ராகுல் பஜாஜ் (Rahul Bajaj) ஜாதகம் கணிப்பு - தொழிலதிபருக்கான உயர்வுகள்..

ராகுல் பஜாஜ் (Rahul Bajaj) ஜாதகம் கணிப்பு -

ராகுல் பஜாஜ் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். இவர் தனது தந்தை ஜம்னாலால் பஜாஜ் ஆல் 1945ல் தொடங்கிய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இளம் வயதில் பஜாஜ் குழுமத்தில் 1965 ல் மிக முக்கிய தலைமை பொறுப்பிற்கு வந்து சேர்ந்தார் அவரது தலைமையின் கீழ் பஜாஜ் ஆட்டோ சில வருடங்கள் கழித்து புதிய உயரங்களை தொட்டு வளர்ந்து வந்தது அதாவது பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் Rs.72 லட்சமாக இருந்த விற்றுமுதலை Rs.4600 கோடி விற்றுமுதலாக உயர்ந்தி காட்டினார். இவரின் ஜாதகத்தில் உள்ள தொழிலதிபருக்கான சிறப்பு யோகங்களை சிறிய அளவில் பார்ப்போம்.

ராகுல் பஜாஜ் (Rahul Bajaj) ஜாதகம்


இவரின் ஜாதக சிறப்புகளை பார்ப்பதற்கு முன் இந்தியாவில் சில பாரம்பரிய மக்கள் பிரிவால் மட்டுமே பெரிய தொழிலதிபராக முடியும் என்ற மனப்பான்மை நிலவுகிறது. அப்படியல்ல ஒழுக்கம், பொறுமை, ஒற்றுமை, புதுப்பித்தல்,  தலைமைத்திறன், முதலீட்டு அறிவு, விற்பனை அறிவு, தைரியம் போன்ற தொழிலுக்கான சிறப்பு பண்புகளுடன் காலமும் யோகமும் கூடிவர இந்தியாவின் எந்த ஒரு சாதாரண குடிமக்களும் கூட சிறந்த பெரிய தொழிலதிபர் ஆகலாம். அதற்கு உதாரணமாக எத்தனையோ வாய்ப்புகள் காட்டப்படாமல் விடப்பட்ட தமிழர்கள் எத்தனையோ பேர்கள் வெளிநாட்டில் அந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் தரப்பட்டு காலமும் யோகமும் கூடிவந்து உயர்ந்து வெளிநாட்டிலேயே சிறந்த தொழிலதிபர்கள் ஆகிவுள்ளார்கள் எனவே இனி வரும் காலங்களில் நல்ல வளமான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளான சூழலை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி தருவதாலும், இளைஞர்கள் தம்மில் உள்ள சாதி மத வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டு இணைந்து செயல்பட்டாலும் சிறந்த தொழிலதிபர்களை உருவாக்கலாம்.



மேலும் தான் ஒருவனே தொழில் நிறுவனத்தை தலைமை பொறுப்பில் ஆள்வேன் மற்றும் எனது சொந்தங்களே முக்கிய பொறுப்புகளில் இருப்பார்கள் போன்ற பழைமையான தொழில் மரபுகளை மாற்றி, திறமைக்கு தக்க இடத்தை உழைப்பவர்களுக்கு தந்து அவர்களையும் உயர் பொறுப்புகளில் கொண்டு வரும் அமெரிக்க ஜப்பான் சீனாவில் நிலவுகிற தொழில் மரபுகளை இங்கு கொண்டு வரவேண்டும். உலகில் 8 கோடிக்கி மேல் தமிழ் மக்கள் தொகை இருக்கிறார்கள் என்று சொல்லுவது பெருமை அல்ல எத்தனை சிறந்த தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், கலை மற்றும் கல்வி அறிஞர்கள் உலக அளவில் தன்னை மேம்படுத்தி உள்ளார்கள் என்பதே பெருமை. அதற்கு ஒழுக்கம், ஒற்றுமை, காலத்திற்கு தக்கவாறு மரபுகளை புதுப்பித்தல், திறன்களை வளர்த்தல் போன்ற பண்புகள் வளர வேண்டும்.



இனி ராகுல் பஜாஜ் அவர்களின் ஜாதக சிறப்புகளை பார்ப்போம் சுயதொழில் நடத்தும் தனது தந்தையே ஒரு சிறந்த தொழில் முனைவாராக இருந்து வழிகாட்டினார் இவரின் ஜாதகத்தில் தந்தை ஸ்தானத்திற்கும் மற்றும் கர்ம தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதிகள் ஒரு கிரகமே அது சனி பகவான் அந்த சனி பகவான் 11க்குடைய லாப ஸ்தானத்தில் அமர்ந்து 10க்குடைய சனியாகவே இருந்து அந்த தந்தை ஸ்தானத்தின் அதிபதி இவரின் ஜென்ம லக்னத்தை 3ஆம் பார்வையாக பார்பதுவும்  லாப ஸ்தானாதிபதி 10ல் அமர்ந்து குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள லக்னாதிபதியை 5ஆம் பார்வையாக பார்ப்பதும் சேர்ந்து அமைந்ததால் மேலும் 5க்குடைய பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்தில் இருந்து அவரையும் தந்தை மற்றும் தொழில் ஸ்தானத்தின் அதிபதி சனி 3ஆம் பார்வையாக பார்வை செய்வதால், மேலும் நவாம்சத்தில் இருவரும் ஆட்சி அம்சம் போனதாலும் தனது தந்தையால் தொடங்கபட்ட நிறுவனத்தில் இவரின் தொழில் வாழ்க்கை மேம்பட்ட ரீதியாக ஆரம்பமானது.



அதற்கு முன் இவரின் ஜாதகத்தில் 4,5 க்குடைய சூரியன், புதன் சேர்ந்து அமைந்து சனியாலும் பார்க்கபட்டு மேலும் 4,5 ஸ்தானத்தை  சனி, குரு, செவ்வாய் பார்வை இருப்பதால் பொருளாதாரம், சட்டத்துறையில் பட்டம் பெற்றார் பின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் M.B.A. முடித்தார். இளவயதில் படித்த படிப்பு குடும்பத்தின் தொழில் துறைக்கும் மேலும் அவரின் தொழிலதிபர் ஆகும் கனவுக்கும் சிறந்த இணைப்பு பாலமாக தொடங்கியது.



சரி முக்கிய விஷயத்திற்கு வருவோம் ஆம் பெரிய தொழிலதிபர் யோகம் பெற இதற்கு 2ஆம், 5, ஆம், 8ஆம், 11 ஆம் ஸ்தானங்களுக்கு இடையே ஒன்றுக்கொன்று பலமான சுப தொடர்பாக இருக்க வேண்டும்,  அத்துடன் லக்னம் மற்றும் 10 ஆம் ஸ்தானத்திடமும் சுப பலமான தொடர்புகள் 2,5,8,11 ஸ்தானத்துடன் இருக்க வேண்டும். இவரின் ஜாதகத்தில் -



> 2 ஆம் அதிபதி 5 ஆம் அதிபதியான புதன் லக்னாதிபதியான சுக்கிரனுடன் சிறப்பாக சொல்லப்படும் பரிவர்த்தனை யோகம் ஏற்பட்டுள்ளது.

> 8 ஆம் அதிபதி 11 ஆம் அதிபதியான குரு பகவான் 10ல் அமர்ந்து சிறப்பாக சொல்லப்படும் பரிவர்த்தனை யோகத்தை சனி பகவானுடன் ஏற்பட்டுள்ளது.

> சுப பார்வை பலம் கொண்ட குரு பகவான் பணபர ஸ்தானமான 8 ஆம் அதிபதி 11 ஆம் அதிபதியாகி லக்னாதிபதியான சுக்கிரனை பார்வை செய்துள்ளது.

> 10, 11 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை மற்றும் இந்த ஜென்ம லக்னத்திற்கு யோகாதிபதிகளான 1,2 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை வலுவடைந்து அமர்ந்துள்ளது.

> 5 ஆம் ஸ்தானத்தை 9,10க்குடைய சனி பகவான் 7 ஆம் பார்வையாக பார்ப்பது.



இப்படியாக 1,2,5,8,10,11 ஆகிய ஸ்தானங்கள் இராசி கட்டத்தில் வலுவாக பிணைந்திருந்தாலும் இது மட்டும் பத்தாது, இவருக்கு பரிவர்த்தனை யோகம் எப்படி மேம்பட்டதாக அமைதுள்ளதோ அது போல இராசி கட்டத்தில் எந்த ஒரு கிரகமும் ஆட்சி உச்சம் அடையாத போதும் நவாம்சத்தில் இராசி கட்டத்தின் 1,8,10,11 ஆகிய ஸ்தானங்களின் அதிபதிகள் வலுவடைந்துள்ளனர் அதாவது நிறைவாக லக்னாதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் ஆட்சி அம்சம். 9,10 ஆம் ஸ்தானாதிபதி சனி நவாம்சத்தில் ஆட்சி அம்சம். 8,11 ஆம் ஸ்தானாதிபதி குரு பகவானும் நவாம்சத்தில் ஆட்சி அம்சம். இராசி கட்டத்தில் வாகன ஸ்தானமான 4 ஆம் ஸ்தானாதிபதி சூரியனும் நவாம்சத்தில் ஆட்சி அம்சம். வரிசையாக நான்கு கிரகங்கள் நவாம்சத்தில் ஆட்சி அம்சத்தை அடைந்துள்ளன.



9,10 க்குடையவர்கள் ஒரே அதிபதியாக இருந்து அந்த கிரகம் 11க்குடையனுடன் பரிவர்த்தனை பெற்று அமைந்திருப்பதும் ஒரு வகையில் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும் இந்த யோகம் தான் செய்யும் செயல்களுக்கு நல்ல லாப பலன் கிடைக்கும், சிறந்த தொழில் மதிப்பு, மரியாதையை பெறும் மேலும் சிறந்த நிர்வாகத்திறன், சிறப்பாக திட்டமிடும் ஆற்றல் தரும்.



தொழிலதிபரின் ஜாதகத்தில் 10ஆம் தொழில் ஸ்தானாபதியான சனி வலுவடையாமல் இருக்குமா ஆம் இவருக்கு அம்ஸ கட்டம், பஞ்சாம்சம், சஷ்டாம்சம், சப்தாம்சம், திரிம்சாம்சம் ஆக தசவர்க்கங்களில் ஐந்து வர்க்கங்களில் சனி பகவான் ஆட்சி பெற்று அமைந்துள்ளது.


மேலும் 11 ஆம் ஸ்தானம் 39 பரல்களும் அம்சங்கள் கூட்டி மொத்த ஸ்தான பலன்களில் பார்த்தால் வரிசையாக 9ஆம் ஸ்தானம்,10ஆம் ஸ்தானம்,11 ஆம் ஸ்தானம் என உயர்வான பரல்களை கொண்டுள்ளது. இதை சற்று எடுத்துகாட்டும் விதமாக நவாம்சத்தில் லக்னாதிபதி 10க்குடையவன் ஆன குரு பகவான் 10ல் 9க்குடைய செவ்வாயுடன் சேர்ந்து ஆட்சி அம்சம், அடுத்து 11க்குடைய சனி 11ல் ஆட்சி அம்சம். சனி திசையில் 33 வயது வரை இருந்தது இதில் நிறுவனத்தில் தலைமை பெறுப்பை ஏற்றார். புதன் திசையில் 50 வயது வயது வரை இருந்தது இதில் தான் 1000 கோடிகளுக்கு மேல் விற்றுமுதலை உயர்த்தினார். கேதுவிற்கு பிறகு வந்த சுக்கிரன் திசையில் பத்ம பூஷன், முன்னாள் மாணவர் சாதனையாளர் விருது (ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல்), திலக் விருது இன்னும் பல தேசிய மற்றும் சர்வதேச கவுர விருதுகளை பெற்றார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ராகுல் பஜாஜ் (Rahul Bajaj) ஜாதகம் கணிப்பு - தொழிலதிபருக்கான உயர்வுகள்.."

கருத்துரையிடுக

Powered by Blogger