2016 வருட அக்னி நட்சத்திரம் கத்திர வெயில் காலங்கள்…
ஜோதிட சாஸ்திரத்தை நம்பாத மக்கள் கூட வாயில் பல ஜோதிட சொற்களில்
பயன்படுத்துவார்கள் அப்படி ஒன்றுதான் இந்த அக்னி நட்சத்திரம் காலம் ஆகும், நம் முன்னோர்களின் அரிய கண்டிபிடிப்புகளை பயன்படுத்திக் கொண்டே இது
எல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்லி கடந்து போவார்கள் சிலர் சரி இருக்கட்டும் நன்றி
உணர்வென்பது அவர் அவர்களின் குணத்தை ஒத்தது அல்லவா, சரி இப்போது
இந்த வருட அக்னி நட்சத்திரம் கத்திர வெயில் காலங்களை பார்ப்போம் ஜோதிட
சாஸ்திரத்தில் கார்த்திகை நட்சத்திரத்திற்கு அக்னி நட்சத்திரம் என்று ஒரு பெயர்
உண்டு இந்த கார்த்திகை (அக்னி) நட்சத்திரத்தை அக்னி
கிரகமான சூரியன் பயணிக்கும் காலம் கத்திர வெயில் காலம் ஆகும், அந்த அக்னி கிரகமான சூரியன் பரணி நட்சத்திரம் 3 ஆம் பாதம் தொடங்கி ரோஹிணி நட்சத்திரம் 1 ஆம் பாதம் முடிய பயணிக்கும் காலம் அக்னி நட்சத்திர காலம் ஆகும்,
இது
இந்திய நாட்டிற்கும் பூமத்திய ரேகை ஒட்டிய பல நாடுகளுக்கும் மட்டும் பொருந்தும்
கணிதம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
2016 வருட
அக்னி நட்சத்திர காலம் : - 04-05-2016 முதல் 28-05-2016 வரை உள்ளது.
2016 வருட
கத்திர வெயில் காலம் : - 11-05-2016 முதல் 24-05-2016 வரை உள்ளது.
தனிபட்ட
முறையில் இந்த வெயினால் அதிகமாக உடல்சூடு அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கபட்டவர்கள்
சூரியனின் அதிதேவன் ஆன சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு இளநீர், பன்னீர் வழங்கினால் ஒருவரின் தனிபட்ட
பாதிப்புகள் குறைய இறைவன் அருள் புரிவார்.
- ஜோதிஷ் சிவதத்துவ
சிவம்
0 Response to "2016 வருட அக்னி நட்சத்திரம் கத்திர வெயில் காலங்கள்…"
கருத்துரையிடுக