மேஷம் & தனுசு, மேஷம் vs தனுசு - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…
மேஷம் & தனுசு, மேஷம் vs தனுசு - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…
ஜோதிடத்திற்கு
என்று வலைபதிவு தொடங்கி காலத்தில் இருந்து நான் ஜோதிடத்தை பற்றிய கல்வி குறைவாக
உள்ளவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில்
ஒரு குறிபிட்ட அளவு தெரிந்தவர்களுக்கும் சரி, ஜோதிடத்தில் ஆழமாகவோ அல்லது முக்கிய குறிப்புகளை மட்டும் வாசிக்க
விரும்புபவர்களுக்கும் சரி என அனைவருக்குமாகவே எழுதிக்கொண்டு வருகிறேன், சில ஆய்வு ஜோதிட கட்டுரைகள் ஜோதிடத்தை ஒரு
குறிபிட்ட அளவு தெரிந்தவர்கள் மட்டும் அதாவது குறைவான பேர்கள் வாசித்தாலும் அதை
எழுதுவதையும் விடாமல் அதே நேரத்தில் அதிகமான பேர்கள் வாசிக்கிறார்கள் என்பதற்க்காக
பொதுவான ஜோதிட விஷயங்களை மட்டும்
எழுதிக்கொண்டு இருக்காமல் என்னால் முடிந்த அளவு அனைத்து விஷயங்களும் வருவிதமாக
வலைதளத்தை கொண்டு சென்று உள்ளேன் அது தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இப்போது நாம்
பார்க்க உள்ள தொடர்
பாரம்பரிய திருமணம் என்ற உடன்
தான் பொருத்தம் என்ற விஷயங்கள் வரும் ஆனால் மனம் ஒத்த காதலர்கள் அல்லது காதலாக பழகி கொண்டிருப்பவர்கள், வெவ்வெறு பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி மற்றும்
ஒரே பாலினத்தில் நட்பாக பழகி வரும் நண்பர்கள் ஆனாலும் சரி இந்த நட்பு, காதல் 12 இராசிக்கு இடையே ஏற்படும் போது அது எவ்வாறு
அமையும் அதன் பலம் பலவீனம் என்ன என்று விளக்குவதே இந்த தொடர் பதிவு ஆகும்.
உதாரணமாக
ஒருவர் மேஷம்
இராசியாக இருந்து அவரின் நண்பரோ அல்லது காதலரோ தனுசு இராசியாக இருந்தால்
அவர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு, காதல்
பலம் பலவீனம் என்ன என்று பார்க்க உள்ளோம்.
மேஷம் & தனுசு, மேஷம் vs தனுசு -
இந்த மேஷ தனுசு ராசிக்காரர்களுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது இரண்டு
திரிகோண ஸ்தான ராசிகளின் இணைப்பாகும் இது அடிப்படையில் நன்மையானது. இவர்கள் ஒரு சக்திமிக்க உறவாக இருக்க வாய்ப்பு அதிகம், நன்மையான வகையில் இந்த கூட்டு அமைந்திருந்தால் நட்போ அல்லது காதலோ இருவரும் புதிய புதிய தேடல்கள் உள்ளவர்கள் மற்றும்
முன்னோடிகள், எப்போதும் துணிவு அருள் அறிவு அன்பு
ஆகியவற்றின் கலவையாக இரு நண்பர்கள் அல்லது காதலர்கள் திகழ்ந்து வருவார்கள். சாகச விரும்பிகள். அவர்கள் இருவருக்கும் யாரும்
சொல்லித்தரக்கூட தேவையில்லை அவர்களே அனுபவத்தால் கற்றுக்கொள்ளவும் தங்களை சரி
செய்து கொள்ளவும் ஆற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள். மேஷம் துணிவும் அவசரம் காட்டும் ராசி தனுசு ராசியோ வெளிப்படையாக எல்லாவற்றையும் பார்க்க முனையும் ராசி இந்த
இரண்டும் சேர நல்ல நண்பர்கள் உருவாக
வாய்ப்பாகும்.
இருவரும் நம்பிக்கையுடனும் மற்றும் உற்சாகத்துடனும் விஷயங்களை காணக்கூடியவர்கள். இந்த இரு ராசிகளுக்கும் சிக்கல்கள் குறைவாகதான் வரும் சில சமயங்களில் மேஷ
இராசிகாரர் எதிர் தனுசு இராசியின் சுதந்திரத்தில் மேஷ தலையிட்டு ஆளுமைபடுத்த
நினைத்தால் பிரச்சினைகள் வரலாம். மேலும் மேஷம்
இராசிக்காரர் மகிழ்ச்சியாக இருக்க கூடியவர்கள் அதே சமயம் அதிக உணர்திறன் உடையவர்
எனவே தனுசு சில சமயம் முன் யோசிக்காமல் அப்பட்டமாக பேசும் தன்மை கொண்டவர்கள் அதனாலும் சிக்கல்கள் வரலாம், இவ்வாறாக இருந்த போதிலும் திரிகோண ஸ்தான ராசிகளின் இணைப்பாக இருப்பதால்
அதாவது சரியான ஆலோசனை தரும் தனுசு நண்பரையை மேஷ இராசிகாரர் விட்டுக்கொடுக்க
மாட்டார் அதே போல தனுசு இராசிகாரரை சரியாக பாதுகாத்து, நம்பிக்கை மற்றும் தைரியம் தரும் மேஷ இராசிகாரரை தனுசு நண்பரும்
விட்டுக்கொடுக்க மாட்டார் அதனால் இவர்கள் இரு நண்பர்கள்
ஆனாலும் காதலர்கள் ஆனாலும் ஒருவரை ஒருவர் எளிதாக மன்னிக்கவும் மற்றும் எளிதாக மறக்கவும் செய்வார்கள் அதனால் இவர்கள் உறவு பிணைப்பு மிக்க உறவாக இருக்கும் இருவருக்கும் வாதங்கள் ஏற்பட்டாலும் விரைவில் தீரும்.இரு ஜாதகங்கள் பெரிதாக பாதிப்பு இல்லாவிடில் நன்மையே.
மேஷம் இராசிநாதன் செவ்வாய் மற்றும் தனுசு இராசிநாதன் குரு ஆகும் இந்த இரு ராசிக்கும் இடையே நட்பு வயப்படும் போது செவ்வாய் துணிவான ஆண் கிரகம் ஆகவும்
குரு பண்புள்ள ஆண் கிரகம் ஆகவும் நடந்து கொள்ளும் உறவாக
இருக்க வாய்ப்பு அதிகம், காதல்வயப்படும் போது ஒருவரை ஒருவர்
பேணக்கூடியவராக தேவையான அன்பும் காமம் உள்ளவர்களாக நடந்து கொள்ள வாய்ப்பு அதிகம். பக்கவபடாத குருவுக்கு வித்தியா கர்வம் ஏற்படுவது இயற்கை அதனால் பக்கவபடாத
தனுசுக்கு அறிவுத்திமிர் ஏற்பட வாய்ப்பு உண்டு அது மேஷத்தின் கோபத்தை தூண்டும்
ஆபத்தான ஆயுதமாகும். இதனை மேஷத்திற்கு புதிய யோசனை மற்றும் முயற்சிகள் வரும் போதெல்லாம் தனுசு அதை கேலி செய்யாமல் அந்த நண்பர் இணைந்து அதில் உள்ள நல்லது
கெட்டதுகளை ஆர்வமாக திறந்த மனதுடன் ஆராய
வேண்டும்.
மேஷம் மற்றும் தனுசு இருவரும் நெருப்பு ராசிகளாக இருக்கின்றன எனவே முடிவற்ற வளங்கள் உடையவர்களாக
இருப்பார்கள், நண்பர்கள் மிதமான லட்சிய வேட்க்கை மற்றும் மிதமான
அகந்தையுடன் இருப்பார்கள், காரியங்களுக்காக உரத்த யோசனைகள் விவாதங்கள் செய்யக்கூடியவர்கள், ஒருவருக்கு ஒருவர் அதிக கேள்வி கேட்க தெளிவு ஏற்பட நினைக்க
கூடியவர்கள். காதலர்களை கிடையே மேஷம் சீக்கிரமாக அடுத்த
அடுத்த விஷயங்களுக்கு தாவக்கூடியது அதே போல தனுசு சீக்கிரமாக மன்னித்து மறந்து
அடுத்த அடுத்த விஷயங்களுக்கு போகக்கூடியவர் இதனால் இவர்களுக்கு கிடையே ஏற்படும்
பிரச்சினைகள் வெகுநேரம் நீடிக்காது அது நல்லது.
மேஷம் ஒரு சர இராசியாகும் மற்றும் மிதுனம் ஒரு உபய இராசியாகும் அதனால் மேஷம் புதிய கருத்துக்களுக்கு ஊக்கம் அளிக்கும் ராசி மற்றும் தனுசு அதற்கு ஏற்ற நீண்ட திட்டங்களை உள்ளடக்கிய யோசனைகள் தரும் ராசி. இதனால்
இருவரும் அங்கீகாரத்திற்காக போராடு பண்பு கொண்ட
ராசிகள் இவைகள் நட்பை மேலும் பிணைக்கும். இதனால் வரும்
புகழையும் மகிழ்ச்சியை சமமாக பகிர்ந்து கொள்ளும் வரை பிரச்சினைகள் வராது. இருவரும் விஷயங்களை தொடங்குவதில் நன்றாக இருப்பார்கள் ஆனால் தனுசு பின்னணியில் இருந்து நிகழ்வுகளை கட்டுப்படுத்தவும் மேஷம் முன்னணியில் இருந்து நிகழ்வுகளை நடத்தி காட்டவும் செய்யும் இந்த பண்புகளில் இந்த வழிகளில் இவர்கள் சரியாக
பயணிக்கும் வரை தொந்தரவுகள் ஒன்றும் வராது.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "மேஷம் & தனுசு, மேஷம் vs தனுசு - இராசிக்குள் ஏற்படும் நட்பு, காதல், மோதல் விளைவுகள்…"
கருத்துரையிடுக