Identifying characteristics of Mars - செவ்வாயின் தன்மைகளை அடையாளம் காணல்...

Identifying characteristics of Mars - செவ்வாயின் தன்மைகளை அடையாளம் காணல்...

செவ்வாய் பெயர் வரக் காரணம் தமிழை பொருத்த அளவில் செவ்வாப்பு (செவ்) என்றால் சிவப்பு மருவிய சொல்லாகும் உதாரணமாக தமிழ் மொழியில் செவ்வரளி பூ, செவ்வாழை பழம், செவ்வல்லி தாமரை என பல பெயர்கள் உண்டு இதற்கு இன்னொரு வேர்ச்சொல்லும் உண்டு அது செம் என்றால் சிவப்பு, செம்மை என்றெல்லாம் பொருள் உண்டு, ஆய் என்றால் ஆனது, உரு என்றெல்லாம் பொருள் உண்டு இதை சேர்த்தால்

செவ் + ஆய் = செவ்வாய் (இது ஒரு சிவப்பு கிரகம்)
செம் + மான் = செம்மான் (செம்மையான நேர்மையான மானுடன்)

சமஸ்கிருதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அங்காரகா, மங்களா, அவிநிஜா, குஜா, லோகிதா என்றெல்லாம் சொற்கள் உண்டு இதில் அவிநிஜா என்றால் பூமி புத்திரன் அர்த்தம், அங்காரகா என்றால் கரிகளுக்கு அதிபதி என்று அர்த்தம், லோகிதா என்றால் உலோகங்களுக்கு (அடிப்படை) அதிபதி என்று அர்த்தம், மங்களா என்றால் எதுவும் மங்கலகரமானதாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாய் அமைந்த என்று அர்த்தம்,

செவ்வாயின் அதிதேவதையாக காட்டபட்டுள்ளவர் முருகன் சிறந்த அழகானவர், உடல் உறுதியானவர், தீய சக்திகளுக்கு எதிராக போர் புரிந்து வென்ற மாவீரன், சிவனின் நெற்றி அக்னியில் இருந்து பிறந்த பிள்ளை முருகன் என்பதால் ஞானத்திலும் பக்தியிலும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளவர் இவரே செவ்வாயின் கடவுள், சிவனின் வியர்வையில் பிறந்தவர் செவ்வாய் என்று ஒரு புராணமும், செவ்வாய் சிவனின் ரத்தத்திலிருந்து பிறந்தான் அக்குழந்தையை பூமாதேவி வளர்த்தாள் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.

மேலே சொன்னவைகள் எல்லாம் செவ்வாயின் காரகத்துவத்தை காண உதவியாக உள்ளது இன்னும் நிறைய உண்டு இருந்தாலும் அடிப்படையாக இவைகள் அமைகின்றன, மேலும் செவ்வாயின் காரகத்துவங்களாக உள்ளன சகோதர காரகன், தைரிய காரகன், காமக்காரகன் (பெண்களுக்கு), துணிவு, சேனாதிபதி, வீரம், வலிமை, காவல், நிலம், இரத்தம், செயலாற்றல், ஆண் கிரகம், விபத்து, ரத்தப்போக்கு, ரணம், செம்பு, பித்தம், வன்முறை, பவளம் கல், கோபம், இலட்சியம், மனக்கிளர்ச்சி, எரிமலை வெடிப்புகள், பாலுறவு ஆற்றல், தடகள விளையாட்டு, இயற்பியல் (Physical science).

செவ்வாயின் நட்சத்திர காரகங்கள் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகும், செவ்வாயுடன் நட்புப் பெறும் கிரகங்கள் சூரியன், சந்திரன், வியாழன், செவ்வாயுடன் பகைப் பெறும் கிரகங்கள் புதன், இராகு, கேது. செவ்வாயுடன் சமனான நிலை கொண்ட கிரகங்கள் சனி, சுக்கிரன். செவ்வாய் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு ஒன்றரை மாதங்கள். செவ்வாயின் திசா புத்திக் காலம் ஏழு ஆண்டுகள். செவ்வாய் ஆட்சி பெறும் இராசி மேஷம், விருச்சிகம். செவ்வாய் நீசம் பெறும் இராசி கடகம். செவ்வாய் உச்சம் பெறும் இராசி மகரம். செவ்வாய் மூலதிரி கோண இராசி மேஷம்.

12 லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் செவ்வாயின் ஆட்சி, உச்ச, நீச ஸ்தானங்கள் பின்வருமாறு -

மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1,8 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 10 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7,12 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 3 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 6, 11 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  5,10 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 1 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4, 9 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3, 8 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2, 7 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 10 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1, 6 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 3 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5,12 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4,11 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 1 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3,10 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2,9 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் செவ்வாய் நீசம் அடைவார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "Identifying characteristics of Mars - செவ்வாயின் தன்மைகளை அடையாளம் காணல்..."

கருத்துரையிடுக

Powered by Blogger