பிறவிக் கலைஞன் ஜெனனமாகும் ஒரு ஜோதிட விதி

பிறவிக் கலைஞன் ஜெனனமாகும் ஒரு ஜோதிட விதி


ஒரு சிலருக்கு சிறுவயதிலேயே கலை ஆற்றல் இயல்பாக மனதில் பதியும், கலைத்திறனும் இயல்பாக அவர்கள் மனதில் உதயம் ஆகும் அதற்கு ஜோதிடம் கூறும் முக்கிய விதி ஒன்றை இப்போது பார்போம்.

அசுரகுரு (சுக்கிரன்) கேந்திரம்  திரிகோணம் ஏறி ஆட்சி, உச்சம், சுய சாரம், நட்புவீடு ஆகிய ஸ்தான பலம் பெற்று அவரை தேவகுரு (வியாழன்) திரிகோணம் ஏறி ஆட்சி, உச்சம், சுய சாரம் பெற்று பார்த்தால் பிறவிக் கலைஞன் ஜெனனமாவான் என்பது ஜோதிட விதி

அதாவது குரு பகவான் திரிகோணம் என்னும் 1 வீடு, 5
வீடு, 9 வீடு இதில் ஏதாவது ஒன்றில் அமர்ந்து ஆட்சி, உச்சம் அடைந்து பலமான சுக்கிரனை பார்க்கும் போது மேலே சொன்ன விதியின் முழுமையான பலனை அடைய முடியும் அந்த ஜாதகர் புகழ், செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு பலம் ஆகியவற்றை நிறைவாக அடைவார். அதுவே குரு பகவான் பலமற்று சுக்கிரனை பார்த்தால் நல்ல கலைஞனாக இருப்பார் அதனால் முன்னேற்றமோ, தன் கலைக்கு அங்கிகாரமோ கிடைப்பது குறைந்து போகும். 

இவ்வாராக அமைய பெற்றவர்கள் ஓவியம், வடிவமைப்பு, அழகு படுத்தல், புகைபட கலை, தொலைகாட்சித்துறை, கவிதை, காவியம் இயற்றுதல், விவாத அரங்கம், விளம்பரத்துறை, திரைபடத்துறை, இசை, பாட்டு இதுபோன்ற கலைகளில் மிளிர்வார்கள்

புகழ் பெற்ற கலைஞனாக
மிளிர்வதற்கான விதிகளில் இது ஒரு விதிதான் இது போல் பலவுண்டு அவற்றை மெல்ல மெல்ல பார்போம்




0 Response to "பிறவிக் கலைஞன் ஜெனனமாகும் ஒரு ஜோதிட விதி"

கருத்துரையிடுக

Powered by Blogger