ஜோதிடமும் அரசியலும் - 12 ஸ்தானங்களும் அது காட்டும் அரசியல் துறைகளும் பகுதி 3…

ஜோதிடமும் அரசியலும் - 12 ஸ்தானங்களும் அது காட்டும் அரசியல் துறைகளும் பகுதி 3…
ஒவ்வொரு நாட்டின் நிர்வாகம் மற்றும் அந்த நாட்டின் தலைமை பொறுப்புகளில் உள்ளவர்களின் 12 ஸ்தானங்களின் மூலம் அவர்கள் ஆளும் முறை ஒரு நாட்டின் வளங்கள் அதை கையாளும் ஆட்சியாளர்களின் நடைமுறைகள் இவை மிக மிக முக்கியமானது அதை அறிந்த கொள்ள உதவும் அதற்க்கான 12 ஸ்தானங்களின் காரகத்துவங்களை இங்கே கொடுத்துள்ளேன் இது ஜோதிடத்தில் அதிகமாக காணப்பாடாத புதிய விஷயங்கள் மேலும் தலைமை ஆட்சியாளர்கள் மற்றும் ஒரு தனி மனிதரின் ஜாதகத்தில் அரசியல் அரசாங்கத்தில் அவரின் பலம் எந்த எந்த துறைகள் அவருக்கு வசதியாக இருக்கும் போன்ற விஷயங்களை காண்பதற்கும் பயன்படக்கூடிய முக்கிய காரகத்துவங்கள் இந்த 12 ஸ்தானங்களின் காரகத்துவங்கள்



எளிமையான உதாரணமாக சொல்வதானால் ஒருவரின் ஜாதகத்தில் 10 ஆம் ஸ்தானத்தில் சூரியன் இருந்து அவர் மிக வலிமையாகவும் அமைந்து அரசியல் அரசாங்க தொடர்பான இராசி, நட்சத்திர பலத்தையும் பெற்றால் அரசு நிர்வாகத்தில் உயர் நிலைமை அடைவார் அல்லது அரசு சார்பான உயர் பொறுப்புகளில் அமர வைக்கப்படுவார்.

இன்னும் ஒன்று சொல்வதானால் ஒருவரின் ஜாதகத்தில் 4 ஆம் ஸ்தானத்தில் சந்திரன், குரு, புதன் போன்ற கல்வி கிரகங்கள்  மிக வலிமையாகவும் அமைந்து இருந்தால் பார்த்தால் அவர் கல்வித்துறை, உயர்கல்வித்துறை, வீட்டுவசதி துறை ஆகியவற்றில் உயர் நிலைமை அடைவார் அல்லது அரசு சார்ந்த கல்வித்துறைகளில் பொறுப்புகளில் அமர வைக்கப்படுவார்.

இன்னும் சிலருக்கு ஸ்தானங்களும் கிரகங்களும் வலிமையாக இருக்கும் ஆனால் பாப கிரகங்களின் தொடர்பும் பலமாக இருக்கும் அவர்கள் குறுக்கு வழிகளில் அரசு அரசியல் அரசாங்க நிர்வாகத்திற்குள் நுழைய முயற்சிப்பார்கள் யோகம் அனுமதித்தால் அதுவும் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. லஞ்சம், சாதி, உறவு, போலி சான்றிதழ் என எத்தனையோ ஓட்டைகள் நிறைந்த பாதைகள் நம் அரசியல் சூழலில் உள்ளன இதை சரியென்றோ தவறு என்றோ சொல்லுவது எனது நோக்கமல்ல என்னை பொருத்தவரை சரியோ தவறோ எதானாலும் காலம் அனுமதித்தால் தான் அவர்களால் செய்ய முடியும் அதே போல அதற்க்கான நல்ல தீய விளைவும் வந்தே தீரும். ஆக இந்த 12 ஸ்தானங்களின் காரகத்துவங்கள் அதன் ஸ்தானாதிபதிகளின் இருப்பு அவற்றின் பலம் பலவீனங்கள் அடிப்படையாகும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


0 Response to "ஜோதிடமும் அரசியலும் - 12 ஸ்தானங்களும் அது காட்டும் அரசியல் துறைகளும் பகுதி 3…"

கருத்துரையிடுக

Powered by Blogger