சப்த கிரகங்களும் அது காட்டும் பருவ காலங்களும்...

சப்த கிரகங்களும் அது காட்டும் பருவ காலங்களும்...


ஜோதிட நூல்களில் காட்டப்படும் பருவ காலங்கள் பற்றி கிரக வரையறை இது
 
கோள்கள்
காலங்கள்
சூரியன்
கோடை காலம்
சந்திரன்
மழைக்காலம்
செவ்வாய்
கோடை காலம்
குரு
பனிக்காலம்
சனி
குளிர்காலம்
புதன்
இலையுதிர் காலம்
சுக்கிரன்
வசந்த காலம்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கந்தர் அனுபூதி பகுதி 10 - கந்தரனுபூதி பாடல் 16 முதல் 17 வரை விளக்கம்...


கந்தரநுபூதி பாடல் 16 முதல் 17 வரை விளக்கம்...


கந்தர் அனுபூதியின் பாடல் 16. பேராசை எனும்.., 17. யாம் ஓதிய..., ஆகிய இரண்டு பாடல்களின் விளக்கம் கொடுக்கபட்டுள்ளது. கந்தரனுபூதி செய்யுள் 16 முதல் 17 ன் பொருள் விளக்கம்.

பாடல் 16

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.

பாடல் 17

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.



குழந்தை செல்வங்களை தாய் தந்தையர் வளர்க்கும் முறை…


கன்னி இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

கன்னி இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டு வருகிறது அதில் இந்த முறை -

இந்த கன்னி இராசி மலைஸ்தல காரகத்துவமும்
இது பகலில் வலிமையாகி மத்திம தேக இராசி
இது இரண்டு கால் கொண்ட இராசி தெற்கு திசையை சார்ந்த இராசி
இது தானியங்கள் மற்றும் நெருப்பை கைகொண்டிருக்கும் இராசி
இது வணிக குண இராசி மற்றும் பல வண்ண வேறுபாடுகள் கொண்ட இராசி
இந்த இராசி தனது தலையிலிருந்து உயரும் இராசி
இது புதனை ஆட்சியாளராக கொண்ட இராசி

ஜோதிடமும் மருத்துவமும் - எனது இரத்தத்தின் இரத்தங்களே...

ஜோதிட மருத்துவம் - எனது இரத்தத்தின் இரத்தங்களே...
ஜோதிடத்திற்கு மருத்துவத்திற்கு எப்போதும் பந்தம் உண்டு ஆம் உடம்பின் கர்மாவை காட்டும் ஜோதிடமும் உடம்பின் நலத்தை காட்டும் மருத்துவமும் ஒன்றுக்குள் ஒன்று உதவி நிற்க கூடிய கலைகள் ஆகும். அலோபதி மருத்துவமுறை நம் நாட்டில் பிறந்ததில்லை அதனால் அதன் மருந்துகள் உடன் ஜோதிடத்திற்கு நேரடி பந்தம் குறைவு ஆனால் ஆயுர்வேதம் மற்றும் சித்தமருத்துவம் போன்ற மருத்துவ துறைகளுக்கும் ஜோதிடத்திற்கு நேரடி பந்தம் உண்டு ஆம் அதாவது மூலிகைகளை பறித்து எடுப்பதில் இருந்து அதை உலர்த்த, பாகம் செய்ய, ஊற வைக்க, சேர்க்க என பலவற்றிக்கு இந்ந மருத்துவ முறையை கண்டறிந்த ரிஷிகளும் மற்றும் சித்தர்களும் ஜோதிடத்தின் துணையை கொண்டு செய்து இருக்கிறார்கள்

அமாவாசையில் எந்த மூலிகைகளை பறித்தல் முதல் பதம் செய்வது வரை செய்ய வேண்டும், பௌர்ணமியில் எந்த மூலிகைகளை பறித்தல் முதல் பதம் செய்வது வரை செய்ய வேண்டும், எத்தனை காலத்திற்கு ஊற வைக்க வேண்டும். சூரிய சந்திர ஒளியை எப்படி பயன்படுத்துவது, எந்த நட்சத்திரத்தில் மருந்தை தர வேண்டும் என்பது உள்ளபட பலவிஷயங்களில் ஜோதிடத்தை துணையாக கொண்டுள்ளார்கள் அதை பின்னர் எனக்கு தெரிந்த அளவுக்கு விரிவாக வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.

இப்போது பார்க்க இருப்பது ரத்தம், குருதி என்று உடலில் ஒடும் ஆதார நிதியை பற்றி அதாவது குழந்தையை கொஞ்சும் பெற்றோர்கள் எனது இரத்தத்தின் இரத்தம் என்று கொஞ்சுவார்கள் அதே போல அரசியலிலும் எனது இரத்தத்தின் இரத்தங்களே என்று அழைப்பார்கள் நமது உடலுக்கு ஆதார நிதியாகவும் ஆற்றலுக்கு மூலமான ஆக்சிஜனை ஏற்றி ஓடும் நதியாகவும் இருப்பது இந்த ரத்தம், குருதி அதன் பலம் பலவீனத்தை பற்றி பொதுவாக பார்ப்போம்.

ரத்தம், குருதி அதற்கு அடிப்படை கிரகமாக இருப்பது செவ்வாய் பகவான் அதில் இருக்கும் நீர் தன்மைக்கு சந்திரன் மற்றும் வெப்பத்தன்மைக்கு சூரியனும், வெள்ளை அணுக்களுக்கு குரு பகவானும் இப்படி ஆதார அதிகாரிகள் வரிசை படுத்தபடும், இருந்தாலும் ஆதார அடிப்படை கிரகமாக இருப்பது செவ்வாய் பகவான் தான் எனவே

தனித்து செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சுபகிரகங்களின் பார்வை பெற அந்த நபரின் ரத்தம் தேவையான தாது வளத்தால் வலுவானதாக இருக்கும்.

திரிகோண ஸ்தானங்களில் சுபகிரகங்களுடன் சேர்ந்து நட்பு இராசியில் இருக்க பெற்றால் அந்த நபரின் ரத்தம் அடிப்படையான தாது வளத்தால் வலுவானதாக இருக்கும்.

லக்னாதிபதியுடன் செவ்வாய் சேர்ந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்க பெற்றால் அந்த நபரின் ரத்தம் எளிதில் புத்துணர்ச்சி பெறதக்கதாக வலுவானதாக இருக்கும்.

குரு ஒருவருக்கு சுப கிரகமாக இருந்து அந்த கிரகத்துடன் செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்திருக்க அல்லது 5,9ஆம் பார்வையாக பார்க்க அது நட்பு இராசிகளாக இருக்க அந்த நபருக்கு இரத்ததில் நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகுந்து இருக்க வாய்ப்பு உண்டு.

இந்த செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் சர்ப்ப கிரகமான இராகுவுடன் சேர்ந்திருக்க அல்லது இராகுவின் சார நட்சத்திரங்களில் செவ்வாய் இருக்க அந்த நபரின் இரத்தத்தை மாசுபடுத்தும் வகைகளில் இராகுவால் தோஷம் உண்டாக வாய்ப்பு உண்டு.

இந்த செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் சர்ப்ப கிரகமான கேதுவுடன் சேர்ந்திருக்க அல்லது கேதுவின் சார நட்சத்திரங்களில் செவ்வாய் இருக்க அந்த நபரின் இரத்த ஓட்டத்தில் குறைவு அல்லது அசாதாரணமான தன்மை போன்ற வகைகளில் கேதுவால் தோஷம் உண்டாக வாய்ப்பு உண்டு.

சனி ஒருவருக்கு அசுப கிரகமாக இருந்து அந்த கிரகத்துடன் செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்திருக்க அல்லது பார்க்க அந்த நபரின் இரத்தத்தை மாசுபடுத்தும் அல்லது தளர்ச்சி அடைய செய்யும் அசுத்த நீர் சேர்மங்கள் கலத்தல் போன்ற வகைகளில் சனியால் தோஷம் உண்டாக வாய்ப்பு உண்டு.

குரு ஒருவருக்கு அசுப கிரகமாக இருந்து அந்த கிரகத்துடன் செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்திருக்க அல்லது 7ஆம் பார்வையாக பார்க்க அந்த நபருக்கு இரத்ததில் உயர் அழுத்தம் அடைய வாய்ப்பு உண்டு.

இந்த செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் வெப்ப கிரகமான சூரியனுடன் சேர்ந்திருக்க அல்லது சூரியனால் பார்க்க பட்டு செவ்வாய் இருக்க அந்த நபரின் இரத்த வெப்ப தொடர்புள்ள நோய்கள் கொப்பளங்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

ஜோதிட காணொளியில் (Video) மொழி சார்ந்த குறிப்பறிதல்



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் ஹஸ்தம் - திருமண நட்சத்திர பொருத்தம்…

பெண் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாதம் - ஆண் ஹஸ்தம் - திருமண நட்சத்திர பொருத்தம்

முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் அது நட்சத்திரப் பொருத்தம் என்பது திருமணப் பொருத்தத்தில் ஒரு நுழைவாயில் (entry gate) மட்டுமே அதற்கு மேல் தோஷப் பொருத்தம்கிரக பொருத்தம்திசா ரீதியான பொருத்தம் என பலகட்டங்களை திருமணப் பொருத்ததில் தாண்ட வேண்டும்நட்சத்திர ரீதியான பொருத்தத்தில் சொல்லப்படும் உத்தம பொருத்தம்மத்திம பொருத்தம்அஸங்கம் (சேர்க்கை இல்லை) ஆகியவற்றின் பொருத்த பலம் தனிபட்ட ஜாதகத்தின் பலம் மற்றும் பலவீனத்தை ஒட்டி மாறுபடும் தன்மை கொண்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.

பொருத்த தரம் : - 1) அதி உத்தமம், 2) உத்தமம், 3) மத்திமம், 4) அஸங்கம்

1. தினப்பொருத்தம் -
தினப் பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் அன்றாட வாழ்நாட்களில் நிகழும் சம்பவங்களை அவர்கள் எதிர்கொள்ளும் தன்மை காட்டுவதாகும். இதில் பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது 2,4,6,8,9,11,13, 15,18,20,24,26 ஆகிய நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு. 27 வதாக வரும் நட்சத்திரம், ஆண் பெண் இருவருக்கும் ஒரே ராசியானால் பொருத்தம் உண்டு. வெவ்வேறு ராசியானால் பொருத்தம் இல்லை.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் முதல் ஆணின் ஹஸ்தம் நட்சச்திரம் வரை எண்ண 9 ஆக வருவதால்  இருவருக்கும் தினப்பொருத்தம்  உண்டு.

2. கணப்பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை மூன்றுவித குண அமைப்பாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் அந்த பிரிவே -1. தேவ கணம், 2. மனுஷ கணம், 3. ராக்ஷஸ கணம் இது தம்பதிகளின் குண அமைப்பின் ஒற்றுமையை காட்டும்.

1. தேவ கணம் என்பது மனித தன்மைகளில் உயர்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.
2. மனுஷ கணம் என்பது மனித தன்மைகளில் உள்ள இயல்பான உயர்ந்த மற்றும் தாழ்ந்த குண அமைப்புகளை கலவையாக பெற்றதென அமையும்.
3. ராக்ஷஸ கணம் - மனித தன்மைகளில் உள்ள குறைபாடான மற்றும் தாழ்ந்த குண அமைப்புகள் சற்று அதிகமாக பெற்றதாக அமையும்.

இவ்வாறு அமைவது பொருந்தும்
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
ராக்ஷஸ கணம்
100%
ஆண்
மனுஷ கணம்
பெண்
மனுஷ கணம்
100%
ஆண்
தேவ கணம்
பெண்
தேவ கணம்
100%
ஆண்
ராக்ஷஸ கணம்
பெண்
மனுஷ கணம்
60%
ஆண்
மனுஷ கணம்
பெண்
தேவ கணம்
80%
ஆண்
தேவ கணம்
பெண்
மனுஷ கணம்
70%

இதில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் தேவ கணம் - ஆணின் ஹஸ்தம் நட்சத்திரம் தேவ கணம் இவ்வாறாக அமைந்தால் கணப்பொருத்தம் உண்டு.

3. மஹேந்திரப் பொருத்தம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 4,7,10,13,16,19, 22, 25 ஆக வந்தால் இப்பொருத்தம் உண்டு, இது தம்பதிகளின் குழந்தைக்காக கூடும் பலம், புத்திர விருத்தி ஆகியவற்றின் மோலோட்டமான பலத்தை காட்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் ஹஸ்தம் நட்சச்திரம் எண்ண 9 ஆக வருவதால் மேற்சொன்னபடி மஹேந்திரப் பொருத்தம் இல்லை.

4. ஸ்திரீ தீர்க்கம் -
பெண்ணின் நட்சச்திரம் முதல் ஆணின் நட்சச்திரம் வரை எண்ணும் பொழுது 7 க்குள் வந்தால் பொருத்தம் இல்லை 7க்கு மேல் வந்தால் மத்திம பொருத்தம், 13க்கு மேல் வந்தால் உத்தம பொருத்தம், இது தம்பதிகளில் பெண்ணின் ஆயுள் விருத்திக்காக பார்க்கபடும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் - ஆணின் ஹஸ்தம் நட்சச்திரம் எண்ண 9 ஆக வருவதால் மேற்சொன்னபடி ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு.

5. யோனிப் பொருத்தம் -
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள 27 நட்சச்திரங்களை தாம்பத்திய உணர்வு ரீதியாகவும், ஆண், பெண் இனக்குறி தன்மை ரீதியாகவும் 14 வகை மிருகங்களாக பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள் இதில் பெண்ணின் நட்சச்திரம், ஆணின் நட்சச்திரம் பகை தன்மை கொண்ட மிருகங்களாக வராமல் இருக்க வேண்டும்.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் மிருகப் பிரிவு பாம்பு ஆகும் - ஆணின் ஹஸ்தம் நட்சச்திரம் மிருகப் பிரிவு எருமை ஆகும் இரண்டும் பகை தன்மை கொண்ட மிருகமாக வராததால் யோனிப் பொருத்தம் உண்டு.

6. இராசிப்பொருத்தம் -
பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 1,7,9,10,11,12 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் உண்டு, பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 2,3,4,5,6,8 ஆகிய இராசிகளாக வந்தால் இராசிப்பொருத்தம் இல்லை. இதனால் தம்பதிகளின் இராசிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆகி ஆண் கன்னி இராசி ஆகுமானால் பெண்ணின் இராசி முதல் ஆணின் இராசி வரை எண்ணும் பொழுது 4 ஆக வரும் எனவே இராசிப்பொருத்தம் இல்லை.

7. இராசி அதிபதி பொருத்தம் -
12 இராசிகளின் 7 அதிபதிகளுக்கிடை உள்ள நட்பு, சமம், பகை என்ற மூன்று வகை உறவுமுறைகளை வைத்து பார்க்க படும் பொருத்தம் இதில் இராசி அதிபதிகள் பகை என்ற உறவு வந்தால் பொருத்தமில்லை. இதனால் தம்பதிகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் இராசி அதிபதிகளுடனான மனோரீதியான ஒற்றுமை அமைப்பை தெரிவிக்கும்.

பெண் மிதுன இராசி ஆண் கன்னி இராசி ஆகுமானால் இருவரின் இராசி அதிபதியும் புதனாகவே வருவதால் இராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8. வசிய பொருத்தம் -
இது தம்பதிகளுக்கிடையே உள்ள அன்னியோன்ய உறவை, இருவருக்கான ஈர்ப்பு ஆகியவற்றை குறிக்கும் பொருத்தம் ஆகும். இப்பொருத்தம் அமைந்தால் இன்னம் சிறப்பாகும் மற்றபடி இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெரிய பாதகம் இல்லை.

மிதுன இராசிக்கு வசிய பொருத்தம் உள்ள இராசிகள் கன்னி.
இதில் பெண் மிதுன இராசி ஆண் கன்னி இராசி ஆகுமானால் இதில் பெண் இராசிக்கு ஆண் இராசி வசியமுள்ள இராசியாக வருவதால் வசிய பொருத்தம் உண்டு.

9. ரஜ்ஜூப் பொருத்தம் -
ரஜ்ஜூப் பொருத்தம் என்றும் மாங்கல்ய பொருத்தம் என்றும் கயிறு பொருத்தம் என பலவாறாக கூறப்படும் இது முக்கிய பொருத்தம் ஆகும், இது தம்பதிகளின் இணைப்பினால் உண்டாகும் ஆயுள் பலத்தை காட்டும் மேலும் வாழ்க்கை சக்கரத்தில் ஒன்றாக பயணிக்கும் பலத்தையும் காட்டும்,

செவ்வாயின் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்கள் சிரசு அதாவது தலை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
இராகுவின் சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரங்களும் சந்திரனின் ரோஹிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் கழுத்து ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சூரியனின் கார்த்திகை, உத்திராடம், உத்திரம் நட்சத்திரங்களும் குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களும் சனியின் அனுஷம், பூசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் தொடை ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.
கேதுவின் அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களும் புதனின் கேட்டை, ரேவதி, ஆயில்யம் நட்சத்திரங்களும் ஆகிய 6 நட்சத்திரங்கள் பாத ரஜ்ஜூவில் ஒரே ரஜ்ஜூவாகும்.

இதில் பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஒரே ரஜ்ஜூவானால் பொருத்தமில்லை வெவ்வேறு ரஜ்ஜூவானால் உத்தமம், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் ஆரோகணம் மற்றொன்று அவரோகணம் ஆக வந்தால் மத்திம ரஜ்ஜூ பொருத்தம் உண்டு என்று சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

திருமணப் பொருத்தத்தில் பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரம் சிரசு (தலை) ரஜ்ஜூ - ஆணின்  ஹஸ்தம் நட்சச்திரம் கழுத்து ரஜ்ஜூ இரண்டும் வெவ்வேறு ரஜ்ஜூவானதால் ரஜ்ஜூப் பொருத்தம் உண்டு.

10. வேதை பொருத்தம் -
வேதை என்றால் இடையூறு, தடை  எனப் பொருள்படும். 27 நட்சச்திரங்களில் குறிப்பிட்ட நட்சத்திரம் மற்றொரு நட்சச்திரத்திற்கு வேதை ஏற்படுத்தும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன, எனவே இவ்வாறு வேதை ஏற்படுத்தும் நட்சச்திரங்கள் பொருத்தமில்லாது போகும்.

ஒன்றுக்கொன்று வேதை அடையும் நட்சத்திரங்கள் :
அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோஹிணி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிஷம் - சித்திரை
மிருகசீரிஷம் - அவிட்டம்
சித்திரை - அவிட்டம்

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சச்திரமும் - ஆணின் ஹஸ்தம் நட்சத்திரமும் இரண்டும் வேதை அடையும் நட்சத்திரங்கள் ஆக வராததால் எனவே வேதை பொருத்தம் உண்டு.

11. நாடிப் பொருத்தம் -
நமது மருத்துவத்தில் உடலின் பஞ்பூத கலப்பு சக்தியை வைத்து மூன்று வகை நாடிகளாக வகைபடுத்துவர் அது வாதம், பித்தம், சிலேத்துமம் இதை சமஸ்கிருதத்தில் பார்சுவநாடி, மத்தியா நாடி, சமான நாடி என்பர் இதில் இந்த வகைபடுத்தலை 27 நட்சச்திரங்களுக்கும் பொருத்தபட்டுள்ளது அவை

பார்சுவநாடி () வாத நாடி - அஸ்வினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி
மத்தியா நாடி () பித்த நாடி - பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.
சமான நாடி () சிலேத்தும நாடி - கார்த்திகை, ரோஹிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி

பெண் நாடியும் ஆண் நாடியும் வெவ்வேறாக நாடியாக இருந்தாலும், பெண் நாடியும் ஆண் நாடியும் சமான நாடி (சிலேத்தும நாடி) இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பித்த நாடி ஆகும் - ஆணின் ஹஸ்தம் நட்சத்திரம் வாத நாடி பெண் நாடியும் ஆண் நாடியும் இரண்டும் வெவ்வேறாக நாடியாக இருப்பதால் நாடிப் பொருத்தம் உண்டு.

12. விருட்ச பொருத்தம் -
விருட்சம் என்றால் மரம் இதில் 27 நட்சச்திரங்களையும் இளகிய பால் மரங்கள் என்ற ஒரு வகையிலும், உறுதிதன்மையான பால் இல்லாதது மரங்கள் மற்றொரு வகையிலும் பிரித்துள்ளனர், பெண்ணின் நட்சச்திரமும் - ஆணின் நட்தச்திரமும் பால் மரமாக இருந்தால் விருட்ச பொருத்தம் உண்டு, பெண் பால் மரமாகவும் ஆண் பால் இல்லாத வகை ஆனால் பொருத்தம் உண்டு, இது ஒரு முக்கிய பொருத்தம் இல்லை என்பது வழக்கு.

பால் இருக்கும் வகை
கார்த்திகை - அத்தி
ரோஹிணி - நாவல்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆல்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
கேட்டை - பிராய்
மூலம் - மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
பூரட்டாதி - தேமா
ரேவதி -இலுப்பை
பால் இல்லாத வகை
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
மிருகசீரிஷம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
உத்திரட்டாதி - வேம்பு
பெண்ணின் மிருகசீரிஷம் நட்சத்திரம் பால் இல்லாத வகை - ஆணின் ஹஸ்தம் நட்சத்திரமும் பால் இருக்கும் வகை எனவே பெண் பால் இல்லாத மரமாகவும் ஆண் பால் இருக்கும் வகை ஆனதால் விருட்ச பொருத்தம் இல்லை.

பெண்ணின் மிருகசீரிஷம் 3, 4 ஆம் பாத நட்சத்திரமும் - ஆணின் ஹஸ்தம் நட்சத்திரமும் திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தில்  9 பொருத்தம் பெற்றுள்ளது அதில் முக்கிய பொருத்தங்கள் உள்ளது எனவே இந்த இரு நட்சத்திரங்களுக்கும் பொருந்த தரம் உத்தமம் (மேன்மையான பொருத்தம் உள்ளது).

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


காதல் ஜாதகம் பகுதி 6 - காதலில் இருவருக்கும் இடையே உடலீர்ப்பு உண்டாக்கும் சில விதிகள்…

காதல் ஜாதகம் - காதலில் இருவருக்கும் இடையே உடலீர்ப்பு உண்டாக்கும் சில விதிகள் பகுதி 6…

ஆண் பெண்ணுக்கு இடையே ஏற்படும் காதலில் உடலீர்ப்பு (கலவி, காமம்) உண்டாக்கும் சில விதிகள் இவை அதாவது இது அடிப்படையாக ஆண் பெண்ணுக்கு இடையே உண்டாகும் ஈர்ப்புக்கும் எடுத்து கொள்ளலாம் இருந்தாலும் நம் நாட்டில் காதல் திருமணத்தை விட பெற்றோரால் நிச்சியிக்க படும் திருமணமே உயர்வாக கருதப்படுவதால் காதலில் இருக்கும் உடலீர்ப்பு பற்றிய ஆய்வை நம்மை விட மேற்கத்திய ஜோதிடம் சற்று அதிகமாக ஆர்வம் காட்டும் இப்போது நான் குறிப்பிடுவதும் ஒரு மேற்கத்திய ஜோதிட நூலில் படித்தது தான் அதில் சுட்டுகாட்ட பட்டுள்ள சிலவற்றை சற்று ஒழுங்குபடுத்தி இங்கே கொடுத்துள்ளேன் -

காதலர் ஒருவருடைய ஜாதகத்தில் இராசி சக்கரத்தில் சுக்கிரன் இருக்கும் இராசியும் தனது துணையாக அவர் நினைக்கும் காதலரின் ஜாதகத்தில் அவரது இராசி சக்கரத்தில் செவ்வாய் இருக்கும் இராசியும் ஒன்றாகவே இருக்குமானால் இவர்களுக்கிடையே  உணர்ச்சிவசமான உடலீர்ப்பு உண்டாக்கும் இவர்களுக்கிடையே எளிதில் செல்ல கோபம் அடைந்தாலும் அல்லது எதிர்பாரா மனப் பாங்குகளை அப்போதைக்கு அவர்களுக்கிடையே கொண்டிருந்தாலும் சிறிது தூண்டலிலேயே தனது கோபம் மற்றும் மனதை மாற்றி உடல் உணர்வு ஈர்ப்பில் கலந்து விடுவார்களாம்.

காதலர் ஒருவருடைய ஜாதகத்தில் இராசி சக்கரத்தில் சுக்கிரன் இருக்கும் இராசியும் தனது துணையாக அவர் நினைக்கும் காதலரின் ஜாதகத்தில் அவரது இராசி சக்கரத்தில் லக்னம் நின்ற இராசியும் ஒன்றாகவே இருக்குமானால் இவர்கள் புதிய கற்பனா உணர்ச்சி மற்றும் உடலீர்ப்பு செயல்பாடுகள் காட்டி ஒருவருக்கொருவர் மகிழ்வளிக்கும் செயலில் முனைப்பு காட்டகூடியவர்களாக இருப்பார்கள்.

காதலர் ஒருவருடைய ஜாதகத்தில் இராசி சக்கரத்தில் சுக்கிரன் இருக்கும் இராசியும் தனது துணையாக அவர் நினைக்கும் காதலரின் ஜாதகத்தில் அவரது இராசி சக்கரத்தில் சந்திரன் அல்லது லக்னம் (சூரியன்) நின்ற இராசியும் ஒன்றாகவே இருக்குமானால் இவர்கள் உடலீர்ப்பு செயல்பாடுகள் மட்டுமில்லாமல் பரஸ்பர நலன்களையும் குறித்தும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள்.

காதலர் ஒருவருடைய ஜாதகத்தில் இராசி சக்கரத்தில் செவ்வாய் இருக்கும் இராசியும் தனது துணையாக அவர் நினைக்கும் காதலரின் ஜாதகத்தில் அவரது இராசி சக்கரத்தில் சந்திரன் நின்ற இராசியும் ஒன்றாகவே இருக்குமானால் இவர்கள் உடலீர்ப்பு செயல்பாடுகளில் அளவுக்கு மீறி ஆர்வம் காட்டுவார்கள் அதாவது அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துகள் உண்டு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

சிம்ம இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று…

சிம்ம இராசி பற்றி ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் கூற்று

இந்து ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடத்தின் முக்கிய அடிப்படை கட்டுமானங்களை உண்டாக்கிய நூல்களில் முக்கியமான நூல்களில் ஒன்று இந்த ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ர நூல். வேதவியாசரின் தந்தையான பராசர மகரிஷியால் இந்த நூல் உருவாக்கபட்டது. இப்படிபட்ட பெருமை கொண்ட இந்த நூலில் வரும் 12 இராசிகளுக்கான விளக்கங்களின் சுலோகங்களில் ஒவ்வொரு இராசிக்கான பொருளாக இங்கே தொடர்ந்து தரபட்டு வருகிறது அதில் இந்த முறை -

இந்த சிம்ம இராசி காடுகளுக்கு காரகத்துவமும்
இது பகலில் வலிமையாகி கிழக்கு திசையை சார்ந்த இராசி
இது நான்கு கால்கள் கொண்ட இராசி
இது பருமனான மற்றும் பிரகாசமான தேகத்தை சுட்டிகாட்டும் இராசி
இது சாத்வீக குண இராசி மற்றும் இராஜாங்கத்தை பிரதிநிதித்துவ படுத்தும் இராசி
இந்த இராசி தனது தலையிலிருந்து உயரும் இராசி
இது சூரியனை ஆட்சியாளராக கொண்ட இராசி

Powered by Blogger