ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 14...
ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 14...
ஜீவபோத சுத்தி என்றால் உயிரின் உண்மை நிலையை விசாரணையின் மூலம் சுத்தம் செய்து உணர்தல் என்று பொருள், ஒவ்வொரு உயிரானதும் தனது உண்மை நிலையை உணர்வதன் மூலம் ஆன்மீக பக்குவம் அடையும் அப்படி ஆன்மீக பக்குவம் அடைந்தால் வாழ்வில் விடை தெரியாத பல்வேறு துன்பங்களும் இலையுதிர் கால மரத்தின் இலைகளை போல் கழண்டு விழும், இது ஒரு சிலருக்கு பயன்தரலாம் அதனால் ஜோதிடம் மட்டும் விரும்பம் உள்ளவர்கள் அதை எப்போது போல படித்து வரலாம் இது நேரடியாக ஜோதிடத்தை சுட்டிக்காட்டாது ஆனால் ஜோதிடத்தின் அடிப்படை ஆன்ம தத்துவத்தில் தான் உள்ளது.
(14)
யார் வலியை உணர்வார், யார் நோயை உணர்வார்
யார்! நான்
என்றால், ஏன் தூக்கத்தில் உணரவில்லை
யாரும் தூக்கத்திலும், மயக்கத்திலும் எங்கே சேர்கிறார்
சார் உள்ளத்துள்ளே சிவமே அது! சிவமே அது!
Who feel the ache? And Who feel the disease?
Who! If I am, Why doesn't realize by sleep?
Anyone where to join when they sleep and swoon
Blend within the heart It Sivam! It Sivam!
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
பாடலின் விளக்கம் -
யார் உடலின் வலியை உணர்பவராக இருக்கிறார். யார்
உடலின் நோயை உணர்பவராக இருக்கிறார். அவ்வாறு அவைகளை
உணர்வது நான் என்றால் ஏன் தூக்கத்தின் போது அந்த வலி மற்றும் நோயை அந்த நானால் உணர
முடிவதில்லை. எவரும் தூக்கத்தின் போதும் மற்றும் மூர்ச்சை அடைதலின் போதும் எங்கே செல்கிறார் அல்லது சேர்கிறார். உடலியக்கமும்
மற்றும் உயிரியக்கமும் உள்ள போதும் ஒருவரால் அவரின் அறிவு என்று கருதி
கொண்டிருக்கும் அவரின் அறிவியக்கத்தை நிர்வகிக்க முடியவில்லை எனில் அப்படி உள்ள
அறிவியக்கத்தின் மூலத்தை ஒவ்வொருவரும் அவர் அவரது உள்ளத்தின் உள்ளே சார்ந்து
பார்த்து உணர வேண்டும் அது சிவமே அது சிவமே என்று.
சிவன் என்பதும் சிவம் என்பதும் ஒரு கடவுளை குறிக்கும்
பெயர்ச்சொல் மட்டும் அல்ல சிவம் என்றால் எப்போதும் எங்கும் வேண்டுதல் வேண்டாமை
இன்றி உள்ள ஆளுமை என்று பொருள் இதற்கு சமஸ்கிருதத்தில் ஈஸ்வரன் என்று சொல்லப்படும்
ईश्वर Izvara என்றால் Supreme Being , Supreme ruling என்று பொருள்.
Heart என்பது
பொதுவாக உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பை குறிப்பதாக இருப்பது ஆனால் ஆன்மீகத்தில்
இருதயம் என்பது ஆத்மாவின் மையம், அதை தமிழ் உள்ளம்
என்று பொருள் கொள்ளலாம், உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று திருமூலர்
விளக்கி இருப்பார், அந்த உள்ளத்தின் உள்ளே இறைவன் எப்போதும்
தோன்றாதே எழுந்தருளி உள்ளான்.
0 Response to "ஆன்மீகம் - ஜீவபோத சுத்தி (Refining of Ziva botham) பகுதி 14..."
கருத்துரையிடுக