சிம்ம இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

சிம்ம இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டு வருகிறது அதில் இந்த முறை -

இந்த சிம்ம இராசி காடுகளுக்கு காரகத்துவமும்
இது பகலில் வலிமையாகி கிழக்கு திசையை சார்ந்த இராசி
இது நான்கு கால்கள் கொண்ட இராசி
இது பருமனான மற்றும் பிரகாசமான தேகத்தை சுட்டிகாட்டும் இராசி
இது சாத்வீக குண இராசி மற்றும் இராஜாங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தும் இராசி
இந்த இராசி தனது தலையிலிருந்து உயரும் இராசி
இது சூரியனை ஆட்சியாளராக கொண்ட இராசி

0 Response to "சிம்ம இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…"

கருத்துரையிடுக

Powered by Blogger