ஜோதிடமும் மருத்துவமும் - எனது இரத்தத்தின் இரத்தங்களே...

ஜோதிட மருத்துவம் - எனது இரத்தத்தின் இரத்தங்களே...
ஜோதிடத்திற்கு மருத்துவத்திற்கு எப்போதும் பந்தம் உண்டு ஆம் உடம்பின் கர்மாவை காட்டும் ஜோதிடமும் உடம்பின் நலத்தை காட்டும் மருத்துவமும் ஒன்றுக்குள் ஒன்று உதவி நிற்க கூடிய கலைகள் ஆகும். அலோபதி மருத்துவமுறை நம் நாட்டில் பிறந்ததில்லை அதனால் அதன் மருந்துகள் உடன் ஜோதிடத்திற்கு நேரடி பந்தம் குறைவு ஆனால் ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவம் போன்ற மருத்துவ துறைகளுக்கும் ஜோதிடத்திற்கு நேரடி பந்தம் உண்டு ஆம் அதாவது மூலிகைகளை பறித்து எடுப்பதில் இருந்து அதை உலர்த்த, பாகம் செய்ய, ஊற வைக்க, சேர்க்க என பலவற்றிக்கு இந்ந மருத்துவ முறையை கண்டறிந்த ரிஷிகளும் மற்றும் சித்தர்களும் ஜோதிடத்தின் துணையை கொண்டு செய்து இருக்கிறார்கள்

அமாவாசையில் எந்த மூலிகைகளை பறித்தல் முதல் பதம் செய்வது வரை செய்ய வேண்டும், பௌர்ணமியில் எந்த மூலிகைகளை பறித்தல் முதல் பதம் செய்வது வரை செய்ய வேண்டும், எத்தனை காலத்திற்கு ஊற வைக்க வேண்டும். சூரிய சந்திர ஒளியை எப்படி பயன்படுத்துவது, எந்த நட்சத்திரத்தில் மருந்தை தர வேண்டும் என்பது உள்ளபட பலவிஷயங்களில் ஜோதிடத்தை துணையாக கொண்டுள்ளார்கள் அதை பின்னர் எனக்கு தெரிந்த அளவுக்கு விரிவாக வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.

இப்போது பார்க்க இருப்பது ரத்தம், குருதி என்று உடலில் ஒடும் ஆதார நிதியை பற்றி அதாவது குழந்தையை கொஞ்சும் பெற்றோர்கள் எனது இரத்தத்தின் இரத்தம் என்று கொஞ்சுவார்கள் அதே போல அரசியலிலும் எனது இரத்தத்தின் இரத்தங்களே என்று அழைப்பார்கள் நமது உடலுக்கு ஆதார நிதியாகவும் ஆற்றலுக்கு மூலமான ஆக்சிஜனை ஏற்றி ஓடும் நதியாகவும் இருப்பது இந்த ரத்தம், குருதி அதன் பலம் பலவீனத்தை பற்றி பொதுவாக பார்ப்போம்.

ரத்தம், குருதி அதற்கு அடிப்படை கிரகமாக இருப்பது செவ்வாய் பகவான் அதில் இருக்கும் நீர் தன்மைக்கு சந்திரன் மற்றும் வெப்பத்தன்மைக்கு சூரியனும், வெள்ளை அணுக்களுக்கு குரு பகவானும் இப்படி ஆதார அதிகாரிகள் வரிசை படுத்தபடும், இருந்தாலும் ஆதார அடிப்படை கிரகமாக இருப்பது செவ்வாய் பகவான் தான் எனவே

தனித்து செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சுபகிரகங்களின் பார்வை பெற அந்த நபரின் ரத்தம் தேவையான தாது வளத்தால் வலுவானதாக இருக்கும்.

திரிகோண ஸ்தானங்களில் சுபகிரகங்களுடன் சேர்ந்து நட்பு இராசியில் இருக்க பெற்றால் அந்த நபரின் ரத்தம் அடிப்படையான தாது வளத்தால் வலுவானதாக இருக்கும்.

லக்னாதிபதியுடன் செவ்வாய் சேர்ந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்க பெற்றால் அந்த நபரின் ரத்தம் எளிதில் புத்துணர்ச்சி பெறதக்கதாக வலுவானதாக இருக்கும்.

குரு ஒருவருக்கு சுப கிரகமாக இருந்து அந்த கிரகத்துடன் செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்திருக்க அல்லது 5,9ஆம் பார்வையாக பார்க்க அது நட்பு இராசிகளாக இருக்க அந்த நபருக்கு இரத்ததில் நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகுந்து இருக்க வாய்ப்பு உண்டு.

இந்த செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் சர்ப்ப கிரகமான இராகுவுடன் சேர்ந்திருக்க அல்லது இராகுவின் சார நட்சத்திரங்களில் செவ்வாய் இருக்க அந்த நபரின் இரத்தத்தை மாசுபடுத்தும் வகைகளில் இராகுவால் தோஷம் உண்டாக வாய்ப்பு உண்டு.

இந்த செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் சர்ப்ப கிரகமான கேதுவுடன் சேர்ந்திருக்க அல்லது கேதுவின் சார நட்சத்திரங்களில் செவ்வாய் இருக்க அந்த நபரின் இரத்த ஓட்டத்தில் குறைவு அல்லது அசாதாரணமான தன்மை போன்ற வகைகளில் கேதுவால் தோஷம் உண்டாக வாய்ப்பு உண்டு.

சனி ஒருவருக்கு அசுப கிரகமாக இருந்து அந்த கிரகத்துடன் செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்திருக்க அல்லது பார்க்க அந்த நபரின் இரத்தத்தை மாசுபடுத்தும் அல்லது தளர்ச்சி அடைய செய்யும் அசுத்த நீர் சேர்மங்கள் கலத்தல் போன்ற வகைகளில் சனியால் தோஷம் உண்டாக வாய்ப்பு உண்டு.

குரு ஒருவருக்கு அசுப கிரகமாக இருந்து அந்த கிரகத்துடன் செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்திருக்க அல்லது 7ஆம் பார்வையாக பார்க்க அந்த நபருக்கு இரத்ததில் உயர் அழுத்தம் அடைய வாய்ப்பு உண்டு.

இந்த செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் வெப்ப கிரகமான சூரியனுடன் சேர்ந்திருக்க அல்லது சூரியனால் பார்க்க பட்டு செவ்வாய் இருக்க அந்த நபரின் இரத்த வெப்ப தொடர்புள்ள நோய்கள் கொப்பளங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "ஜோதிடமும் மருத்துவமும் - எனது இரத்தத்தின் இரத்தங்களே..."

கருத்துரையிடுக

Powered by Blogger