ஜாதகத்தில் சந்திரன் + செவ்வாய் சேர்ந்தால் ஏற்படக்கூடிய பொதுப்பலன்கள்... ஜாதகத்தில் சந்திர செவ்வாய் சேர்க்கை பொதுப்பலன் - - Moon Mars Conjunction in Tamil - சந்திரமங்கல யோகம் விளக்கமும்...
ஆயுள் ஸ்தானம் என்று பொதுவாக கூறப்படும் இந்த ஸ்தானம் வேதகால ஜோதிடத்தில் நீண்ட ஆயுள், போரினால் ஏற்படும் வெற்றி தோல்வி, எதிரிகள், கோட்டைகள், ஆக்கிரமிப்பினால் கிடைக்கும் செல்வம், மறு பிறப்பு, அஞ்ஞான வாசம், மறைந்திருக்கும் கலைகள், பகைவர்களால் ஏற்படும் ஆபத்து, இறந்தவர்கள் மற்றும் பழைய விஷயங்கள் மூலம் கிடைக்கும் செல்வத்திற்கு என்பனவற்றிக்காக பார்க்கபட்ட ஸ்தானம். பிற்காலங்களில் இந்த ஸ்தானம் தவறி விழுதல், தீரா கடன், நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள், அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம், நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், செய்ய தகாத காரியங்களை செய்தல், அதனால் ஏற்படும் துயரம், கருத்து மோதல்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ளவும் பயன்படுகிறது. எட்டாம் வீடு கொண்டு அறியும் காரகத்துவங்கள் :- ஆயுள் ஸ்தானம் விபத்துக்கள் துரதிர்ஷ்டம் பூசல் மற்றவர்களின் பணம் உங்களிடம் சேருதல் அவமானம் தடைகள் தாமதம் மனவருத்தம் ஏமாற்றம் தோல்வி இழப்பு மற்றும் அடைப்பு திருட்டு தற்கொலை மூலம் மரணம் கொள்ளை. காப்பீடு ஓய்வூதியம் பணிக்கொடை அறுவை சிகிச்சை பரம்பரை உடைமை வழிவழிச் சொத்து மறு பிறப்பு நீண்ட நாள் நோய்கள் தீரா நோய்கள் துன்பம் முன்னோர் வழிவந்த பண்பு நிரந்தர வலி கூட்டாளிகள் பணம் கவலைகள் உடல்உறவு உடல்உறவில் உங்களின் நடத்தை, விருப்பம் பாலியல் பிரச்சினைகள் வரிகள் எதிரிகள் போராட்டம் ஆழமான கண்டுஅறியாத சிந்தனைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான வீடு
ஒரு சிலருக்கு சிறுவயதிலேயே கலை ஆற்றல் இயல்பாக மனதில் பதியும், கலைத்திறனும் இயல்பாக அவர்கள் மனதில் உதயம் ஆகும் அதற்கு ஜோதிடம் கூறும் முக்கிய விதி ஒன்றை இப்போது பார்போம்.
அசுரகுரு (சுக்கிரன்) கேந்திரம் திரிகோணம் ஏறி ஆட்சி, உச்சம், சுய சாரம், நட்புவீடு ஆகிய ஸ்தான பலம் பெற்று அவரை தேவகுரு (வியாழன்) திரிகோணம் ஏறி ஆட்சி, உச்சம், சுய சாரம் பெற்று பார்த்தால் பிறவிக் கலைஞன் ஜெனனமாவான் என்பது ஜோதிட விதி
அதாவது குரு பகவான் திரிகோணம் என்னும் 1 வீடு, 5 வீடு, 9 வீடு இதில் ஏதாவது ஒன்றில் அமர்ந்து ஆட்சி, உச்சம் அடைந்து பலமான சுக்கிரனை பார்க்கும் போது மேலே சொன்ன விதியின் முழுமையான பலனை அடைய முடியும் அந்த ஜாதகர் புகழ், செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு பலம் ஆகியவற்றை நிறைவாக அடைவார். அதுவே குரு பகவான் பலமற்று சுக்கிரனை பார்த்தால் நல்ல கலைஞனாக இருப்பார் அதனால் முன்னேற்றமோ, தன் கலைக்கு அங்கிகாரமோ கிடைப்பது குறைந்து போகும்.
இவ்வாராக அமைய பெற்றவர்கள் ஓவியம், வடிவமைப்பு, அழகு படுத்தல், புகைபட கலை, தொலைகாட்சித்துறை, கவிதை, காவியம் இயற்றுதல், விவாத அரங்கம், விளம்பரத்துறை, திரைபடத்துறை, இசை, பாட்டு இதுபோன்ற கலைகளில் மிளிர்வார்கள்
புகழ் பெற்ற கலைஞனாக மிளிர்வதற்கான விதிகளில் இது ஒரு விதிதான் இது போல் பலவுண்டு அவற்றை மெல்ல மெல்ல பார்போம்
முதல் வீடு _ சுய ஆளுமை, சுய அடையாளம், சுய தன்மை, ஆன்மா இரண்டாம் வீடு _ பொது குடும்ப உறவுகள், குடும்ப உறுப்பினர்கள் மூன்றாம் வீடு _ இளைய சகோதரம் நான்காம் வீடு _ தாய், வளர்ப்புத் தாய் ஐந்தாம் வீடு _ குழத்தைகள், தாய் மாமன், காதலி, தாய்வழி தாதா, பாட்டி ஆறாம் வீடு _ ஊழியர்கள், சேவகர்கள், பங்காளிகள், எதிரிகள் ஏழாம் வீடு _ மனைவி, துணை, காதலி எட்டாம் வீடு _ கடனாளிகள் அடமானம் வைப்பவர் ஒன்பதாம் வீடு _ தந்தை, பேரக்குழந்தைகள் பத்தாவது வீடு _ தலைமை நிர்வாக அதிகாரி, முதலாளி, நிறுவனத்தின் தலைவர், சரிநேர் அலுவலர் பதினோராம் வீடு _ மூத்த சகோதரம், இரண்டாம் மனைவி, பங்குதாரர்கள், நண்பர்கள் பன்னிரண்டாம் வீடு _ துரோகிகள் (இரகசிய எதிரிகள்), பாதகம் செய்யும் நபர்கள்
ஜாதகத்தில் ஏழாம் வீடு சொல்லும் உண்மை என்ன? - Horoscope 7th House in Tamil? களத்திர ஸ்தானம் என்று பொதுவாக கூறப்படும் இந்த ஸ்தானத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் அதிகம் குறிப்பாக இளவயதினர் தங்களின் திருமணத்திற்க்காகவும், பெரியவர்கள் தங்களின் பிள்ளைகளின் திருமணத்திற்க்காகவும் அந்தளவு முக்கியமான வாழ்க்கை துணையை பற்றி கூறும் ஸ்தானமாகும் மேலும் வாழ்க்கை துணையாக வருபவர்கள் எப்படிபட்டவர்கள், மேலும் ஒரு ஜாதகருக்கு திருமணம் நடக்கும் காலம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் போன்றவற்றையும் அறிந்து கொள்ள உதவும் ஸ்தானம்.
மேலும் கூட்டு வியாபாரம், வர்த்தகம், வணிக பங்காளி, வெளிநாட்டு நாடுகளில் பெறும் செல்வாக்கு மற்றும் புகழ், பாலியல் வாழ்க்கை, திருமண உறவுகள், மாரக ஸ்தானம் (maraka sthana) என்றும் கூறுவர் அதாவது மரணம் நிகழ்வதற்க்கான ஏற்பாடுகளை செய்யும் ஸ்தானம்.
என் ஒவ்வொரு முன்னேற்றதிற்கு பின்னாலும் என்
மனைவியிருக்கிறாள் என்று கணவன்மார்களும், என் ஒவ்வொரு முன்னேற்றதிற்கு
பின்னாலும் என் கணவன்யிருக்கிறார் என்று மனைவிமார்களும்
சொல்லிக்கொள்கிறார்களே அதற்க்கான சிறப்பை எல்லாம் காட்டும் ஸ்தானம் இதுவே ஏன்னென்றால் ஏழாம் வீடு 10 ஆம் வீட்டிற்கு 10 ஆம் வீடு ஆகும் அதனால் வாழ்க்கை துணையால் வரும் வேலைவாய்ப்பு, தொழில் வசதி, தொழில் உதவிகளை காட்டும் ஸ்தானமும் இதுவே. ஏழாம் வீடு கொண்டு அறியும் காரகத்துவங்கள் :- திருமண வாழ்க்கை மனைவி (துணைவி) பங்குதாரர்கள் மக்கள் தொடர்பு மற்றவர்கள் உங்களிடம் நடந்து கொள்ளும் முறை மாரக ஸ்தானம் உடன்படிக்கை வர்த்தக உறவுகள் வர்த்தகம் பார்வை இழப்பு மனைவியின் நிலை விவாகரத்து பாலியல் வாழ்க்கை நுண்கலைகள் கவின்கலைகள் பாலியல் பிரச்சினைகள் கூட்டு வியாபாரம் வாழ்க்கை துணையால் வரும் வேலைவாய்ப்பு வாழ்க்கை துணையால் வரும் தொழில் வசதி வாழ்க்கை துணையின் தொழில் உதவிகள்
ஜாதகத்தில் சந்திரன் லக்னத்தில் இருந்தால்... பொதுவாக வளர்பிறை சந்திரனாக இருந்தால் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 ம் கேந்திர ஸ்தானங்களான 7,10 நிறைய நன்மையான பலன்கள் தரும் அதுவே தேய்பிறை சந்திரனாக இருந்தால் 2, 3, 11 சரிசமமான பலன்கள் தரும், சுப சந்திரனாக இருந்து குரு பார்வை பெற்றால் திட மனபலமும், அனைவரையும் அரவணைத்து செல்லும் ஆற்றலும், புகழும், வியாபாரம் சிறப்பு பெறும், ஆனால் வளர்பிறையோ தேய்பிறையோ சந்திரனானவர் லக்னத்திற்கு 6,8,12 ஆம் விட்டில் இருந்தால் ஏதேனும் இழப்போ மன பிரச்சினைகளையோ கொடுக்க வாய்ப்பிருக்கிறது அந்த சந்திரனே சூரியனுக்கும் குருவுக்கும் 6,8,12 ஆம் விட்டில் இருந்தால் நிச்சியமாக உடல் மன பிரச்சினைகளை கொடுக்க வாய்ப்பிருக்கிறது. சந்திரன் தேய்பிறை சந்திரனாக இருந்து லக்ன சுப காரகத்துவம் பெற்றால் சுபத்தன்மை கூடிவிடும் அதுவே வளர்பிறை சந்திரனாக இருந்து லக்ன அசுப காரகத்துவம் பெற்றால் அசுபத்தன்மை கூடிவிடும் எனவே சந்திரன் நிற்கும் நிலையை அறிந்தே பலன்காண வேண்டும். இனி நாம் ஒவ்வொரு ஸ்தானங்களிலும் சந்திரன் இருப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்போம். முதலில் சந்திரனை பற்றிய ஒரு சிறுபார்வை -
சந்திரனுக்கு சாதகமான நிலைகள் - சந்திரனுக்கு மிகமிக சாதகமான இருப்பு - நட்சத்திரம் - ரோஹிணி பாகை - 45:00:00 முதல் 46:40:00 வரை மற்றும் ரோஹிணி - 41:40:00 முதல் 43:20:00 வரை நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், புதன். நட்பு வீடு : சிம்மம். ஆட்சி பெற்ற இடம் : கடகம். உச்சம் பெற்ற இடம் : ரிஷபம்.
சந்திரனுக்கு பாதகமான நிலைகள் - சந்திரனுக்கு மிகமிக பாதகமான இருப்பு - நட்சத்திரம் - அனுஷம் - பாகை - 223:20:00 முதல் 225:00:00 வரை மற்றும் கேட்டை - 231:40:00 முதல் 233:20:00 வரை பகை வீடு : தன் நிலைக்குயேற்ப பகை, சம வீடுகள் அமையும். பகைப் பெற்ற கோள்கள் : ராகு, கேது. நீசம் பெற்ற இடம் : விருச்சிகம் சமனான நிலை கொண்ட கோள்கள் : செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன். ஜாதகத்தில் சந்திரன் லக்னம் என்ற முதல் வீட்டில் இருந்தால் ஏற்படக்கூடிய பொதுப்பலன்கள்
மேலே எழுதபட்டவை பொதுவான பலன்கள் என்பதால் ஜாதகத்தில் சந்திரனின் காரகத்தையும் மேலும் சூட்சமமான சந்திரனின் பலத்தை அறிந்து பின் அதனால் உண்டாகும் நிறைகள் குறைகள் மற்றும் அது நமக்கு நடக்கும் காலம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆறாம் வீட்டை ரண ருண ரோக ஸ்தானம் என்று பொதுவாக கூறினாலும் இது ஒரு ஜாதகருக்கு ஏற்படும் வாழ்க்கை தடைகள், தாமதங்கள், ஜாதகருக்கு ஏற்படும் வியாதி - அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்கள் என பல அறியலாம்.
மேலும் ஒரு ஜாதகருக்கு திருமணத்திற்கு ஏற்படும் தடைகள், விவாகரத்து போன்ற விஷயங்களை இந்த ஸ்தானத்தைக் கொண்டு காணலாம். எதிரிகள், தொழில் போட்டியாளர்கள், கடன் பாதிப்பு, பணமுடக்கம், சிறு கடன், ஊழியர்கள், சேவகர்கள், பங்காளிகள் போன்ற விஷயங்களை இந்த ஸ்தானத்தைக் கொண்டு காணலாம்.
மேலும் ஆறாம் வீட்டின் காரகத்துவங்கள் :-
உடல்நலம்
நோய்கள்
அடிக்கடி வரும் நோய்கள்
எதிரிகள்
வம்பு வழக்கு
ஆழ்ந்த வேதனை
கடன்கள்
அடமானம்
வாடகையாளர்கள்
வேலையாட்கள்
சேவையாட்கள்
சேவை செய்தல்
சேவை பணி
கஞ்சத்தனம்
சவால்கள்
போட்டிகள்
மாமா உறவுகள்
கால்நடைகள்
நேரடியான எதிரிகள்
பிரச்சினைகள்
ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து
சந்தேகம்
வலிகள் & காயங்கள்
இறப்பை பற்றிய சந்தேகங்கள்
வளர்ப்புத்தாய்
தொழிலாளர்கள்
வேலை பயிற்சி
தொழிற்சங்கங்கள்
தொழிலாளர் இடங்கள்
பணி பயிற்சி இடங்கள்
சோம்பேறித்தனம்
சிறைபடுதல்
பாவமான காரியங்களை செய்தல்
தாயின் உடன்பிறப்புகள்
தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள்
கால்நடை
அடி வயிறு
குடற்பகுதிகள்
மண்ணீரல்
வயிறு நரம்பு மண்டலம்
குடல்கள்
செரிமானம் மண்டலம்
கீழ் முதுகு
கர்ப்பபை கோளாறுகள்
ஜாதகத்தில் சூரியன் லக்னத்தில் இருந்தால்... பொதுவாக சூரியன் உபஜெய ஸ்தானங்களான3,6,10,11 இருந்தால் நிறைய நல்ல பலன்கள் தரும், இருந்தாலும் சூரியன் ஒவ்வொரு ஸ்தானங்களுக்கு சில நல்ல பலன்களையும் சில தீய பலன்களையும் தான் நிற்கும் நிலைக்கு ஏற்ப தருவார், எனவே நாம் ஒவ்வொரு ஸ்தானங்களிலும் சூரியன் இருப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்போம்.
முதலில் சூரியனை பற்றிய ஒரு சிறுபார்வை - சூரியனுக்கு சாதகமான நிலைகள் - சூரியனுக்கு மிகமிக சாதகமான இருப்பு - நட்சத்திரம் - கிருத்திகை - பாகை - 26:40:00 28:20:00 மற்றும் உத்திரம் - 146:40:00 148:20:00 நட்புப் பெற்ற கோள்கள் : சந்திரன், வியாழன், செவ்வாய். நட்பு வீடு : விருச்சிகம், தனுசு, கடகம், மீனம். ஆட்சி பெற்ற இடம் : சிம்மம். உச்சம் பெற்ற இடம் : மேடம். சூரியனுக்கு பாதகமான நிலைகள் - சூரியனுக்கு மிகமிக பாதகமான இருப்பு - நட்சத்திரம்- சுவாதி - பாகை - 190:00:00 191:40:00 மற்றும் சுவாதி - 195:00:00 196:40:00 பகை வீடு : ரிஷபம், மகரம், கும்பம். பகைப் பெற்ற கோள்கள் : சுக்கிரன், சனி, ராகு, கேது. நீசம் பெற்ற இடம் : துலாம். சமனான நிலை கொண்ட கோள் : புதன்.
மேலே சொல்லப்பட்டவை பொதுவான பலன்கள் என்பதால் ஜாதகத்தில் சூரியனின் காரகத்தையும் மேலும் சூட்சமமான சூரியனின் பலத்தை அறிந்து பின் அதனால் உண்டாகும் நிறைகள் குறைகள் மற்றும் அது நமக்கு நடக்கும் காலம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
ஐந்தாம் வீட்டை பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், நேச ஸ்தானம் என்று பொதுவாக கூறினாலும் இது ஒரு ஜாதகரின் வாழ்க்கையின் மிக முக்கியமான ஸ்தானமாகும் இது திரிகோண சுத்த சுபஸ்தானம் ஆகும் ஏனென்றால் லக்னம் கேந்திராதிபத்திய தோஷத்தாலோ மற்றும் 9 ஆம் விட்டின் அதிபதி பாதகாதிபத்தியம் போன்ற குறைகளால் பாதிக்க படலாம் ஆனால் ஐந்தாம் வீடு அது போன்ற நிலைகளை அடைவதில்லை எனவே தான் அது திரிகோண சுத்த சுபஸ்தானம் ஆகும். இதுவே ஒருவர் முந்திய பிறவிகளில் செய்த புண்ணியங்களின் தொகுப்பு ஸ்தானம் ஆகும் இந்த ஸ்தானம் நன்றாக இருந்தால் தான் இந்த பிறவியில் தெய்வ அருளும், செல்வ செல்வாக்கும், துன்பங்கள் ஜாதகரை நெருங்காத நிலையையும் அடைய முடியும் மற்ற ஸ்தான பலமின்மையால் துன்பங்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து தெய்வமே அவரை காப்பாற்றும் படியான புண்ணியங் பெற்றிருக்கும் ஸ்தானமாகும், அனுபவிக்கும் இன்பங்களும் அதிகமாக இருக்கும் எனவே ராசி சக்கரத்தில் ஐந்தாம் வீட்டின் பலத்தை அறிய அதன் அதிபதியின் பலத்தையும், குரு, வளர்பிறை சந்திரன், சுப பலம் பெற்ற புதனின் பலத்தையும், ஐந்தாம் அதிபதி நின்ற ராசி, சாரத்தையும் பார்க்க வேண்டும். மேலும் 5 ஆம் விட்டை லக்னமாக பாவித்து பார்க்க பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய பலம் தெரியும்.
"எமக்குத் தொழில் கவிதை" என்பார் பாரதி, எமக்குத் தொழில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் மர்மமான விதியின் பாதையில் அவர்கள் பயணிக்க ஒரு சிறு விளக்காய் இருப்பது