பொங்கல் சிறப்பு பதிவு - சூரியனுக்கும் நன்றி சொல்லுவோம்…
பொங்கல் சிறப்பு பதிவு - சூரியனுக்கும்
நன்றி சொல்லுவோம்…
சூரியன் வடக்கு நோக்கி பயணிக்க தொடங்கும் மகர இராசியில் பிரவேசிக்கும்
திருநாளை அறுவடைத்திருநாளாக மகரத்திருநாளாக தமிழர்கள் காலங்காலமாக இயற்கைக்கும்
மற்றும் வேளாண்மைக்கு இன்றி அமையாத தேவராக விளங்கும் சூரியனுக்கும் நன்றி சொல்வதை
கடமையாக கருதி வேளாண் பெருமக்கள் மற்றும் அந்த வேளாண் பொருட்களை சார்ந்த தொழிலில்
செய்பவர்களும் சூரியனுக்கும் நன்றி சொல்ல எடுக்கும் விழாவாக இந்த பொங்கல் விழா
அமைந்துள்ளது.
சூரியன் வெறும் ஒரு சடப்பொருளால் ஆன வெறும் ஒரு எரியும் விண்மீன் தானே
அதற்கு நன்றி சொன்னால் தெரியவா போகிறது என்று பலரும் கருதலாம் ஏன் நானும் இளமையில்
அப்படி தான் கருதினேன், ஒரு முறை
ஒரு ஆன்மீக பெரியவர் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் எதை நம்பியிருக்கிறது
தெரியுமா என்று கேட்டார் நான் நீர் என்றேன் அவர் இல்லை சூரியனே என்றார் ஏனென்றால்
நீர் கெட்டியாக மிக உறைந்த நிலையில்
இருந்தாலும் உயிர்கள் தளைத்து வளராது சூரியனின் வெப்பத்தால் தான் நீர் சமநிலையில்
இயங்குகிறது மற்றும் மழை, கடல், பருவகாலங்கள், தாவரங்கள் என அனைத்தும் சூரியனை சார்ந்து தான் ஓர் ஒழுக்க அமைவாக
இயங்குகிறது அதை சார்ந்து தான் நம் வேளாண்மை மற்றும் உணவு அதனால் நமது உணவு உயிர்
வாழ்க்கை. இப்படி அனைத்து
உயிர்களும் சூரியனால் உருவாகி சூரியனால் வாழ்ந்து சூரியனையே நம்பியிருக்க உயிர்களை
உருவாக்கிய சூரியனுக்கு இறைத்தன்மை இல்லையென்று சொல்லுவதும் சூரியன் வெறும் ஒரு
சடப்பொருள் என்று சொல்லுவதும் நமது அறியாமை அல்லது அதில் நமக்கு தெரியாத விஷயங்கள்
இருக்கின்றது என அர்த்தம் என்றார்.
இப்படிபட்ட சூரியனே விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் தேவன் அவரே அவர்களுக்கு
வறட்சியை காட்டி தண்டிக்கும் தேவனும் கூட அவரை ஒரு பங்காக கொண்டே விவசாய தொழில்
நடைபெறுகிறது அப்படிபட்ட சூரியனுக்கு 12 வகையான அம்சமும் வடிவங்களும் அதற்கு குணங்களும் உண்டு அந்த 12 வகையான வடிவங்களை பார்ப்போம் -
1) முதல் அம்சம் மற்றும் வடிவம் = தலைமை தாங்கும் தேவன்.
2) இரண்டாம் அம்சம் மற்றும் வடிவம் = உயிர் உருவாக காரியமான தேவன்.
3) மூன்றாம் அம்சம் மற்றும் வடிவம் = மேகங்களை உருவாக்கும் தேவன்.
4) நான்காம் அம்சம் மற்றும் வடிவம் = திடப்பொருள்களை உருவாக்கும் தேவன்.
5) ஐந்தாம் அம்சம் மற்றும் வடிவம் = உணவுப்பொருள்களை உருவாக்கும் தேவன்.
6) ஆறாம் அம்சம் மற்றும் வடிவம் = தியாகங்களின் பலிகளின் தலைவனான தேவன்.
7) ஏழாம் அம்சம் மற்றும் வடிவம் = செல்வத்திற்கும் தர்மத்திற்க்கும் உதவும் தேவன்.
8) எட்டாம் அம்சம் மற்றும் வடிவம் = ஒடுக்கும் மற்றும் வறட்சிக்கு காரண செயல் தேவன்.
9) ஒன்பதாம் அம்சம் மற்றும் வடிவம் = எதிரிகளை அழிக்கும் தேவன்.
10) பத்தாம் அம்சம் மற்றும் வடிவம் = உடல்நலத்தை காக்கும் தேவன்.
11) பதினொன்றாம் அம்சம் மற்றும் வடிவம் = நீரை நிலைக்க செய்து உலகத்தை உயிர்ப்பிக்கும்
தேவன்.
12) பனிரெண்டாம் அம்சம் மற்றும் வடிவம் = சமூகநலம் மற்றும் நட்பை காக்கும் தேவன்.
இப்படி 12 வகையான அம்சம்
மற்றும் வடிவங்களாக இருந்து நாம் வாழ ஆதி ஆத்திய நாயகனாக சமஸ்கிருதத்தில் சூரியனை "உலகின் கண்",
"வானத்தின் அணிகலன்" என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறது. தமிழில் இளங்கோவடிகள் மங்கல வாழ்த்து என்று "ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு
போற்றுதும்!-" என்று வாழ்த்தி
உள்ளார். இப்படி சூரியனை வாழ்த்தும்
பொங்கல் திருவிழாவை அனைவரும் கொண்டாடி மகிழுங்கள்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "பொங்கல் சிறப்பு பதிவு - சூரியனுக்கும் நன்றி சொல்லுவோம்…"
கருத்துரையிடுக