காதல் ஜாதகம் பகுதி 6 - காதலில் இருவருக்கும் இடையே உடலீர்ப்பு உண்டாக்கும் சில விதிகள்…
காதல் ஜாதகம் - காதலில் இருவருக்கும் இடையே உடலீர்ப்பு
உண்டாக்கும் சில விதிகள் பகுதி 6…
ஆண்
பெண்ணுக்கு இடையே ஏற்படும் காதலில் உடலீர்ப்பு (கலவி, காமம்) உண்டாக்கும் சில
விதிகள் இவை அதாவது இது அடிப்படையாக ஆண் பெண்ணுக்கு இடையே உண்டாகும் ஈர்ப்புக்கும்
எடுத்து கொள்ளலாம் இருந்தாலும் நம் நாட்டில் காதல் திருமணத்தை விட பெற்றோரால்
நிச்சியிக்க படும் திருமணமே உயர்வாக கருதப்படுவதால் காதலில் இருக்கும் உடலீர்ப்பு
பற்றிய ஆய்வை நம்மை விட மேற்கத்திய ஜோதிடம் சற்று அதிகமாக ஆர்வம் காட்டும் இப்போது
நான் குறிப்பிடுவதும் ஒரு மேற்கத்திய ஜோதிட நூலில் படித்தது தான் அதில்
சுட்டுகாட்ட பட்டுள்ள சிலவற்றை சற்று ஒழுங்குபடுத்தி இங்கே கொடுத்துள்ளேன் -
காதலர் ஒருவருடைய ஜாதகத்தில் இராசி சக்கரத்தில் சுக்கிரன்
இருக்கும் இராசியும் தனது துணையாக அவர் நினைக்கும் காதலரின் ஜாதகத்தில் அவரது
இராசி சக்கரத்தில் செவ்வாய் இருக்கும் இராசியும் ஒன்றாகவே இருக்குமானால்
இவர்களுக்கிடையே உணர்ச்சிவசமான உடலீர்ப்பு உண்டாக்கும் இவர்களுக்கிடையே எளிதில் செல்ல கோபம் அடைந்தாலும் அல்லது எதிர்பாரா மனப் பாங்குகளை அப்போதைக்கு அவர்களுக்கிடையே கொண்டிருந்தாலும் சிறிது
தூண்டலிலேயே தனது கோபம் மற்றும் மனதை மாற்றி உடல் உணர்வு ஈர்ப்பில் கலந்து
விடுவார்களாம்.
காதலர் ஒருவருடைய ஜாதகத்தில் இராசி சக்கரத்தில் சுக்கிரன்
இருக்கும் இராசியும் தனது துணையாக அவர் நினைக்கும் காதலரின் ஜாதகத்தில் அவரது
இராசி சக்கரத்தில் லக்னம் நின்ற இராசியும் ஒன்றாகவே இருக்குமானால் இவர்கள் புதிய கற்பனா உணர்ச்சி மற்றும் உடலீர்ப்பு செயல்பாடுகள் காட்டி ஒருவருக்கொருவர் மகிழ்வளிக்கும் செயலில் முனைப்பு காட்டகூடியவர்களாக இருப்பார்கள்.
காதலர் ஒருவருடைய ஜாதகத்தில் இராசி சக்கரத்தில் சுக்கிரன்
இருக்கும் இராசியும் தனது துணையாக அவர் நினைக்கும் காதலரின் ஜாதகத்தில் அவரது
இராசி சக்கரத்தில் சந்திரன் அல்லது லக்னம் (சூரியன்) நின்ற இராசியும் ஒன்றாகவே இருக்குமானால் இவர்கள் உடலீர்ப்பு செயல்பாடுகள்
மட்டுமில்லாமல் பரஸ்பர நலன்களையும் குறித்தும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள்.
காதலர் ஒருவருடைய ஜாதகத்தில் இராசி சக்கரத்தில் செவ்வாய் இருக்கும்
இராசியும் தனது துணையாக அவர் நினைக்கும் காதலரின் ஜாதகத்தில் அவரது இராசி
சக்கரத்தில் சந்திரன் நின்ற இராசியும் ஒன்றாகவே இருக்குமானால்
இவர்கள் உடலீர்ப்பு செயல்பாடுகளில் அளவுக்கு மீறி ஆர்வம் காட்டுவார்கள் அதாவது
அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துகள் உண்டு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "காதல் ஜாதகம் பகுதி 6 - காதலில் இருவருக்கும் இடையே உடலீர்ப்பு உண்டாக்கும் சில விதிகள்…"
கருத்துரையிடுக