ஜாதகத்தில் ஐந்தாம் வீடு சொல்லும் உண்மை என்ன?
ஜாதகத்தில் ஐந்தாம் வீடு சொல்லும் உண்மை என்ன?
ஐந்தாம் வீட்டின் காரகத்துவங்கள்: -
ஐந்தாம் வீட்டை பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், நேச ஸ்தானம் என்று பொதுவாக கூறினாலும் இது ஒரு ஜாதகரின் வாழ்க்கையின் மிக முக்கியமான ஸ்தானமாகும் இது திரிகோண சுத்த சுபஸ்தானம் ஆகும் ஏனென்றால் லக்னம் கேந்திராதிபத்திய தோஷத்தாலோ மற்றும் 9 ஆம் விட்டின் அதிபதி பாதகாதிபத்தியம் போன்ற குறைகளால் பாதிக்க படலாம் ஆனால் ஐந்தாம் வீடு அது போன்ற நிலைகளை அடைவதில்லை எனவே தான் அது திரிகோண சுத்த சுபஸ்தானம் ஆகும். இதுவே ஒருவர் முந்திய பிறவிகளில் செய்த புண்ணியங்களின் தொகுப்பு ஸ்தானம் ஆகும் இந்த ஸ்தானம் நன்றாக இருந்தால் தான் இந்த பிறவியில் தெய்வ அருளும், செல்வ செல்வாக்கும், துன்பங்கள் ஜாதகரை நெருங்காத நிலையையும் அடைய முடியும் மற்ற ஸ்தான பலமின்மையால் துன்பங்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து தெய்வமே அவரை காப்பாற்றும் படியான புண்ணியங் பெற்றிருக்கும் ஸ்தானமாகும், அனுபவிக்கும் இன்பங்களும் அதிகமாக இருக்கும் எனவே ராசி சக்கரத்தில் ஐந்தாம் வீட்டின் பலத்தை அறிய அதன் அதிபதியின் பலத்தையும், குரு, வளர்பிறை சந்திரன், சுப பலம் பெற்ற புதனின் பலத்தையும், ஐந்தாம் அதிபதி நின்ற ராசி, சாரத்தையும் பார்க்க வேண்டும். மேலும் 5 ஆம் விட்டை லக்னமாக பாவித்து பார்க்க பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய பலம் தெரியும்.
ஐந்தாம் வீட்டின் காரகத்துவங்கள்: -
புத்திர ஸ்தானம்
பூர்வ புண்ணய ஸ்தானம்
காதல் விவகாரம்
பிறரிடம் செலுத்தும் அன்பு
தனக்கு வரும் அன்பு
ஊக வணிகம்
படைப்புத் திறன்
கவிதை
காதல் காம உணர்ச்சிகள்
சூதாட்டம்
சுற்றுலா
ஓவியம்
விளையாட்டு மைதானம்
பூங்காக்கள்
விளையாட்டு
களியாட்டம்
வேடிக்கை
பொழுதுபோக்கு
நாட்டங்கள்
கலை திறமை
நுண்ணறிவு
மகத்தான செல்வம்
உயர்உயர் கல்வி
ஆராய்ச்சி படிப்பு
புதிய கண்டுபிடிப்பு
ஆன்மீகம்
மந்திர உச்சாடணம்
வேதங்களில் ஈடுபாடு
ஆன்மீக சாஸ்திரம் பயிற்சி
ஆன்மீக அருள்
இறையருள்
அகங்கார அழிப்பு
சம்பிரதாயங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள்
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ஜாதகத்தில் ஐந்தாம் வீடு சொல்லும் உண்மை என்ன?"
கருத்துரையிடுக