் மூலமாக இணையத் தொடர்பு பாதையை உருவாக்க முயற்சித்து கொண்டிருக்கிறது
இவரின் அடுத்த பாய்சல் 2003 ஆம் ஆண்டில், டார்பென்னிங் மற்றும் மார்ட்டின் எபர்ஹார்ட் என்பவர்கள் இணைந்து உருவாக்கிய நிறுவனமான டெஸ்லா மோட்டார்ஸ் என்ற மின்சார கார்களை தயாரிக்கும் துவக்கநிலை நிறுவனத்தில் முதலீட்டாளராக எலோன் மஸ்க் 2004 ல் இணைந்தார் பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது முதலீட்டையும் மற்றும் அதிகாரத்தை உயர்த்தினார் இவர் இயல்பாக சிறப்பான யோசனைகளும் நோக்கங்களும் செயல்திறமையும் உடையவர் என்பதால் எலோன் மஸ்க்கின் பங்களிப்பு இந்த நிறுவனத்தில் அதிகரித்தது 2008 க்கு பிறகு இந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்பான தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் 20% பங்கு உரிமையாளர்
ஆக மாறினார் இந்த நிறுவனம் உலகில் முக்கியமான மின்சார கார்களை தயாரிக்கும் நிறுவனம் ஆகும் ஆண்டுக்கு விற்பனை வருவாயாக சுமார் 2400 கோடியை ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
சோலார் பேனல்கள் மற்றும் சூரிய கூரை ஓடுகளை உருவாக்கி விற்பனை செய்கிற சோலார்சிட்டி என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இது அமெரிக்காவில் சூரிய சக்தி அமைப்புகளை வழங்கும் பெரிய நிறுவனமாகும். எலோன் மஸ்க் கனவுத் திட்டமாக இருப்பது அதிவேக வளையப் போக்குவரத்து (Hyperloop) என்ற திட்டம் ஆகும் இது பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்காக விமானத்தை விட வேகத்தில் வெற்றிடமாக்கப்பட்ட வளைய குழாய் அமைப்பிற்குள் உராய்வுகள் அற்ற வாகனத்தை காற்றால் உந்தி தள்ளி நகர்த்தி செல்வது ஆகும் இது போன்று இவரின் பல மிக மிக புதிய தொழில்நுட்பங்களை தனது தொழில்ரீதியான முன் முயற்சியாக செய்வது தான் இவரை நிறைய இளைஞர்களுக்கு இவரை பிடிக்க்க காரணம் ஆகும் இப்படிபட்ட தொழில் முனைவர்கள் தமிழர்களில் இருந்து வர வேண்டும் என்பதே எனது நீண்ட கால உயிரிய நினைப்பு ஆகும்.
0 Response to "கோடீஸ்வர்களின் ஜாதகங்கள்- எலோன் மஸ்க் (Elon Musk) ஜாதகம் பற்றிய சிறப்பு Elon Musk Horoscope in Tamil"
கருத்துரையிடுக