வாழ்க்கை துணை (மனைவி\ கணவன்) வரும் திசையை அறியும் வழிகள்….
வாழ்க்கை துணை (மனைவி\ கணவன்) வரும் திசையை அறியும் வழிகள்….
ஒவ்வொரு இளம் ஆண்\ பெண்
க்கும் தனக்கு வரும் மனைவி\ கணவன்
எந்த திசையில் இருந்து வரும் என்று அறிய ஆவலாக இருப்பார்கள் மேலும் மணமகன் \ மணமகள் தேடும் பெற்றோர்க்கும் இந்த திசையை
தெரிந்த கொள்ள விளைவார்கள், இதனால்
பல ஜோதிட நூல்களும் அதற்கு தீர்வு தரும் வகையில் திசைகளின் படி அதை அறிய வழிகாட்டி
உள்ளன ஆனால் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் இது ஒரு பழங்கால கணிதம் ஆகும்
அதனால் நவீனமான அதிகமாக மாற்றம் கண்டுள்ள விஷயங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது
அதற்குதக்க போல் அனுபவ அறிவை பயன்படுத்தி நவீன படுத்தி கொள்ளவேண்டும்,
உதாரணமாக எவ்வளவு விஷயங்கள் மாறினாலும் மனிதன் நீர் குடித்தால் தான் தாகம்
தீரும் இது போல் மாறாத விஷயங்களும் உண்டு எதற்கு சொல்கிறேன் என்றால்
நகரமயமாக்களின் காரணமாக அதிகமான மக்கள் தங்கள் சொந்த கிராமங்களிலிருந்து முதல்
தலைமுறை அல்லது இரண்டாம் தலைமுறையாக மாறி நகரங்களில் குடியேறிவிட்டனர் அதனால்
பிறந்த ஊரின் அடிப்படையில் சொல்லபட்ட இந்த கணிதம் நடைமுறையில் அதிகம் மாற்றம்
கண்டுவிட்டது, இருந்தாலும்
பலதலைமுறையாக ஒரு நகரில் வாழ்பவர்களுக்கு இது பொருந்தி வரும்.
நவகிரகங்களுக்கு உரிய திசைகள் -
கோள்கள்
|
திசை
|
ஆங்கிலம்
|
சூரியனுக்குரிய திசை
|
கிழக்கு
|
East
|
சந்திரனுக்குரிய திசை
|
தென்கிழக்கு
|
Southeast
|
அங்காரகனுக்குரிய திசை
|
தெற்கு
|
Southern
|
புதனுக்குரிய திசை
|
வடக்கு
|
Northern
|
வியாழனுக்குரிய திசை
|
வடகிழக்கு
|
Northeast
|
சுக்கிரனுக்குரிய திசை
|
கிழக்கு
|
East
|
சனிக்குரிய திசை
|
மேற்கு
|
West
|
ராகுவிற்க்குரிய திசை
|
தென்மேற்கு
|
Southwest
|
கேதுவிற்க்குரிய திசை
|
வடமேற்கு
|
Northwest
|
12 இராசிகளுக்கும் உரிய
திசைகள் -
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய
ராசிகளின் திசை
|
கிழக்கு
|
East
|
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய
ராசிகளின் திசை
|
தெற்கு
|
South
|
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய
ராசிகளின் திசை
|
மேற்கு
|
West
|
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய
ராசிகளின் திசை
|
வடக்கு
|
North
|
ஒருவரின் (ஆண்\பெண்) ஜாதகத்தில் ஏழாம் வீடு களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது திருமண
வாழ்க்கை, வாழ்க்கை துணையின் நிலையை
காட்டும் ஸ்தானம் ஆகும், இந்த ஏழாம்
வீடு அந்த ஸ்தானாதிபதி மற்றும் அதில் உள்ள கிரகங்கள், ஏழாம் ஸ்தானாதிபதி இருக்கும் இராசி இதன் அடிப்படையில் எந்த இராசி மற்றும்
எந்த கிரகம் பலம் பெறுகிறதோ அதன் காரகத்துக்குரிய திசையில் வாழ்க்கை துணை (மனைவி\ கணவன்) அமையும், இங்கு நான்காம் ஸ்தானமும் முக்கியத்துவம் பெறும் அதன் பலமும் ஜாதகத்தில்
முக்கிய பங்களிப்பு செய்யும்.
12 இராசிகளின்
அடிப்படையில் -
ஒருவருக்கு ஜாகத்தில் வலிமை அடையும் ஏழாம் வீடானது மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசியானால் வாழ்க்கை துணை
(மனைவி\ கணவன்) கிழக்கு திசை நோக்கி வரும்.
ஒருவருக்கு ஜாகத்தில் வலிமை அடையும் ஏழாம் வீடானது ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசியானால் வாழ்க்கை துணை
(மனைவி\ கணவன்) தெற்கு திசை நோக்கி வரும்.
ஒருவருக்கு ஜாகத்தில் வலிமை அடையும் ஏழாம் வீடானது மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசியானால் வாழ்க்கை துணை
(மனைவி\ கணவன்) மேற்கு திசை நோக்கி வரும்.
ஒருவருக்கு ஜாகத்தில் வலிமை அடையும் ஏழாம் வீடானது கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசியானால் வாழ்க்கை துணை (மனைவி\ கணவன்) வடக்கு திசை நோக்கி வரும்.
- ஜோதிஷ் சிவதத்துவ
சிவம்
0 Response to "வாழ்க்கை துணை (மனைவி\ கணவன்) வரும் திசையை அறியும் வழிகள்…."
கருத்துரையிடுக